Feed on
Posts
Comments

Category Archive for 'பொது'

பல்வேறு விதமான ஈடுபாடுகள், வேலைகள், அவசரங்களுக்கிடையே அடித்துக் கொண்டு செல்லப்படும் உணர்வு இவ்வாரம் மேலோங்கி இருந்தது. அவை தந்த அழுத்த உணர்வும் சற்றே அளவில் அதிகரிக்கவே, சற்றே நிதானிக்க வேண்டியிருந்தது. காலமோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் பாதையில் உணர்ச்சிகள் ஏதுமின்றித் தொடர்ந்து தன்னைச் செலுத்திக் கொண்டிருந்தது. அதனுடனான பந்தயத்தில் சற்றே பின் தங்கிய உணர்வு. சோர்வு. சில சமயம் தொடர்ந்த போராட்டத்தில் பலன் இருப்பதில்லை. நிதானித்துக் கொண்டு நிலைப்படுத்திக் கொண்டு மீள்வது உசிதம். அப்படித் தான் […]

Read Full Post »

வானவில்

அன்று மாலை வீட்டை நெருங்குகையில் வானம் இருண்டிருந்தது. எப்போதும் மோடம் போட்டபடி இருக்கும் குளிர்கால இருட்டு இல்லை. இது சற்று வித்தியாசமாய் இருந்தது.. குறைந்த நேரத்தில் கரு மேகங்கள் திரண்டு மழை இனி எந்த நிமிடமும் கொட்டப் போகிறது என்று வானத்தைவிளிம்பில் நிற்க வைத்திருந்த இருட்டு. அதே நேரத்தில் தூரத்தில் எங்கோ மழை பெய்து கொண்டிருந்திருக்க வேண்டும். அதன் துளிகளும் மிகப் பெரிதாய் இருந்திருக்க வேண்டும். அவற்றின் ஊடே பட்டுச் சிதறிக் கதிரவன் ஒரு பெரும் வண்ணவில்லை […]

Read Full Post »

இந்த வாரம் தினமும் ஒரு பதிவேனும் செய்துவிட வேண்டும் என்று வைத்திருந்த திட்டமும் உறுதியும் கடைசி இரண்டு நாட்களாகச் சரியாகச் செயல்படுத்த முடியவில்லை. முதலில் பொது விஷயங்கள் பற்றிப் பேசினாலும், சென்ற பதிவில் எனது சொந்த விஷயம், என்னைச் சுற்றிய ஒரு நிகழ்வு பற்றி எழுதி இருந்தேன். இது போன்றவை வலைப்பதிவுகளில் இடம் பெறலாமா எனில், என்னைப் பொருத்தவரை இது போன்றவற்றிற்குத் தான் பதிவுகளில் முதன்மையான் இடம் என்பேன். நமது பதிவுகளில் கதாநாயகர்கள் நாமே. நாம் பார்த்த […]

Read Full Post »

ஒரு படங் கூடப் போடலேன்னா எப்புடின்னு குரல் கேட்டுதுங்க்ளா, சரி இன்னிக்கு ஒரு படம் போட்டுர வேண்டீது தான்னு நெனச்சேன். எங்க ஊருல இன்னும் குளுரடிக்குதுங்க. ரெண்டு நாளக்கி முன்னால பனிக்கொட்டல் ஒரு ஆறேலு இன்ச்சு இருக்குமுங்க. (“ழ” எல்லாம் கொங்கு நாட்டில கொஞ்சம் தகராறுங்க – நாங்க பலந்தான் சாப்பிடுவோம். வால எலயுல தயிர் சாதம் சாப்பிட்டா ஒரு கூடுதல் சுவை வந்துருமுங்க!) மார்ச்சு பாதியாச்சு இன்னும் இப்படிக் கொட்டுது பனி! சீக்கிரமா வருமா வெய்யக்காலமுன்னு […]

Read Full Post »

இந்த வாரம் எனக்கு வலைப்பூ என்கிற வலைப்பதிவிதழின் ஆசிரியர் வேலை. தினமும் ஒரு பதிவாவது செய்து விட வேண்டும் என்று முயன்று கொண்டிருக்கிறேன். பாதிக் கிணறு தாண்டியாகிவிட்டது. முன்னரே இங்கு வந்து இந்தச் செய்தியைச் சொல்லாமல் போய் விட்டேன். வலைப்பூ ஒரு நல்ல முயற்சி. ஆரம்பித்து வைத்தமதிக்கும் இப்போது உதவிக்குச் சேர்ந்திருக்கும் காசிக்கும் நன்றி சொல்ல வேண்டும். ஒரு நல்ல கருத்துப் பரிமாற்றம் தருவதாகவும், சக பதிவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கிறது.அதிலும் இந்த வாரம் முதன் முதலில் […]

Read Full Post »

« Prev - Next »