“அப்பா, எனக்கு மூணு வரம் கெடச்சா நான் என்ன கேப்பேன்னு உங்களுக்குத் தெரியுமா?”, சிறு நடையாய்க் கடையொன்றுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புகையில் ஒரு கதையொன்றைச் சொல்லிமுடித்த என்னிடம் நிவேதிதா கேட்டாள். “என்ன கேப்பே? சொல்லுமா” * * * * இன்றைய என் கதை அப்படியொன்றும் சுவாரசியமாய் இருக்கவில்லை. மனம் வடிவானவள் வாடியிருந்த நாளொன்றில் கண்ணிலே இரண்டு சொட்டுவிட்டு அழுத கணம் நினைவில் வந்தது. ‘நீங்க இப்போ கதையெல்லாம் சொல்லுரதேயில்ல’ என்ற குற்றச்சாட்டு ‘என் கதையையும் விரும்பிக் […]
Category Archive for 'வாழ்க்கை'
“அப்பா…”, குரல் கேட்டுத் திரும்பினேன். “திடீர்னு ஒருநாள் நான் செத்துப் போயிட்டா, என்னோட பொருள்லாம் என்னப்பா பண்ணுவீங்க?”, எப்போதும் போன்ற சாதாரண நாளொன்றின் மாலைப்பொழுதில் நிவேதிதாவிடம் இருந்து வந்த கேள்வி கேட்டுத் துணுக்குற்றுப் போனேன். “என்னம்மா, என்ன சொல்றே?” “சும்மா ஒரு பேச்சுக்குப்பா. ஒரு உதாரணத்துக்கு நம்ம கார் ஒரு மரத்து மேல மோதி விபத்து நடந்துடுச்சுனா… அதுல நான் செத்துப் போயிட்டா, என் கிட்ட இருக்குற பொருள் எல்லாம் என்ன பண்ணுவீங்க?” மரணத்தை இவர்களிடம் இருந்து […]
வள்ளி தேவசேனா சமேதனாகிய ஸ்ரீ சுப்பிரமணியனுக்குப் பல மூலைகளில் இருந்தும் மணியடித்துக் கொண்டிருந்தார்கள். மின்கலம் பொருத்திய முரசொன்று மூலையில் டம்ட டம்ட டம் கொட்டிக் கொண்டிருந்தது. அமெரிக்கத் தலைநகரத் தமிழர் கூட்டம் சிறிதாகப் புத்தாண்டை வரவேற்கப் பட்டோடும் பிறவோடும் குழுமியிருந்தது. மணியொலியும் முரசொலியும் நாசிகளில் ஏறிய நறுமணமும் ஒருபுறம் புற அறிவைச் சீண்டிக்கொண்டிருக்க, அவற்றினூடாக ஒரு அமைதியை நாடி மனம் மிதந்து கொண்டிருந்தது. தங்க விசிறியும் சாமரமும் வீச, அலங்கரிக்கப்பட்ட முருகக் கடவுள் இன்று பிறமொழி மந்திரத்தோடு […]
புதூர் புகுதல் காதை
Posted in வாழ்க்கை on Feb 15th, 2007
“இனிமேல் இந்த ஊர்ப்பக்கமா திரும்பி வரவேண்டியது இல்லை இல்லே?” காரோட்டிக் கொண்டிருந்த மனைவியின் பக்கமாகத் திரும்பிக் கேட்டேன். அன்றொரு நாள் விடியற்காலையில் கிளம்பிய கிழக்கு நோக்கிய பயணத்தில் கண்ணளவில் இருந்த கதிரோன் அப்போது இன்னும் மேல்நோக்கிச் சென்றிருந்தான். பதில் கிட்டும் முன் நேர்திரும்பிக் கொண்டேன். விரையும் சாலையை அவசரமாக விழுங்கிக் கொண்டு கார் சென்றுகொண்டிருந்தது. பலமுறை இந்தச் சாலையில் முன்னும் பின்னுமாய்ப் பயணித்திருந்தாலும், இது திரும்புதல் இல்லாவொரு ஒருவழிப் பயணம். “ம்ம்” என்றோ, வேறு எதுவோ பதிலாய் […]
பொருள் தேடி வேற்றூர் சென்ற தலைவன் கார்காலம் கழித்து வருவதாய்ச் சொன்னானே, இன்னும் வரவில்லையே என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருந்த தமிழ்ப்பெண்ணைத் தலைவியாய் வைத்துப் பாடிய சங்கப் பாடல்கள் ஆயிரங்காலத்துக்கும் முன்புண்டு தமிழ் மரபில். இன்னும் ஏன் அவன் வரவில்லை, வரும் வழியில் அவனை ஏதேனும் கொடிய மிருகம் கொன்றிருக்குமோ, காட்டில் தொலைந்தானோ, மேகத்துள் மறைந்த கதிரவனால் இரவு என்று நினைத்திருப்பானோ, வேறு பெண்ணைச் சந்தித்திருப்பானோ, இன்னும் ஏதேதோ கற்பனைகள் அவளை வாட்டும். தோழியரும் செவிலித் தாயாரும் […]