என் அம்மாவிடமும் அப்பாவிடமும் இருக்கிறது. அப்பச்சியிடமும் அம்மாயியிடமும் இருந்தது. நான் சிறுவனாய் இருந்த போதே இறந்து போன அப்பத்தாவிடமும், தான் சிறுவனாய் இருந்த போது இறந்து போன தன் தந்தை, என் தாத்தனிடமும் கூட இருந்திருக்கும், யார் கண்டது? குடும்ப வரலாற்றில் அதற்கு முன்னர் வேர் பிடித்துச் சென்று பார்க்கத் தரவுகள் இல்லை. வழி வழியாய் என் மூதாதையருக்குக் கிடைத்த தலைமுறைச் சீதனம் – அது எனக்கும் கிடைத்திருக்கக் கூடிய அலுக்கம் ஓரிரு முறை இருந்த போதும் […]
Category Archive for 'வாழ்க்கை'
வெஜினி அங்க்கிள் -நிவேதிதா (தமிழில்: செல்வராஜ்) முன்ன ஒரு காலத்தில ஒரு குட்டிபூதம் இருந்துச்சாம். அது எப்பப் பாத்தாலும் காய்கறில்லாம் சாப்பிட மாட்டேன்னு அடம் புடிச்சுட்டே இருக்குமாம். அவுங்கம்மா அதுக்கிட்ட, “சாப்பிடுரா செல்லம். காய்கறில்லாம் உன் உடம்புக்கு ரொம்ப நல்லது” ன்னு சொன்னாங்களாம். அறிவுக்குறும்பு பண்றதுக்கு ரொம்பப் புடிச்ச குட்டிபூதம் ஒரு ‘ஜீபூம்பா’ போட்டுத் தன்னயே மொத்தமா காய்கறிகளா மாத்திக்கிச்சாம். “ஆமாம்மா! காய்கறில்லாம் என் உடம்புக்கு நல்லாத் தான் இருக்கு” 🙂 🙂 ஒரு குட்டிபூதம் (ஜீனி) […]
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வாசம் உண்டு. அது, வாழுகின்ற மண்ணின் வாசமா, கண்ணிற்படுகிற காட்சிகளின் தொகுப்பா, காட்சிமாந்தர் எழுப்பும் ஒலிக்கோவையா, நாவூறக்கிட்டும் தனிப்பட்ட சுவையா, அல்லது இவையெல்லாம் கலந்த ஏதோ ஒரு உணர்வா? திருநெல்வேலியின் பாளையங்கோட்டையாக இருந்தாலும் சரி, ஈரோடு, கோபிச்செட்டிபாளையம் என்று நகரம் பேரூர் சிற்றூர் கிராமம் எதுவானாலும் சரி, சிறு பொழுதேனும் தன்நிலை மறந்து திளைக்க வைக்கிற வாசம் எல்லா ஊருக்கும் உண்டு. குடிக்கிற தண்ணீருக்கு அலைந்தவனாகவோ கொளுத்துகிற வெய்யலின் சூடு தாங்காமல் வாளிநீரினுள் […]
வேனில் முடியும் கூட்டக் குறிப்புகள்
Posted in வாழ்க்கை on Aug 19th, 2006
கூறு கூறாய் வெட்டி வைத்திருந்த சாக்லெட்-ஜுக்கினி-கேக்கை முன்வைத்துக் கூட்டம் ஆரம்பித்தது. கலந்து கொண்டது என்னவோ நான்கு பேர் தான். சிறு கையை மேலே தூக்கிப் பெரியவர், “நான் இந்தக் கூட்டம் தொடங்கியது என்று அறிவிக்கிறேன்” என்று ஒரு பூரிப்போடு தொடங்கி வைத்தார். அதற்குள் ஆளுக்கு மூன்று துண்டு கேக் உள்ளே போயிருந்தது. இது மாதிரி கேக் சாப்பிடக் காப்பியும் வேண்டுமே என்று என்றுமில்லாத திருநாளாய் அரைக் கோப்பைக் காப்பியும் கையுமாக நானும் உட்கார்ந்திருந்தேன். பெரிதாய் ஒன்றுமில்லை. வேனிற்கால […]
அது ஒரு வேனிற்காலத்து வசந்த விழா
Posted in வாழ்க்கை on Jun 3rd, 2006
“இப்பவே என்ன அவசரம். இப்பத்தான படிச்சு முடிச்சுருக்கேன். ஒரு வருசமாவது ஆகட்…”, என்றவனை இடைமறித்து, “இதோ, இது தான் பொண்ணு” என்றொரு படத்தைக் காட்டினார்கள் வீட்டில். முனைவர் பட்டப் படிப்பு முடிந்து அலுவத்தில் சேரும் முன் மூன்று வார விடுப்பில் வீட்டில் இருந்தேன். படத்தில் பச்சை வண்ணச் சேலை கட்டித் தீர்க்கமாய் என்னைப் பார்த்த அந்தப் பெண்ணைப் பார்த்தவுடனே என் பேச்சு பாதியிலேயே அறுந்தது. “நாளைக்குப் பொண்ணு பாக்க அவங்க வீட்டுக்குப் போறோம்” “ம்”, என்றேன் பலவீனமாக. […]