இன்று சனிக்கிழமை. ஒரு வார மும்முர நிகழ்வுகளுக்குப் பின் ஓய்வான ஒருநாள். பல நாட்களாகத்தேங்கிக் கிடக்கும் பல வேலைகளுள் சிலவற்றைச் செய்யலாமே என்று எண்ணம். ஆனால் எதையும் செய்யும் முன், உறங்கி எழுந்து வந்த பெண்களைச் சற்றே கவனிக்க வேண்டியிருந்தது. தினமும் நான் தானே செய்கிறேன் இன்று உன் முறை என்று அவர்களைக் குளித்துக் கிளப்பும் வேலையை மனைவி என்னிடம் தள்ளிவிட்டாள் ! சரி போனால் போகிறது என்று அவர்களோடு சில நேரம் மல்லுக் கட்டிவிட்டு […]
Category Archive for 'பொது'
புது வீட்டுக்கு வந்தாச்சு !
Posted in பொது on Feb 18th, 2004
இத்தனை நாட்களாய் bloggerல் குடி இருந்து விட்டு இப்போது வீடு மாறி இங்கு வந்தாயிற்று. இது இரண்டாவது மாற்றம், மூன்றாவது வீடு. ஒவ்வொரு முறை மாறும் போதும் சற்றுக் கடினமாகத் தான் இருக்கிறது. ஆனாலும் இங்கு கொஞ்சம் சுதந்திரம் அதிகம் என்று தோன்றுகிறது. உதாரணத்திற்கு, பின்னூட்டப் பகுதிக்கு மூன்றாம் ஆள் யாரையும் நம்ப வேண்டியதில்லை. (மொத்த வீடே இன்னும் மூன்றாம் ஆளை நம்பித் தான் இருக்கிறது என்பது வேறு விஷயம்!). செய்தியோடை அழகாய் வேலை செய்கிறது. Atom ஓடை வேண்டுமானாலும் அமைத்துக் […]
தொடரும் கிறுக்கல்கள்
Posted in பொது on Jan 25th, 2004
இந்தியாவில் இருந்து இந்த வாரத்தில் தான் வந்து சேர்ந்தோம். அங்கே எண்பது டிகிரி வெப்ப நிலையும், தினம் குடித்த இளநீரும் இதமளித்துக்கொண்டிருந்தது. இன்று இங்கு குருதியை இறுக வைக்கும் இந்த எட்டு டிகிரிக் குளிரின் இடையில் இல்லத்தில் சிறை. குவிந்து கிடக்கிற வெண்பனித் தூவல்களின் அளவும் உயரமும் அதிகரித்துக் கொண்டே அச்சமுறுத்திக் கொண்டு இருக்கிறது. ஆனால், “அடக் கஷ்டமே” என்றில்லாமல், “அட, என்ன அழகாய் இருக்கிறது” என்று கண்களை விரித்துக் கொண்டு சற்று வித்தியாசமாகப் பார்த்தால் அந்தச் […]
“எல்லாம் கடவுளின் சித்தம்” என்றாராம் ஜெயலலிதா, தீர்ப்பைக் கேட்டவுடன். “எங்கம்மா தப்பே பண்ணலை, சுப்ரீம் கோர்ட்டே சொல்லிருச்சு” என்று கழகத்தவர்கள் குதூகலிக்க ஆரம்பித்துவிட்டனராம். இந்தச் சத்தங்களில், தீர்ப்பின் முக்கியப் புள்ளிகள் மறைந்து தான் போகும். இரைச்சல்களுக்கு நடுவே என்ன இருக்கிறது என்று பார்ப்போம். தீர்ப்பு பலர் எதிர்பார்த்தபடி அல்லது ஆசைப்பட்டபடி வராமல் இருந்திருக்கலாம். ஆனாலும் உச்ச நீதி மன்றத்தை நான் மதிக்கிறேன். சுதந்திரமாய்ச் செயல்பட்டு மக்களாட்சிக்கு நமது நாட்டு நீதி மன்றங்கள் உறுதுணையாய் நிற்கின்றன. அது இன்று […]
எங்கே நேரம்?
Posted in பொது on Nov 24th, 2003
எல்லோருக்கும் இருப்பது ஒரே அளவு நேரம் தான். இருப்பினும் சிலரால் மட்டும் எப்படி நேரத்தை வெகு சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது? எடுத்த காரியத்தை எண்ணியபடி செவ்வனே செய்ய முடிகிறது? அந்தக் குழுவில் சேர எனக்கும் விருப்பம் தான் என்றாலும் அதற்கு வேண்டிய தகுதியை நான் இன்னும் பெறவில்லை என்பது தான் உண்மை. இப்போதெல்லாம் “நேரமே இல்லை” என்கிற சாக்கை நான் பயன்படுத்துவது இல்லை. “நேரத்தை என்னால் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை” என்று வேண்டுமானால் கூறுவது […]