“ஆவாரையச் சாப்பிட்டாச் சாவாரையா” ன்னு யாரோ சொன்னாங்கன்னு அம்மா சொன்னாங்க. தொலைபேசியில பேசுறப்போ இந்த வாரம் பொங்கலு வருதுன்னு அதுபத்தி ரெண்டு பழம பேசிக்கிட்டோம். “ஆவாரம்பூ, தல, பொடியெல்லாம் ஒடம்புக்கு ரொம்ப நல்லதாம்”. மொதல்ல இந்த வருசம் பொங்கல் நாளான்னிக்கு (சனவரி 14) வருதுன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். எப்பவும் அப்படித்தானே வரும்? பேசறப்போ, என்னமோ ஒரு இதுல மறந்துபோயி அது நாளைக்குன்னு நெனச்சுக்கிட்டு (இந்தியாவுல இன்னிக்கு), “இன்னிக்கு உங்களுக்குப் பொங்கலு!?”ன்னு பாதிக் கேள்வியும் பாதிச் செய்தியுமாச் சொல்லி வச்சேன். […]
Category Archive for 'வாழ்க்கை'
காலையில் பார்த்த அந்த மீன்குட்டி என்ன காரணத்தாலோ என் நினைவில் இன்னும் நீந்திக் கொண்டிருக்கிறது. வண்ண வண்ணக் கண்ணாடிக் குண்டுகள் கீழாக நிரப்பப்பட்ட ஒரு அழகான வளைந்த குவளையில் செந்நிறத்து மீன்குட்டி சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. பாருங்கள்… தவறு செய்கிறேன். மீனின் சிறுசு குட்டியன்று, மீன்குஞ்சு என்று மாற்றிப் போட்டுக் கொள்ளுங்கள். உண்மையைச் சொல்லப் போனால் அது குட்டியா பெருசா என்று தெரியவில்லை. செந்நிறத்து மீன் என்று மட்டும் இப்போது வைத்துக் கொள்ளலாம். அமைதியாகத் தன்பாட்டுக்குச் […]
பழனிமலைச் சரவணனை நான் கடைசியாகப் பார்த்தது பம்பாயில் தான் என்று நினைக்கிறேன். அது பம்பாய் இல்லையப்பா, ‘மும்பை’ என்போரிடம் நான் போயிருந்த நாளிலே உங்கள் மும்பை பம்பாயாகத் தான் இருந்தது என்று சொல்லிக் கொள்கிறேன். மற்றபடி, ஆங்கிலேயப்படுத்தப்பட்ட உள்ளூர்ப் பெயர்களை மீட்டெடுக்கும் முயற்சிக்கு என்னிடம் ஏதும் ஆட்சேபம் இல்லை. ஆதரவே உண்டு. நிற்க. பம்பாயோ மும்பையோ அதற்கும் நான் இங்கு சொல்லப் போவதற்கும் சம்பந்தம் இல்லை என்பதையும் சொல்லிக் கொள்ள வேண்டும். ஆனால் சரவணனுக்குச் சிறு சம்பந்தம் […]
ஓட்டக்காரன் குறிப்புகள்
Posted in வாழ்க்கை on Aug 26th, 2007
நில்லாது ஓடுகின்ற வாழ்விலே சொல்லாத சொற்களும் செய்யாத செயல்களும் ‘உள்’ளிற்குள் தேங்கிப் போகின்ற பேச்சுக்களும் கனத்துப் போய்ச் சில சமயம் ஆளை அழுத்தும். ஆழ்நீரினிலிருந்து மிதவையாய் மிதவையாய் மேலெழும்பிக் காட்டும். வீரியமற்று வார்த்தைப் பொங்கல்கள் வழிந்துகிடக்கும். தயங்கிச் சொல்லாத வார்த்தைகள் ஒருபுறம் எனில், தயங்காது சொல்லப்பட்ட வார்த்தைகள் மறுபுறம் வாள்சுழற்றும். சொன்னவையும் சொல்லாதவையும் சமராடுகையில் இடைப்பட்ட ஒருவன் செய்யவேண்டியது சோர்வுதறி நிதானமாய் இருப்பதே. ஒரு சுவருக்குள் ஒதுங்கித் தன்னைக் காத்துக் கொள்வோம் என்பது எளிய வழியாய்த் தோற்றங்காட்டினாலும் […]
1. எட்டுத்தொடர் பத்தியொன்று எழுதவாருமென்று வாரமிரண்டின் முன்னழைத்தார் நண்பர் மணியன். வாரமொரு பதிவும்கூட எழுதும் ஒழுங்கில்லாக் காரணத்தால் உடனடியாகச் செவிமடுத்து எழுதமுடியவில்லை. ‘எட்டு அறவட்டுத் (random) தகவல்கள்’ என்பது பெரும்பாலும் ‘எட்டு சாதனைகள்’ என்றாகிப் போன பல பதிவுகளைப் பார்த்தபோது, நாமென்ன எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இடையில் அருணா ஸ்ரீனிவாசனின் அழைப்பும் வந்து சேர்ந்தது. அண்மைக்காலங்களில் தொடராட்டங்களில் பெரிதாய் நாட்டங்காட்டிச் சென்றிருக்கவில்லை என்றாலும் இந்த எட்டிற்காக அறவட்டாய்ச் சிலவற்றை எழுதலாம் எனத் தோன்றியது. முதலில், பல […]