பூச்சிகள் பற்றிய பாடம் அக்குவேறு ஆணிவேறாக இரண்டாம் வகுப்பில் எதற்குச் சொல்லித் தரப்படவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. படம் வரைந்து பாகங்களைக் குறிப்பதும், வகுப்பறையில் வளர்க்கும் பூச்சிகளும், அவை பற்றி எழுதப்படும் புனைகதைகளும், பூச்சிகளுக்கும் அரக்னாய்டு எனப்படும் சிலந்தி, பூரான் வகையறாவிற்குமான வித்தியாசங்களும் நிச்சயமாய் எனக்குத் தேவையில்லை. ஆனால், இரண்டாம் வகுப்பில் படிப்பது நானல்ல. மகள். எதையேனும் கற்றுக் கொள்ளத் திரியும் வயது போல. சொல்வதை எல்லாம் கேட்டுக் கொள்கிறார்கள். இவற்றைத் தெரிந்து என்ன செய்யப்போகிறார்கள்? பூச்சிகளுக்கு […]
Category Archive for 'வாழ்க்கை'
‘வந்துருங்க’ன்னாங்க கொஞ்சம் பேரு. இன்னும் கொஞ்சப் பேரு ‘இனிமே எங்க வரப்போறீங்க’ன்னாங்க. ‘அந்தக் காலத்துல நாம கிராமத்துல இருந்து நகரத்துக்குப் பக்கமா வந்தோமில்ல. திரும்பிப் போனோமா? அப்புடித் தான். என்ன? இவுங்க இருக்கறது கொஞ்சம் தூரமா இருக்குது. அவ்வளவு தான்…’ அப்படீன்னாரு ஒருத்தரு. எப்பவும் போல எல்லாத்துக்கும் ‘பாக்கலாங்க’ன்னு பதில் சொல்லி வச்சேன். ரெண்டு ரெண்டரை வருசத்துக்கு முன்னாடி பாத்த ஊரு பெருசா மாறி இருக்காதுன்னு நெனச்சா ஆச்சரியந் தான் மிஞ்சும் போங்க. எங்க போனாலும் சதுரடிக் […]
எண்ண உருவகங்களும் அன்பே சிவமும்
Posted in திரைப்படம், வாழ்க்கை on Jun 22nd, 2008
‘டிரேடர் ஜோ’வில் இருந்து ரெண்டேகால் டாலருக்கு வாங்கிய ‘பஞ்சாபிச் சோலே’வும், வேறு கடையொன்றின் ‘நேச்சுர் வேளி’ ‘டொர்ட்டியா’வில் ரெண்டும் நுண்ணலை அடுப்பில் சூடுபடுத்திக் கொண்டு தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னமர்ந்து ‘நெட்பிலிக்சில்’ இருந்து வந்திருந்த ‘அன்பே சிவம்’ படத்தைப் போட்டுக் கொண்டு ஆற அமர்ந்திருந்தேன். மனைவி மக்கள் தூர தேசத்தில். தொடர்ந்த ஓட்டத்தின் இடையே இன்று சிறு ஓய்வு. பாரடைம் (Paradigm) என்னும் சொல்லைச் சில ஆண்டுகள் முன்னர் சிடீவன் கோவியின் பேச்சு ஒன்றின் மூலம் அறிந்து கொண்டேன். […]
‘யாரோ’ மினுச்சின்
Posted in வாழ்க்கை on Jun 3rd, 2008
சால்வடோர் மினுச்சின்னைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? காரணமில்லாமல் எனக்கு அவரை மினுச்சுக்கின் என்று கூப்பிடவேண்டும் போலிருக்கிறது. அரைகுறையாய்ப் படித்த வாரயிறுதி நூலகப் புத்தகம் ஒன்றில் அவர் சொன்னதாய் ஒன்றைப் படித்தேன். யார் அவரென்று பெரிதாய் விவரம் இல்லை என்பதால் அவரை ‘யாரோ’ என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அல்லது, விக்கிப்பீடியா கூகுள் என்று தேடி அலையலாம். இப்போதைக்கு அது முக்கியமில்லை. அவர் சொன்னதாய்ப் படித்தது இது தான்: “எல்லாத் திருமணங்களுமே தவறானவை தான். பிறகு அந்தத் தவற்றைச் […]
“அம்மா, அப்பா, உங்க கிட்ட நான் ரொம்ப முக்கியமான ஒரு விசயம் சொல்லணும்”, உறங்கச் செல்லும் முன் மகள் வந்து தீவிர முகத்துடன் சொன்னாள். நிமிர்ந்து பார்த்தோம். ஒரு பெருமிதமும் பொறுப்புணர்ச்சியும் அவள் முகத்தில் பொங்கி வழியக் கண்டு ஆர்வம் பொங்க, “என்னடா?” என்றோம். “எனக்குத் தெரியும், நீங்க மேலறையில் இருந்து வந்து அஞ்சு நிமிசம் தான் ஆச்சுன்னு. இருந்தாலும், நீங்க உபயோகிக்காதப்போ கொஞ்சம் விளக்கை எல்லாம் அணைச்சுட்டு வந்தீங்கன்னா மின்சாரம் எல்லாம் வீணாகாது பாருங்க!” என்று […]