Apr 27th, 2004 by இரா. செல்வராசு
சில நாட்களுக்கு முன்தோழியர் வலைப்பதிவில் ரங்கமீனா அவர்கள் எழுதி முடித்த”அப்பச்சி” தொடர் அருமையான ஒன்று. பத்து நாட்களுக்கு முன்னரே அவர் முடித்திருந்தாலும் விரிவாய் எனது கருத்துக்களைப் பதியவேண்டும் என்று எண்ணி இருந்தமையால் இந்தத் தாமதம். சுமார் பத்து வயதுச் சிறுமியின் பார்வையிலே,அவருடையவாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளைத் துல்லியமாய்ப் படம் பிடித்து எழுதியிருக்கிறார். தான்அதிகம்எழுதியதில்லைஎன்றுஅவர்கூறினாலும்”அப்பச்சி” ஒருஇனியநடையில்நன்றாகஅமைந்திருக்கிறது. அதில்கலந்திருந்தஉணர்ச்சிகளும்பெரும்பிடிப்பைஏற்படுத்துகின்றன. என்றுமேஉணர்ச்சிபூர்வமானஎழுத்துக்கள்சிறப்பாகஅமைந்துவிடுகின்றன.
Continue Reading »
Posted in வாழ்க்கை | 6 Comments »
Apr 26th, 2004 by இரா. செல்வராசு
தமிழ்-உலகம் யாஹூ மின்குழுமத்தில் யூனிகோடு பற்றிய கலந்துரையாடல் நடக்கிறது என்று அறிந்து நானும் சென்று அங்கு உறுப்பினனாய் ஆனேன். யூனிகோட்டிற்கு மாற இன்னும் தயக்கம் நிறையப் பேருக்கு இருக்கிறது. ஆனால் சிலர் சொல்லும் காரணங்கள் சரியானதாக இல்லை.
உதாரணத்திற்கு அகர வரிசைப் படுத்த இது சரியில்லை என்று ஒரு கருத்து. ஆனால், யூனிகோடு என்பது சகலத்திற்கும் தீர்வான ஒரு சர்வ நிவாரணி அல்ல. இது அடிப்படையாய் எழுத்துக்களுக்கு(உண்மையில் எழுத்து வடிவங்களுக்கு) ஒரு எண்ணைச் சமன்படுத்தும் ஒரு அட்டவணை தான். அகர வரிசைப் படுத்துவது எல்லாம் அதன் மேல் எழுதப் படும் நிரலிகளின் பணி என்பதை யூனிகோடு சேர்த்தியமும் தெளிவாகச் சொல்லி இருக்கிறது
Collation in general must proceed at the level of language or language variant, not at the script or codepoint levels.
Continue Reading »
Posted in கணிநுட்பம், யூனிகோடு | 9 Comments »
Apr 25th, 2004 by இரா. செல்வராசு
பல்வேறு விதமான ஈடுபாடுகள், வேலைகள், அவசரங்களுக்கிடையே அடித்துக் கொண்டு செல்லப்படும் உணர்வு இவ்வாரம் மேலோங்கி இருந்தது. அவை தந்த அழுத்த உணர்வும் சற்றே அளவில் அதிகரிக்கவே, சற்றே நிதானிக்க வேண்டியிருந்தது. காலமோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் பாதையில் உணர்ச்சிகள் ஏதுமின்றித் தொடர்ந்து தன்னைச் செலுத்திக் கொண்டிருந்தது. அதனுடனான பந்தயத்தில் சற்றே பின் தங்கிய உணர்வு. சோர்வு.
சில சமயம் தொடர்ந்த போராட்டத்தில் பலன் இருப்பதில்லை. நிதானித்துக் கொண்டு நிலைப்படுத்திக் கொண்டு மீள்வது உசிதம். அப்படித் தான் நீண்டதொரு மூச்சு விட்டு அதனூடே அழுத்தங்களைக் களைந்து கொண்டு மீண்டும் தொடர்கிறேன். எல்லாவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல், அழுத்தங்களை அதிகரித்துக் கொள்ளாமல், அயராமல், ஒவ்வொன்றாய்க் கவனிக்க வேண்டும். வாழ்க்கையின் நீண்ட பாதை ஒவ்வொரு அடியாய்த் தான் செல்கிறது.
Posted in பொது | 1 Comment »
Apr 18th, 2004 by இரா. செல்வராசு
“அக்காவின் படம் மட்டும் போட்டால் எப்படி? என்னையும் கண்டு கொள்ளுங்கள்” என்றாற் போல் தானும் ஒரு படம் போட்டு என்னிடம் நீட்டினாள் நந்திதா. எதற்கெடுத்தாலும், எல்லாவற்றிலும் பெரியவளுடன் போட்டி. அல்லது நகலெடுத்தாற் போல் நிவேதிதா செய்வதையே இவளும் செய்வது பல சமயம் வேடிக்கையான ஒன்று. போட்டிகள் தகராறுகள் அவ்வப்போது நிறைந்திருந்தாலும் பல நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் உற்ற துணையாய் நட்புடன் விளையாடும் இவர்களைக் காண்பது பேரின்பம்.
அவசர வாழ்க்கையில் சில சமயம் இது போன்ற இன்பங்களை நின்று கவனிக்காமல் போய் விடுகிறோம் என்பது தான் பெரும் இழப்பு. அந்தச் சுழலில் நானும் சில சமயம் சிக்கிக் கொண்டாலும் அவ்வப்போது விழித்துக் கொண்டு வெளிவர முயற்சி செய்வதுண்டு. அதற்கும் இந்த வலைக்குறிப்புக்களும், எழுத்தும் உதவுகின்றன என்பதில் சந்தேகமில்லை.
நந்து என்ன வரைந்திருக்கிறாள் என்று எனக்குத் தெரியவில்லை. எந்தத் திசையில் பார்க்க வேண்டும் என்றும் புரியாத ஒரு நவீனப் படம் இது! என் அறிவுக்குப் புலப்பட்டவரை தீர்மாணித்து இந்தத் திசை தான் சரியாய் இருக்கும் என்று இங்கு பதிகிறேன்.
Continue Reading »
Posted in கண்மணிகள், வாழ்க்கை | 9 Comments »
Apr 15th, 2004 by இரா. செல்வராசு
சென்ற வாரம் நிவேதிதா ஒரு ஓவியம்வரைந்து கொண்டிருந்தாள். வசந்த-விடுப்பு என்று பாலர்பள்ளி இரண்டு வாரமாய் விடுமுறை. ஈரி ஏரியோரம் இருக்கும் க்ளீவ்லாண்டில் தான்வசந்தம் இன்னும் முழுதாய்வந்த பாட்டைக் காணோம். தமிழ்ப்புத்தாண்டு (எல்லோருக்கும் தாமதமான வாழ்த்துக்கள்) அன்று30 (F) டிகிரிக் குளிர். இந்த ஓரிரண்டு நாட்களாய்ப் பரவாயில்லை. வசந்தம் வந்து கொண்டிருக்கும் அறிகுறிகள் தெரிகின்றன.
விடுமுறை என்றுவீட்டில் இருக்கும் மக்கள் இருவரையும் மேய்க்கும் வேலை மனைவிக்கு. தினமும் ஓவியமும், நடனமும், பிறகலைகளும், வெட்டி ஒட்டுதல்களும், பசையைக் கார்ப்பெட் தரையெங்கும் ஒழுக விடுவதும், இப்படியாய்ப் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி பார்ப்பதை முடிந்தவரை குறைக்க வேண்டுமெனில் வேறு வழிகளில் அவர்களது கவனத்தை ஈர்க்கும் வேலைகளைக் கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது.
எப்போதும் போல் ஓவியம் வரைகிறேன் பேர்வழி என்று ஏதோ கிறுக்கிக் கொண்டு இருக்கிறாள் என்று எண்ணினேன். எட்டிப் பார்த்துக் கேட்டேன், “என்னடா வரையிற?”
Continue Reading »
Posted in கண்மணிகள், வாழ்க்கை | 7 Comments »