Feed on
Posts
Comments

Category Archive for 'பொது'

சில வாரங்களுக்கு முன் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் பலவற்றைப் பற்றி பத்ரி ஒரு நல்ல கட்டுரை எழுதி இருந்தார். முறைசாரா நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், சீட்டு, பைனான்ஸ் நிறுவனங்கள் முதலிய பல நிறுவனங்களைத் தொட்டுச் சென்றிருந்தார். ஒரு சீட்டு நிறுவன நிர்வாகத்தில் சில காலம் சிறு பங்காற்றி இருக்கிற அனுபவத்தில் அவற்றில் சிலவற்றைப் பற்றி என்னுடைய சில கருத்துக்கள். குறிப்பாகச் சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள் பற்றி. சமீப ஆண்டுகளில் சில சீட்டுக் கம்பெனிகள், பைனான்ஸ் நிறுவனங்கள் […]

Read Full Post »

வருக வருக ! நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு வணக்கம். வலைப்பதிவு தொடங்கி இன்னும் ஒரு வருடம் கூட முழுமையாகத் தாண்டாத நிலையில் மூன்று இடங்கள் மாறி இன்று நான்காவதாக ஒரு இடம் பார்த்து வந்திருக்கிறேன். “எத்தனை நாளைக்குத் தான் சட்டி பானையெல்லாம் தூக்கிக்கிட்டு அலையறது ? நமக்குன்னு ஒரு சொந்த இடம் வேணுமப்பா”, வாடகை வீட்டிலேயே பல வருடங்கள் கழித்துவிட்ட அம்மா சில வருடங்களுக்கு முன் ஒருநாள் இப்படிக் கூறியது நினைவுக்கு வருகிறது.

Read Full Post »

ஃபிராங்கின் மூலக் கடிதத்தை இங்கு பதியும் முன்னர் அவரிடம் தெரிவிக்க மடல் அனுப்பி இருந்தேன். இது போன்ற துர்ச்சம்பவங்களைத் தவிர்க்க உதவுமானால் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன் என்று பதில் அனுப்பி இருந்தார். விபத்திற்கு அவர் மகன் உட்கொண்ட மதுவும் பெரும் காரணம் போலும். எத்தனையோ முறை ஒருதந்தையாக அறிவுறுத்தியும் கேட்காமல் போய்விட்டானே என்னும் வருத்தம் அவர் மடலில் தென்பட்டது. இருப்பினும் அவன் எல்லோராலும் விரும்பப் பட்டவன் என்று இன்றும் கூறுகிற அவர் எழுத்தில் ஒரு பெருமிதமும் தெரிகிறது. […]

Read Full Post »

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு நாள். வரண்டு போன அலுவலக மடல்களுக்கும், எரிச்சலூட்டும் எரிதங்களுக்கும் இடையில், உணர்ச்சி பொங்கிய ஒரு மின்மடல் வந்தது. பிராங்க்(Frank) -ஐ எனக்கு அவ்வளவாகத் தெரியாது. எங்கள் நிறுவனத்தின் வேறொரு கிளையில் வேறூரில் வேலை செய்யும் அவரை அதிக பட்சமாய் இரு முறைகள் சந்தித்திருப்பேன். அவரது மகன் சார்லியையோ நிச்சயமாய் முன்னர் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்படியிருக்க, தன் மகனை விளித்து அவர் எழுதியிருந்த கடிதத்தை எங்கள் அலுவலகத்தில் பலருக்கும் நகலாக அவர் […]

Read Full Post »

நான் இங்கு எழுதிச் சில நாட்களாகி விட்டன.எனினும் சுற்றும் பூமி நின்று போய்விடவில்லை :-).  “சில நாட்களாய் இங்கு வரவில்லை. வேலை அதிகமாகி விட்டது”, என்று மட்டும் எழுத ஒரு குறிப்புத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும், இந்த வார இறுதி தொடங்கிஅடுத்த சில நாட்களில்அலுவல் காரணமாய் வெளியூர் செல்வதால் அதிகமாய் இந்தப் பக்கம் வர இயலாது என்பதையும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தெரிவித்து விடுகிறேன். வாசகர்களின் வந்து வந்து பார்த்துச் செல்ல வேண்டிய வேலையைத் […]

Read Full Post »

« Prev - Next »