‘ஏன்’, ‘எதற்கு’ என்று தலைப்பிட்டுச் சில நாட்களுக்கு முன்னர் எழுதிய பின் ‘எப்படி’ என்று ஒன்று பின்வர வேண்டும் என்பது தானே இயற்கையின் நியதி. அதனால் இதோ… எப்படி எல்லாம் கணிணிகளிலும், அதன் திரைகளிலும் தமிழ் இன்று மிளிர்கிறது என்று எண்ணிப் பூரிப்பாய் இருக்கிறது. இணையமும், வைய விரிவு வலையும், மின்மடல்களும், செய்தி மற்றும் விவாதக் குழுக்களுமாகவும், வளர்கின்ற தொழில்நுட்பங்கள் எல்லாவற்றுடனும் இணைந்தும் ஈடு கொடுத்தும் தமிழ் நிலைத்து வந்திருக்கிறது. அதே உத்வேகத்துடன் இன்று வலைப்பதிவுகள், எழுத்துருக்கள், […]
Category Archive for 'பொது'
புதிய பதிவுகளின் தொகுப்பு
Posted in பொது on Nov 12th, 2003
இந்த வாரம் அலுவலகத்தில் ஒரு பயிற்சி வகுப்பு அளிக்க வேண்டியிருப்பதால், அதிக நேரம் வலைக்குறிப்புக்களின் பக்கம் வர முடியவில்லை. வந்த சிறு நேரம் பலரின் தளங்களில் புதுப்பதிவுகள் இருக்கின்றனவா என்று பார்ப்பதில் கழிந்தது. Weblogs போன்று தமிழ் வலைக்குறிப்புக்களில் புதிய பதிவுகளைத் தொகுத்து வழங்கும் தளம்/செயலி ஒன்றை ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும். இதைப் பற்றி மேலும் அறிந்தவர்கள் சிந்திக்க வேண்டும். (இல்லையெனில் என் அரைகுறை அறிவை வைத்துக் கொண்டு நானே இந்த முயற்சியில் இறங்கி விடும் அபாயம் […]
தளம் மாற்றி இங்கு வந்தாயிற்று. இருந்ததெல்லாம் இங்கு எடுத்துப் போட்டாயிற்று. இன்னும் “ஓரிசு” பண்ணலை. (புரியாதவர்களுக்கு – ஒழுங்கமைப்புச் செய்யவில்லை). இந்த “ஓரிசு” என்கிற கொங்குத் தமிழ்ச்சொல் எங்கிருந்து வந்தது, பதவேர் என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. எல்லாத்தையும் கண்டபடி எறிஞ்சிட்டுப் போகாதடா, ஓரிசா எடுத்து வச்சிட்டுப் போ என்று எங்களூர் அம்மாக்கள் பெத்ததுகளைத் திட்டுவது மிகவும் சாதாரணமானது. கொஞ்சம் பொறுமை. விரைவில் இந்தத் தளத்தைச் சீரமைத்து (ஓரப் பகுதி இணைப்புக்கள், இத்யாதி…) விடுகிறேன். வழியிலே புதிதாய் […]
முதலில் இதோ தண்டூராச் சத்தம். டகர டகர டகர டகர டும்… இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால், இதோ நானும் என் வலைப்பதிவுகளோடு வந்துவிட்டேன். குறைந்தது நான்கு நாட்களாவது எழுதினால் தான் வெளியே சொல்வது என்று ஒரு சுய இலக்கு வைத்திருந்தேன். அதை வெற்றிகரமாக அடைந்துவிட்டதால் இந்த அறிவிப்பு. வயதில், அனுபவத்தில், ஆற்றலில், அறிவில், முயற்சியில், சிந்தனையில் மிகப் பெரியவர்களெல்லாம் இந்த வலைப் பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் எனக்குப் பிடித்த சிலரை இங்கே தனியாய்ச் சுட்டி […]
பத்தாயிரம் டாலர் பரிசு
Posted in பொது on Oct 30th, 2003
நேற்று இரவு தமிழகத்தில் இருந்து நான் முன்பின் அறிந்திராத ஒரு பெண்மணி தொலைபேசியில் அழைத்திருந்தார். என் அப்பாவிற்குத் தெரிந்த அரசு அலுவலகத்தில் அவர் வேலை செய்வதாகவும், அவர் தான் என் தொடர்பு எண் கொடுத்தார் என்றும் கூறவே, அதற்குள் யாரிந்தத் தொலைவிற்பனையாளரோ என்று என்னுள் ஏற்பட்டிருந்த எரிச்சல் சற்றே தணிந்தது. இல்லை, அமெரிக்க அரசின் ‘என்னை அழைக்காதீர்’ பட்டியலில் இன்னும் நான் என் பெயரைச் சேர்க்கவில்லை.