Feed on
Posts
Comments

Category Archive for 'பொது'

எழுதாத கவிதை

கவிதைகள் மட்டுமே இடம்பெறும் கவிதைப் பதிவுகள் பற்றி நான் எழுதப் போவதில்லை என நினைத்திருந்தேன். அவற்றைப் படிக்கத் தேவையான அமைதியான சூழலும், மனமும், அவசரகதி வாழ்க்கையில் பெரும்பாலும் கிடைப்பதில்லை. அதனால் அந்தப் பக்கமெல்லாம் நான் அதிகம் போவதில்லை என்பதும் ஒரு காரணம். அதோடு இவற்றின் மீது எனக்கு இன்னும் ஒரு குறைபாடும் உண்டு. வலைப்பதிவுகளாய், அவ்வப்போது எழுதப்படும் கவிதைகளைப் பதிவதாய் இல்லாமல், பலர், தங்கள் கவிதைத் தொகுப்பைத் தொகுத்து வைக்கும் ஒரு வலைத்தளமாகத் தான் வைத்திருக்கிறார்கள். மொத்தமாய் […]

Read Full Post »

ஒரு சுற்று வலைப்பதிவர் பட்டியலில் இருக்கிற பெரும்பாலான பதிவுகளுக்குச் சென்று வந்தேன். நூறு பதிவுகளுக்கு மேல் இருக்கிறது என்று நாமே பெருமையடித்துக் கொண்டதைச் சில நாட்களுக்கு முன் பார்த்தேன். எங்கு என்று சரியாய் நினைவில்லை. ஆனால், இன்று அந்தப் பெருமையில் நான் பங்கு கொள்ளவில்லை. காரணம், கணிசமான பதிவுகள் ஓரிரண்டு நாட்களைத் தாண்டவில்லை. தொடர்ந்து எழுதுவது என்பது சிரமமான காரியம் என்று நானும் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். ஆனால், ஒரு நல்ல எழுத்தாளராய் உருவாவதற்குத் தொடர்ந்து எழுதும் முயற்சியும், […]

Read Full Post »

சில தினங்களுக்கு முன்னர் காரில் சென்று கொண்டிருக்கும் போது வலைப்பதிவு மற்றும் இந்த வலைப்பூ இவை பற்றி யோசித்தபடியே செல்ல, எடுக்கவேண்டிய இறக்கத்தைக் (Exit) கோட்டை விட்டு விட்டு இரண்டு மைல் தள்ளிப் போய் இறங்க வேண்டியதாகப் போய் விட்டது. இறங்கியவன் மரியாதையாகத் திரும்ப அந்தத் துரித சாலையில் ஏறித் திரும்பி வந்து சரியான இறக்கத்தில் இறங்கிச் சென்றிருக்கலாம். ஆனால் இந்த ஊர் சுற்றி மனம் சொன்னால் கேட்டால் தானே. பொதுவான ஒரு திசையை வைத்துக் கொண்டு […]

Read Full Post »

பல திசைகளாய் இருந்து மூன்று கோடுகளாகி இன்று தமிழ்க் கணினியுலகம் யூனிகோடு என்னும் ஒரே முறையை நோக்கி வெகு விரைவாய் நகர்ந்து கொண்டிருக்கிறது. பல ஆர்வலர்கள் அந்தத் திசையை நோக்கிச் செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள். உஷாவும் அருணாவும் எளிமையாய் கணினித் தமிழ் பாவிக்கும் நாள் எந்த நாளோ என்று ஆதங்கப் பட்டிருந்தார்கள். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. சிறு சிறு குறைகள் இருந்தாலும், மற்ற பல வசதிகள் மற்றும் ஆதாயங்கள் காரணமாக எல்லோரும் இனி யூனிகோடையே […]

Read Full Post »

வலைப்பூ ஆசிரியர் வாரப் பதவிக்கு அழைப்பு வருகிறது என்று தெரிந்ததில் இருந்து ஒரு பக்கம் தயக்கம். மறு பக்கம் உற்சாகம். இது எழுத்துலகில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கும் பலரும் வந்த இடம், வந்து போகும் இடம். சில சமயம் ஒரு வம்பு மடம். “நானும் இலக்கிய உலகில் எனது மூலையும்” என்று ஏதோ நான் பாட்டுக்கு ஒரு ஓரமாய் விளையாடிக் கொண்டிருக்க, இப்போது “மேடைக்கு வா மகனே” என்று கூட்டம் சேர்ந்து வேடிக்கை பார்ப்பது மாதிரி […]

Read Full Post »

« Prev - Next »