வானவில்
Apr 12th, 2004 by இரா. செல்வராசு
அன்று மாலை வீட்டை நெருங்குகையில் வானம் இருண்டிருந்தது. எப்போதும் மோடம் போட்டபடி இருக்கும் குளிர்கால இருட்டு இல்லை. இது சற்று வித்தியாசமாய் இருந்தது.. குறைந்த நேரத்தில் கரு மேகங்கள் திரண்டு மழை இனி எந்த நிமிடமும் கொட்டப் போகிறது என்று வானத்தைவிளிம்பில் நிற்க வைத்திருந்த இருட்டு.
அதே நேரத்தில் தூரத்தில் எங்கோ மழை பெய்து கொண்டிருந்திருக்க வேண்டும். அதன் துளிகளும் மிகப் பெரிதாய் இருந்திருக்க வேண்டும். அவற்றின் ஊடே பட்டுச் சிதறிக் கதிரவன் ஒரு பெரும் வண்ணவில்லை வானத்திரையில் வரைந்திருந்தான். வானவில்லை வாழ்க்கையில் பார்த்தது உண்டு என்றாலும், ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒரு பரவசம் தான். அதிலும் அவ்வளவு பெரிதாய் அதிகம் பார்த்தது இல்லை.
நொடிக்கு நொடி அதன் வண்ணக் கலவைகளும், வடிவமும் மாறிக் கொண்டிருந்தன. பார்த்துக் கொண்டிருந்த என்னுள் தவிப்பு. அட ! நான் மட்டும் எப்படி இதனை ரசிப்பது ? வீட்டை அவசர அவசரமாய் அடைந்து ஓடிச் சென்று மனைவியை, பெண்களை வெளியே வரச் சொன்னேன். படம் பிடித்துக் கொள்வதற்காகக் கருவியைத் தேடி ஓடிக் கொண்டிருந்தேன். இயற்கை அங்கே ஜாலங்கள் செய்து கொண்டிருந்தது. அதை அனுபவமாக்கும் முயற்சியில், பகிர்ந்து கொள்ளும் பற்றுதலில், பரிதவித்து இழந்து கொண்டிருந்தேன்.
எவ்வளவு விலை கொடுத்து வாங்கி இருந்தாலும், இது மனிதன் உருவாக்கிய படக் கருவி. இயற்கையை முழுதும் உள்வாங்க முடியவில்லை. அவ்வளவு பெரிய அரைவட்ட வில்லின் பாதியைக் கூடப் பிடிக்க முடியவில்லை. இயற்கைக்கு முன் மனிதனின் சிறுமை மீண்டும் வெளிப்பட்டது.
ஒரே வானவில்லை இருவர் பார்ப்பதில்லை. இது அறிவியல் உண்மை. வானவில் மட்டுமா ? அவரவர் கோணத்தில் அவரவர் காண்பது எல்லாமே வெவ்வேறு தான்.
ithu neenga edutha photova? attagasama irukku.
vanavil can be seen as a full circle from air…is there any photograph, showing the full circle?…you have ended with a tinge of theory of relativity.
செல்வராஜ் அற்புதமா இருக்கு இந்தப் படம்
எடுத்தது நீங்கள்தானே ?!
இது நீங்கள் எடுத்ததா செல்வராஜ். நான் இதை என் கணினியில் பதுக்கிக் கொண்டேன். ஆட்சேபனை உண்டா? இதைப் படித்தவுடன் எனக்கு மகாகவியின் பாஞ்சாலி சபதம் (சூர்யாஸ்தமம்) நினைவுக்கு வந்தது. படித்திருக்காவிட்டால், அவசியம் படியுங்கள். நன்றி
Selva,
Nalla photo. rasikumpadiyaana write up. Thanks.
anbudan
Balaji-paari
அனைவருக்கும் நன்றி. நான் எடுத்த படம் தான். அவசரமா ஓடிப் போய் நொடிகளில் எடுத்த படம். சொந்தத் திறமைன்னெல்லாம் நினைச்சுடாதீங்க.
தங்கமணி – தாராளமாய் உபயோகித்துக் கொள்ளுங்கள். பாரதியின் சூர்யாஸ்தமம் பற்றிச் சொன்னதற்கு நன்றி. அவசியம் படிக்கிறேன்.
பிரபு – தகவலுக்கு நன்றி. புதிதாய்க் கற்றுக் கொண்டேன்.
எனக்கு ரொம்ப பிடிச்ச இயற்கை கொடுத்த வி்ஷயங்களில் வானவில்லும் ஒண்ணு. ஹவாயில் இருந்த்ப்ப எல்லாம் தினமும் ஒரு வானவில்லாவது பார்க்ககிடைக்கும். சமையங்களில் இரண்டு வானவில் ஒரே நேரத்துல தெரியும். ஒண்ணுக்கு மேல ஒண்ணு. அதுவும் முழு அரைவட்டமா. சில நேரங்க்ளில் சாலையின் அந்தப் பக்கத்துல தொடங்கி இந்தப்பக்கத்துல நமக்கே நமக்கு ஒரு வரவேற்பு வளையம் மாதிரி இருக்கும். சில் நேரங்களில் ஒரு பக்கம் மலையும், மற்றப் பக்கம் கடலும் இருக்கும்! இப்பவும் கண்ணுக்குள்ள நிக்குது.
உங்க போட்டோ ரொம்ப நல்லா இருக்கு!
happaaa!!!!! romba nallaa irukku. lighting effect ore attakaasam pOngO !!!
எனக்கு மரச்சுள்ளிகளின் பின்னிருந்து ஊடுருவும் இந்த வெளிச்சமும் வில்லும் கார்த்திகை விளக்குச் சொக்கப்பானையை ஏனோ ஞாபகப்படுத்துகின்றன. நீங்கள் சொல்லும் பரிதவிப்பு முக்கியமானது. பொதுவாக, மகிழ்ச்சியான பொழுதுகள் இத்துணையையும் எப்படிச் சேகரித்துக்கொள்ளப்போகிறேன் என்ற அவதியிலேயே முழுமையாக அனுபவிக்கமுடியாமற் போய்விடுவதுமுண்டல்லவா?
எப்போ பார்த்தேனோ அப்போதிலிருந்து ‘வானவில்2004’ தான்
என் கணினியின் Wallpaper
உங்களோட வானவில் அருமை!
பாரதிதாசனோட அழகின் சிரிப்பு நினைவுக்கு வருகிறது.
“தங்கத்தை உருக்கிவிட்ட வானோடை தன்னிலோர்
செங்கதிர் மாணிக்கத்துச் செழும்பழம் மூழ்கும் மாலை…”
ஆச்சிமகன்