Feed on
Posts
Comments

Category Archive for 'பொது'

‘கரும்பொன்’ என்று சொல்வார்கள். தங்கத்தைப் போல நிலத்தடி எண்ணெய் அவ்வளவு விலைமதிப்பு மிக்கதாய் அமைந்து விட்டது. உலகின் சக்தித் தேவைகளில் சுமார் 40 சதவீதத்தைக் கச்சா எண்ணெயே தீர்த்து வைக்கிறது. இன்றைய உலகப் பொருளாதாரத்தின் ஆணிவேராய் அமைந்திருப்பதும் இந்த எண்ணெய் வளமே என்றாலும் மிகையாகாது. சுமார் 90 சதவீதப் போக்குவரத்துக்குக் கச்சா எண்ணெயே ஏதோ ஒரு வகையில் காரணமாய் இருக்கிறது. பல பொருட்களுக்கும் வளங்களுக்கும் அடிப்படையாய் அமைந்திருப்பது கச்சா எண்ணெய் தான். ஏன், இன்றைய மத்தியக் கிழக்குப் […]

Read Full Post »

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான விமானப் போக்குவரத்தை நிர்ணயிக்கும் ஒப்பந்தம் ஒன்று இரண்டு வாரங்களுக்கு முன் புதுப்பிக்கப் பட்டிருக்கிறது. இந்தத் தளையிலாவெளி (Open Skies) ஒப்பந்தத்தை இந்திய உள்நாட்டு விமானத்துறை அமைச்சர் பிரஃபுள் பட்டேலுடன் மூன்றே நாள் பேச்சு வார்த்தைக்குப் பின் முடிவு செய்து அறிவித்திருக்கிறார் அமெரிக்கப் போக்குவரத்துச் செயலர் நார்மன் மினட்டா. இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து அதிகரிக்கவும், பயணச்செலவு குறையவும் நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதற்கு முன் இரு நாடுகளுக்கும் இடையே இருந்த ஒப்பந்தம் […]

Read Full Post »

வட அமெரிக்காவில் கடுங்குளிரும் பனி வீச்சுமாய் இயற்கை சீறிக் கொண்டிருக்கிறது என்று காட்டப் படம் பிடித்து வைத்திருந்தேன். எல்லா வருடமும் இருப்பது தான் என்றாலும், சடாரென்று கொட்டிச் சற்றே கடுமையாகத் தாக்கியதில் சற்றுத் திணறித் தான் போயிருந்தோம். மூன்றடிக்குக் குவிந்து கிடக்கிற இந்தப் பனியாவது இன்னும் மூன்று நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கக் கரைந்து போகும். மூழ்கிக் கடலடியில் கரைந்த உயிர்கள் மீளாவே! இங்கே பொழிந்த பனியை மிகச் சாதாரணமாக்கி விட்டது இயற்கையின் தெற்காசியச் சீற்றம். கடல் கொந்தளிப்பும் […]

Read Full Post »

தீவாளியும் துளசியும் ஆரம்பித்து வைத்துக் கடந்த சில நாட்களாகச் சுந்தரும் வெங்கட்டும் ஈடுபட்டிருக்கும் விவாதம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. துளசியைத் தெய்வமாக்கும் கலாச்சார ஆதிக்கம் மேற்குடியில் இருந்து பரவுகிறது. அர்த்தம் புரியாமலே அறியாமையின் காரணத்தால் பிற குடிகள் அவற்றை ஏற்றுக் கொள்கின்றன. அதனால் தமக்கென ஒரு கலாச்சார அடையாளமின்றித் தொலைந்து போகின்றன என்கிறார் சுந்தர். இதையே மேற்குடியாக்கம், சமஸ்கிருதமயமாக்கம் என்றும் எடுத்துக் கொள்ளலாம் என்று தங்கமணி கருத்துச் சொல்லி இருக்கிறார். இவற்றில் எல்லாம் உண்மை இல்லாமல் இல்லை. […]

Read Full Post »

ஆஸ்டின் பல்கலைக் கழகத்தில் எனக்கு எந்தவித வேலையும் இருக்கவில்லை. ஆனால், சமீபத்திய ஒன்றரை நாள் ஆஸ்டின் பயணத்தின் போது கிடைத்த ஒரு மூன்று மணி நேர இடைவெளியில் அந்தப் பல்கலைக்கழகத்தை நோக்கி நான் சென்று கொண்டிருந்ததன் பின்னணியில் எனது மனவிருப்பம் ஒன்று காரணமாய் இருந்தது. அங்குள்ள ஒரு நூலகத்தில் அருந்தமிழைப் பார்க்க முடியும் என்னும் ஒரு சாத்தியத்தின் பேரில் ஏற்பட்ட ஒரு ஆவல் தான் அது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு அமெரிக்கக் கல்லூரி ஒன்றின் நூலகம் […]

Read Full Post »

« Prev - Next »