Feed on
Posts
Comments

அன்று மாலை வீட்டை நெருங்குகையில் வானம் இருண்டிருந்தது. எப்போதும் மோடம் போட்டபடி இருக்கும் குளிர்கால இருட்டு இல்லை. இது சற்று வித்தியாசமாய் இருந்தது.. குறைந்த நேரத்தில் கரு மேகங்கள் திரண்டு மழை இனி எந்த நிமிடமும் கொட்டப் போகிறது என்று வானத்தைவிளிம்பில் நிற்க வைத்திருந்த இருட்டு.

அதே நேரத்தில் தூரத்தில் எங்கோ மழை பெய்து கொண்டிருந்திருக்க வேண்டும். அதன் துளிகளும் மிகப் பெரிதாய் இருந்திருக்க வேண்டும். அவற்றின் ஊடே பட்டுச் சிதறிக் கதிரவன் ஒரு பெரும் வண்ணவில்லை வானத்திரையில் வரைந்திருந்தான். வானவில்லை வாழ்க்கையில் பார்த்தது உண்டு என்றாலும், ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒரு பரவசம் தான். அதிலும் அவ்வளவு பெரிதாய் அதிகம் பார்த்தது இல்லை.

Continue Reading »

சாதாரணப் பாட்டுக்கே வழி தெரியாத எனக்குக் கர்னாடக சங்கீதம் என்பது பலகாத தூரம். ஆனால் இந்த வாரம்க்ளீவ்லாண்டிலேயே தியாகராஜர் ஆராதனை விழா நடந்துகொண்டிருக்கிறது. தொடர்ந்து இருபத்தேழாவது வருடமாக இங்கிருக்கிற ஆர்வலர்கள் இந்தியாவிலும் இங்கும் உள்ள  இசைக்கலைஞர்களை வைத்துச் சிறப்பாக நடத்தி வருகிறஒரு விழா.

சுற்று வட்டாரத்தில் இருந்து சுமார் நாலாயிரம் பேர் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார்களாம். நாற்பதே நிமிடங்கள் காரோட்டிச் சென்றால் நிகழ்ச்சிக்குச் சென்று விடலாம். ஆனாலும் ஒரு வாரம் நடைபெறும் இந்த விழாவிற்கு நான் போய் வருவது என்பது கேள்விக்குறி தான். குறைந்த பட்சம் ஒரு முறையாவது போய் வரவேண்டும் என்று எண்ணிக் கொள்கிறேன்.

ராகம், தாளம், சுதி, துக்கடா, என்று அங்கங்கு நீர் தெளித்தாற் போல சில சொற்களைத் தவிர(சொற்கள் மட்டும் தான், அர்த்தங்கள் கூட இல்லை) இந்த இசையைப் பற்றி ஏதுமறியாத பாமரன் நான் இந்த விழாவைப் பற்றி எழுதுவது என்பது இயலாத காரியம். அதனால், இவ்விழாவை விவரிக்கும் சென்னை-ஆன்லைன் பக்கங்களில் சென்று ஆர்வம் இருப்பவர்கள் படித்துக் கொள்ளுங்கள்.

Continue Reading »

நான் ஒரு பெரிய பாடகன் இல்லை. குளியலறையில் கூட எனது இசை ஞானம் அதிகமாய் வெளிவந்ததில்லை. பார்க்கின்ற கேட்கின்றபாடல்கள் என்னையும் அறியாமல் எனக்குள் புகுந்து கொண்டால் தான் உண்டு. ஆனால், தற்செயலாகச்சில பாட்டு வரிகள் மட்டும் என்றாவதுஎன்னுள் எட்டிப் பார்ப்பது உண்டு. அதிலும் பாடல்களின் முதல் நான்கு வரிகளோ, இரண்டு வரிகளோ (பல்லவி?) மட்டும் தான்தப்பும் தவறும் நிறைந்துவெளிவந்து விழுவது வழக்கம். ஆக, நான் ஒரு சிறிய பாடகன் கூட இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

“பாட்டெல்லாம் பாடத் தெரியாது” என்றிருப்பவனைக் கூட இந்தப் பாடல்கள் முழுவதுமாய்விட்டு வைப்பதில்லை. நான்கு வரிகள் தான் என்றாலும் சில சமயம் அவை திடீரென்று காலையில் மனதிற்குள் புகுந்து கொண்டு நாள் முழுதும் ரீங்காரமிட்டுக் கொண்டு இருக்கும். மூளை நரம்புமுடிச்சுக்களில் எங்காவது சேர்ந்து ஒளிந்து கொண்டிருக்குமோ? இருக்கலாம். ஏதாவது ஒன்று தூண்டிவிட பட்டென்று ஒரு பொறி பறந்துஒரு முடிச்சவிழ்ந்து அந்தப் பாட்டு அன்று முழுதும் கச்சேரி நடத்தும்.

Continue Reading »

தங்கமணியின் நீண்ட விளக்கத்திற்கு நன்றி. ஒரு வகையில் அவரின்இந்த விளக்கத்தை எழுதத் தூண்டியதற்காக நான் மகிழ்ந்து கொள்கிறேன். காரணம், மழைநாள் குறிப்பைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் முதலில் நான்பாதி கூட வெற்றி பெறவில்லை என்பதை தெளிவாகச் சொல்லி விட்டது அவரது விளக்கம். இதைப்படித்தவுடன், “வாவ்” என்று ஒரு வியப்பு வந்து என்மீது உட்கார்ந்து கொண்டது. மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன். விரிவாய் எழுத வேண்டும் என்று எண்ணினேன். (தாமதமாகி விட்டது- வரி அறிக்கை தயார் செய்ய வேண்டியிருந்தது).

இப்போது ஒரு குழப்பம் எனக்கு. அவர்அருமையாகஎழுதி இருந்தாலும் இப்படி விளக்காமல் இருந்திருந்தால் புரியாமல் போயிருக்கும். நிச்சயம் இழப்புத் தான். ஆனால்இது எழுதியவனின் இழப்பா, படிப்பவனின் இழப்பா? எழுத்தை இப்படி விரிவாய் விளக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று எண்ணுகிறேன். அது ஒரு இயல்பை, அதன் தனித்துவத்தை, ஓட்டத்தை, வடிவத்தை இதனால்இழந்து விடுகிறதோ என்று சிறு அச்சம். ஆனாலும் இந்த விளக்கங்கள் என்னுடைய புரிதலை அதிகரித்திருக்கிறதே. தான் சொல்ல வந்தது சரியாக வாசகனுக்குப் போய்ச்சேரவில்லை என்பது எழுதியவனுக்கும் ஒரு இழப்புத் தானே.

Continue Reading »

தங்கமணியின் எழுத்து எனக்குப் பிடித்திருக்கிறது. ஒரு கவித்துவம் கலந்த தனியான நடையில் அமைந்த அவரின் எழுத்துக்கள் கண்முன்னே காட்சிகளை இதமாக விரிப்பது அருமையான ஒன்று. எல்லோரும் பார்க்கிற காட்சியை அவர் மட்டும் இன்னும் அகலக் கண் விரித்துப் பார்க்கிறாரோ ? வாழ்க்கையை மனதுள் வாங்கி அங்கே அனுபவமாய் மாற்றுகிற நேரத்தில் வாழ்க்கை ஆறாகப் போய்க் கொண்டே இருக்கிறது. அதனால் அனுபவத்தைச் சேகரிக்காமல், அதை எழுத்தாக்குவது பற்றி எண்ணாமல், வாழ்க்கையை வாழ்க்கையாகப் பாருங்கள் என்று சொல்கிறார் இவர் (என்று நினைக்கிறேன்). அப்படிப் பட்ட ஒரு பார்வை உடையவரென்பதால் தான் இப்படி எல்லாம் எழுத முடிகிறதோ என்னவோ ! இவர் மட்டும் இன்றி இவர் பக்கத்தில் பின்னூட்டம் இடுபவர்களும் இப்படித் தத்துவ முத்துக்களையும் தர்க்கங்களையும் பொழிகிறார்கள்.

எல்லாம் சரிதான். ஆனால் என்னைப் போன்ற எளியவர்களுக்குச் சில சமயம் இவரது கடின நடை புரிய நேரம் ஆகிறது (அ) சிரமமாய் இருக்கிறது. பூக்கள் உதிர்கின்ற மழைநாளில் தவளைகள் இறக்கக்கூடும் உரையைப் படிக்க முயன்று இரண்டு முறை இன்னும் பொறுமையான சமயம் வேண்டும் என்று தாண்டிப் போனேன். படிக்காமல் விட்டுவிடவும் மனது வராமல் திரும்பித் திரும்பி வந்தேன். இதையே எனக்குப் புரிகிற மாதிரி எழுதினால் என்ன என்று முயன்றதன் விளைவு கீழே.

Continue Reading »

« Newer Posts - Older Posts »