ஓரிசு
Nov 9th, 2003 by இரா. செல்வராசு
தளம் மாற்றி இங்கு வந்தாயிற்று. இருந்ததெல்லாம் இங்கு எடுத்துப் போட்டாயிற்று. இன்னும் “ஓரிசு” பண்ணலை. (புரியாதவர்களுக்கு – ஒழுங்கமைப்புச் செய்யவில்லை). இந்த “ஓரிசு” என்கிற கொங்குத் தமிழ்ச்சொல் எங்கிருந்து வந்தது, பதவேர் என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை.
எல்லாத்தையும் கண்டபடி எறிஞ்சிட்டுப் போகாதடா, ஓரிசா எடுத்து வச்சிட்டுப் போ
என்று எங்களூர் அம்மாக்கள் பெத்ததுகளைத் திட்டுவது மிகவும் சாதாரணமானது.
கொஞ்சம் பொறுமை. விரைவில் இந்தத் தளத்தைச் சீரமைத்து (ஓரப் பகுதி இணைப்புக்கள், இத்யாதி…) விடுகிறேன். வழியிலே புதிதாய் CSS போன்றவை கண்ணில் பட கொஞ்சம் தடம் மாறி விட்டேன்.
அட ! Word rootக்குப் “பதவேர்” – நல்லா இருக்குங்களா ?
காசி… updateக்கு நீங்களும் தமிழ் தேடிக்கிட்டே இருக்கீங்க, யாரும் ஒண்ணும் சொல்லலை போலிருக்கு. நான் வேணும்னா ஆரம்பிச்சு வைக்கிறேன். “மேல்விவரம்” எப்படி? ஒத்துவரலீன்னா விட்டுருங்க.
பதவேர் நன்றாயிருக்கிறது. ஆனால் என்னமோ exact translation மாதிரி ஒரு தொனி. நான் எப்படியோ ‘ஓரிசா’ வெச்சிட்டேன். இதற்கு வேர் கண்டுபிடித்தால் சொல்லுங்க
இன்னொண்ணு, மேல்விவரம் என்பது Further info அல்லவா? புதுவிவரம் என்பது கொஞ்சம் ஒத்துவரும். ஆனாலும் பெயர்/வினை இரண்டுக்கும் பொருந்தக்கூடிய சொல் கிடைத்தால் நன்றாயிருக்கும்