Feed on
Posts
Comments

Category Archive for 'வாழ்க்கை'

சுற்றிலும் கொட்டிக் கிடக்கின்றன வார்த்தைகள். சில அருகிலும் சில தொலைவிலும். பெரும்பாலும் அவ்வார்த்தைகள் சலனமற்றும் சக்தியற்றுமே கிடக்கின்றன. ஒன்றைச் சொல்ல வந்தவை அந்த ஒன்றைச் சொல்ல முடியாமல் சுற்றிச் சுற்றிக் கும்மியடித்துவிட்டுப் பின்னும் சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமற் செத்துப் போவதைச் சில சமயம் வேதனையுடன் பார்க்கிறேன். சிலசமயம் பெருவேகத்துடன் வந்து சூட்டுப்புண் உண்டாக்குவதைத் தவிர வேறு எதையும் சாதிக்காத வார்த்தைகள் நிகழ்கணத்தில் உயிரின்றி அள்ள முடியாமற் சும்மா கிடக்கின்றன. ஒன்றோடு ஒன்று மோதிக் குற்றுயிராய்ச் சில […]

Read Full Post »

விட்டுப் போக மனமின்றி இன்னும் இழுத்துக் கொண்டு கிடக்கிறது குளிர்காலம். பச்சைப் பசேலென்று உயிர்த்தெழுகின்ற புல்வெளிகளைத் தொடர்ந்து குச்சிமரங்களில் துளிர்க்கவிருக்கும் இலைகளுக்கு முன்னர் இன்னும் ஒருமுறை பெய்து பார்க்கிறது வெண்பணி. இயற்கைச் சக்திகளுள்ளும் நடக்கின்றன இழுபறிகள். கனக்குளிராடை துறந்து மென்குளிராடை போர்த்தி இரண்டே நாட்களில் மீண்டும் கனத்தாடை தேட வைத்தாலும், அணையும் முன் சிறக்கும் மெழுகொளி போன்றது தான் இது. போய்விடும் இதோ குளிர்காலம் என்று பொறுத்திருக்கிறேன் பொதிவாக. இதந்தரும் வசந்தமே வருக.

Read Full Post »

நீண்டு வளர்ந்த கதையின் முடிவிற்குச் சுருக்கமாய் வருவோமெனில் மறுலேசிக் சிகிச்சை நன்முறையிலேயே முடிந்தது. இன்று எனக்குக் கண்ணாடி உள்ளாடி வெளியாடி எதுவும் அவசியமில்லை. ஒருவார அவகாசத்தில் மறுமுறை செய்யவேண்டியிருந்ததில் தனிச்சிறப்பான கவனிப்புத் தேவை என்பதால் என்னைக் காத்திருக்க வைத்துக் கடைசியில் பெரியமருத்துவர் தானே வந்து செய்துவிட்டார். விடுமுறை முடிந்து அமெரிக்காவிற்கு மீள இன்னும் இரண்டு வாரங்களே இருந்தன. இல்லாவிட்டால் சற்றுப் பொறுத்துக் கூடச் செய்திருக்கலாம். “உங்களுக்கு வயது என்ன?” என்று அவர் மீண்டும் ஒருமுறை கேட்டபோது “ஏன்?” […]

Read Full Post »

வட்டமாகச் சுற்றிய சும்மாட்டைத் தலை மீது வைத்துக் கீரையும் காயும் கூடையில் சுமந்து விற்கும் பெண்ணொருவரின் “கீரை அரைக்கீரை வெண்டக்கீரை” என்னும் அதிகாலை ராகம் தெளிவாகக் காதில் விழுந்த போது கண்விழித்துத் தான் இருந்தேன். இருந்தும் நெடுநேரமாய் எழுந்து கொள்ளத்தான் மனமின்றிப் படுத்திருந்தேன். ஒரு புலனில் குறையெனில் அதனை ஈடுகட்டும் வண்ணம் மற்ற புலன்கள் அதிகக் கூராகிவிடுமென்று எண்ணியிருக்கிறேன். அதனால் தான் பச்சை வண்ணக் கோழிமுட்டை வடிவக் காப்புக் கட்டியிருந்த என் கண்களுக்குப் பதிலாக, இப்போது காதுகள் […]

Read Full Post »

மருத்துவர்கள் மற்றும் செவிலிகளின் பழக்கம் ஒன்று பற்றி எனக்குக் கேள்வியுண்டு. தீவிரமான ஒரு மருத்துவச் செய்முறையாக இருக்கும் போதும் அதனூடே வெற்று அரட்டை அடிப்பது போல் பேசிக் கொள்வதைச் சிலசமயம் அவதானித்திருக்கிறேன். என் மகளொருத்தி பிறந்த போதும் மனைவிக்கு மயக்க ஊசி போட வந்த சிறப்புச்செவிலி, தான் கடைவீதி சென்றது பற்றியும், வாங்கிய பொருட்கள் பற்றியும் பேசிக் கொண்டே வேலை செய்தார். பதைபதைப்போடு உள்ளே இருப்பவருக்கு இது ஒரு அலட்சிய மனப்பாங்கு போலத் தோன்றாதா? எதனால் இப்படிச் […]

Read Full Post »

« Prev - Next »