ஒவ்வொரு அடியாய்…
Apr 25th, 2004 by இரா. செல்வராசு
பல்வேறு விதமான ஈடுபாடுகள், வேலைகள், அவசரங்களுக்கிடையே அடித்துக் கொண்டு செல்லப்படும் உணர்வு இவ்வாரம் மேலோங்கி இருந்தது. அவை தந்த அழுத்த உணர்வும் சற்றே அளவில் அதிகரிக்கவே, சற்றே நிதானிக்க வேண்டியிருந்தது. காலமோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் பாதையில் உணர்ச்சிகள் ஏதுமின்றித் தொடர்ந்து தன்னைச் செலுத்திக் கொண்டிருந்தது. அதனுடனான பந்தயத்தில் சற்றே பின் தங்கிய உணர்வு. சோர்வு.
சில சமயம் தொடர்ந்த போராட்டத்தில் பலன் இருப்பதில்லை. நிதானித்துக் கொண்டு நிலைப்படுத்திக் கொண்டு மீள்வது உசிதம். அப்படித் தான் நீண்டதொரு மூச்சு விட்டு அதனூடே அழுத்தங்களைக் களைந்து கொண்டு மீண்டும் தொடர்கிறேன். எல்லாவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல், அழுத்தங்களை அதிகரித்துக் கொள்ளாமல், அயராமல், ஒவ்வொன்றாய்க் கவனிக்க வேண்டும். வாழ்க்கையின் நீண்ட பாதை ஒவ்வொரு அடியாய்த் தான் செல்கிறது.
பாதையின் முன்னே பார்ப்பது முக்கியம். ஆனால் பக்கவாட்டில் நடப்பதை கவனித்தவாறே செல்வது உற்சாகமான அனுபவமாக இருக்கும்