• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments
« முதலுரை
சூனியக்கிழவிகளும் மிட்டாய்களும் »

பத்தாயிரம் டாலர் பரிசு

Oct 30th, 2003 by இரா. செல்வராசு

நேற்று இரவு தமிழகத்தில் இருந்து நான் முன்பின் அறிந்திராத ஒரு பெண்மணி தொலைபேசியில் அழைத்திருந்தார். என் அப்பாவிற்குத் தெரிந்த அரசு அலுவலகத்தில் அவர் வேலை செய்வதாகவும், அவர் தான் என் தொடர்பு எண் கொடுத்தார் என்றும் கூறவே, அதற்குள் யாரிந்தத் தொலைவிற்பனையாளரோ என்று என்னுள் ஏற்பட்டிருந்த எரிச்சல் சற்றே தணிந்தது. இல்லை, அமெரிக்க அரசின் ‘என்னை அழைக்காதீர்’ பட்டியலில் இன்னும் நான் என் பெயரைச் சேர்க்கவில்லை.



விஷயம் இது தான். பொறியில் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் அவர் மகனுக்கு பத்தாயிரம் டாலர் பரிசு கிடைத்திருப்பதாகவும் அதனை மீட்டுத் தர உதவ வேண்டும் என்றும் அழைத்திருக்கின்றனர். மீட்டுத் தருவதா? ஒரு அவநம்பிக்கையோடு பேச்சைத் தொடர்ந்தேன்.

அமெரிக்காவில் வாழும் ஒருவர் தான் இதைப் பெற முடியுமாம் என்ற போது, இது உண்மையாய் இருப்பின் நான் என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன். பையன் இது இணையம் வழி வந்த பரிசு என்று, தனது பயனர் பெயர் (மின்மடல் முகவரி) மற்றும் கடவுச் சொல் இவற்றைத் தரத் தயாராக இருந்தான். நான் உள்ளே சென்று பரிசை மீட்டு அவர்களிடம் தர வேண்டும் என்பது விருப்பமாய் இருந்திருக்கலாம். (என்னை எப்படி நம்பினார்கள் என்று தெரியவில்லை!). அதெல்லாம் சட்டப்படி குற்றம் – இந்த ஆள் மாறாட்ட வேலை எல்லாம் சரியில்லை என்று கூறிவிட்டு, இருந்தாலும் சரி அப்படி என்ன தான் பரிசு என்று விசாரிக்கையில் பையன் ஏதோ ஒரு குப்பை மடல் வலையில் விழுந்திருக்கிறான் என்று தெரிய வந்தது. அவன் கொடுத்த முகவரியை உலாவியில் அடித்துப் பார்க்க – அது ஒரு ஆபாசச் சரக்குகள் விற்கும் தளம்.

இது போன்ற ஏமாற்று வேலைகள் நிறைய நடக்கும், நம்பாதீர்கள் என்று எசச்சரிக்கை தந்தேன். “நானும் படிச்சுப் பார்த்தேன் சார். Genuine-ஆகத் தான் தெரிந்தது. ஆனால் அந்தப் பரிசைப் பெற அமெரிக்கக் கடனட்டை எண் தர வேண்டும் என்றார்கள்”என்றார் அந்தப் பெண்மணி. எதை வைத்து அப்படி நம்பினார் என்று தெரியவில்லை. இல்லை, இது ஏமாற்று வேலை தான் என்று புரிய வைக்க முயன்றேன். என்னை நம்பினார்களா இல்லை இவன் உதவ மாட்டான் இவனிடம் என்ன பேச்சு என்று வைத்துவிட்டார்களோ தெரியவில்லை.

இணையம், கணிணி உபயோகங்கள் தமிழகத்தில் அதிகரிப்பது ஒரு புறம் மகிழ்ச்சியாய் இருந்தாலும், மக்கள் இது போன்ற குப்பை மடல்கள் விரிக்கும் வலைக்குள் விழுந்து விடாதிருக்க விழிப்புணர்வும் அதிகரிக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது. சென்னை போன்ற பெருநகர்களில் இந்த அறிவு அதிகம் இருக்கலாம். ஆனால் மற்ற மாவட்டங்கள், மற்றும் சிற்றூர்களில் இருப்பவர்களுக்கு இவற்றைப் பற்றிக் கற்றுக் கொடுப்பது யாருடைய வேலை? செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், தன்னார்வுத் தொண்டு நிறுவனங்கள் ? இந்தியக் கடனட்டை எண்கள் உதவாத வரை பெரும் பிரச்சினைகள் இல்லை தான். இருப்பினும், இலட்சங்களைக் கட்டணமாக வாங்கும் சுயநிதிப் பொறியியற் கல்லூரிகள் தங்கள் மாணவர்களுக்கேனும் இணையப் பொது அறிவை வளர்க்க வேண்டும்.

பகிர்க:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)

Posted in பொது

Comments are closed.

  • அண்மைய இடுகைகள்

    • பூமணியின் வெக்கை
    • வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • குந்தவை
    • நூற்றாண்டுத் தலைவன்
    • அலுக்கம்
  • பின்னூட்டங்கள்

    • இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • இரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • Balasubramanian Ganesa Thevar on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • செல்லமுத்து பெரியசாமி on குந்தவை
  • கட்டுக்கூறுகள்

    • இணையம் (22)
    • இலக்கியம் (16)
    • கடிதங்கள் (11)
    • கணிநுட்பம் (18)
    • கண்மணிகள் (28)
    • கவிதைகள் (6)
    • கொங்கு (11)
    • சமூகம் (30)
    • சிறுகதை (8)
    • தமிழ் (26)
    • திரைப்படம் (8)
    • பயணங்கள் (54)
    • பொது (61)
    • பொருட்பால் (3)
    • யூனிகோடு (6)
    • வாழ்க்கை (107)
    • வேதிப்பொறியியல் (7)
  • அட்டாலி (பரண்)

  • Site Meter

  • Meta

    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

இரா. செல்வராசு © 2025 All Rights Reserved.

WordPress Themes | Web Hosting Bluebook