May 15th, 2004 by இரா. செல்வராசு
புதிய நாட்டிற்குக் குடி பெயர்ந்துஒரிரு வருடங்கள் ஓடிவிட்டன. மீண்டும் ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ளும் நேரம் வந்தபோது, “அட, நாமும் ஏன் இந்தக் கண்ணுக்கு உள்ளே ஒரு ஆடியைப் போட்டுக் கொள்ளக் கூடாது?” என்று ஒரு ஆசை தோன்றியது. Contact lens (கண்ணுள்ளாடி?) பற்றி எப்படி யோசனை வந்தது என்று தெரியவில்லை. ஒருவேளை ஒரு அறுபது டாலருக்குப் பரிசோதனை, கண்ணுள்ளாடி, அதற்கு வேண்டிய சாமான்கள் இவை எல்லாம் தருவோம் என்று பார்த்த விளம்பரமாய்க் கூட இருக்கலாம்.
சரிதான் என்று துணைக்கு இரண்டு பேரை அழைத்துக் கொண்டு சென்று விட்டேன். அது ஒரு கண்ணாடிக் கடையை ஒட்டியே இருந்த மருத்துவர் மனை. மருத்துவர் என்று சொல்வதை விடப் பரிசோதகர் என்று மட்டும் சொல்லலாமோ என்னவோ? இந்த ஊரில் இந்தியாவில் போல, கண் விரிய மருந்துஊற்றி நாற்பத்தியைந்து நிமிடம்உட்கார வைக்கவே இல்லை. இது என்னடாவென்று எனக்குநம்பிக்கையே வரவில்லை. “ஏன் அய்யா”என்று வினவ, “அதெல்லாம் தேவையில்லை தம்பீ. உனக்கு வேணும்னா சொல்லு, ஊத்தி விடறேன்” என்றார்!
Continue Reading »
Posted in வாழ்க்கை | 8 Comments »
May 9th, 2004 by இரா. செல்வராசு
“ஒரு வருடம் கழித்து வந்து பாருங்க. மறுபடியும் பரிசோதித்துக் கொள்ளலாம்”, என்று கண் மருத்துவர் அனுப்பி விட, பிறகு அவர் சொல்லிவிட்டாரே என்று தினமும் பாலும் கீரையும் தவறாமல் எனது உணவில் சேர்க்கப்பட்டது. ஏதாவது சிறப்பு நாளன்று மட்டுமே விசேஷமாய் முட்டை சாப்பிட்ட காலம் போய், தினமும் ஒன்றிற்கு பதிலாய் இரண்டு, சிலசமயம் ஒருநாளில் மூன்று வேளையும் முட்டைசேர்ந்துகொள்ளும்.
வளரும் பருவத்தில் இப்படிச் சத்துணவு சாப்பிட்டதால், ‘குள்ளையனாக’ இருந்த நான் கிடுகிடுவென வளரத் தொடங்கினேன். “பாத்துங்க. மூணு முட்டையெல்லாம் வேண்டாம். ஜீரணத்துக்கு நல்லதில்லை”, என்று மறுமுறை மருத்துவர் கூறிய பிறகு தான் சற்று நிதானப்பட்டது. இப்படிச் சத்துணவாய்ச் சாப்பிட்டபோதும், ஒரு வருடம் கழித்துச் சோதனை செய்தபோது கண்பார்வை இன்னும் சற்று மங்கியிருந்தது(-3.5).
“இதத் தடுக்கறது கஷ்டம். வளர்ற வயசாச்சே” என்று மருத்துவர், இருபது இருபத்தியொறு வயது ஆகும் வரை மீண்டும் ஏற வாய்ப்பிருக்கிறது என்றார்.
Continue Reading »
Posted in வாழ்க்கை | 10 Comments »
May 7th, 2004 by இரா. செல்வராசு
சாதாரணமாகவே பெரிய கண்கள் எனக்கு என்று பலரும் கூறக் கேட்டிருக்கிறேன். சிறு வயதில் எனக்கு அழகான சிரிப்பும் விரிந்த கண்களும் என்று பிறர் கூறியது உண்டு. அதைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன் (ஹி..ஹி..). திருமணத்தின் பிறகு, உண்மை விளம்பிகளான மச்சான் மச்சினிகள் எனக்கு MKM (முட்டைக் கண்ணு மச்சான்) என்று பெயர் வைக்கும் அளவிற்குப் பெரியதாக இருந்தது என்று அப்போது தெரிந்திருக்கவில்லை.
பெரிய கண்ணுடையவர்களுக்குக் கிட்டப்பார்வைப் பிரச்சினைகள் வர அதிக வாய்ப்பு இருக்கிறது என்று எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாத என்னுடைய உள்மனக் கோட்பாடு ஒன்று பின்னாளில் ஏற்பட்டது உண்டு. கண்கள் பெரிதாய் இருந்தால் தான், தூரத்து ஒளிக்கற்றைகள் கண்ணின் ஆடி வழியாய்க் குவிந்து சரியான இடத்தில் விழாமல், சற்று முன்னரே விழுந்து, பிறகு சற்றே விரிந்து போய் ரெட்டினாவில் படுவதால் மங்கலாகத் தெரிகிறது என்கிற ஒரு அரைகுறைத் தத்துவம்.
அப்படி ஒரு கிட்டப்பார்வைப் பிரச்சினை என் பெரிய கண்களுக்கும் ஒருநாள் ஏற்பட்டது.
Continue Reading »
Posted in வாழ்க்கை | 5 Comments »
May 6th, 2004 by இரா. செல்வராசு
நிவேதிதாவின் பாலர்பள்ளியில் இந்த வாரம் பல நாடுகளைப் பற்றி அறிந்து கொள்ளும் வாரம். தினமும் ஒரு நாடு பற்றி. அதில் இந்திய நாள் ஒன்று. சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது தான் என்ன என்ன செய்தாள் என்று காட்ட வேண்டிச் சில படங்கள் தேவை என்று சொன்னாள். அவசர அவசரமாக முன் தின இரவு கோர்த்துத் தந்த படம் கீழே.
தை மாசமா இருந்தா என்ன? பேத்திகள் வந்தால் தான் ஊரிலே தீபாவளி. ஆன மேல சவாரி. அட! பொங்கலும் உண்டுங்கோவ் !
Posted in வாழ்க்கை | 2 Comments »
Apr 30th, 2004 by இரா. செல்வராசு
நேற்று என்அப்பாவுடன் தொலைபேசியில் பேசினேன். அவருடைய வாழ்வின் இன்னொரு பாகத்தின் முடிவு, இன்று ஈரோடு நீதிமன்றத்தின்வருகைப் பதிவேட்டில்கடைசியாகப் போடும் கையொப்பத்தோடு நிகழ்ந்திருக்கும். பணியில் இருந்து இன்று முதல் அவருக்குஓய்வு.
“எத்தனை வருஷம் ஆச்சுங்க அப்பா?”
கொக்குமடைப்பாளையம் என்னும் சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்த அவர் பார்த்த முதலும் கடைசியுமான வேலை இது தான். இளவயதில் தந்தையை இழந்தபின் தாயின் வளர்ப்பிலே மூன்று மகன்களில் இவர் மட்டும் பள்ளியிறுதி ஆண்டு (?) வரை கல்வி கற்றதே பெரிய விஷயமாகத் தான் இருந்திருக்கும். கொங்குநாட்டின் பரவலானபங்காளித் தகராறுகள் இங்கும் உண்டு. அவரது மற்ற இரு சகோதரர்கள் உடன் பெரிதாய்த் தொடர்பேதும் இல்லாதது ஒரு வகையில் அடுத்த சந்ததியினருக்குஇழப்புத் தான். அப்பாவிற்குமூத்தவரானவரும், இரட்டையராய் உடன்பிறந்த இளையவரும் இன்று உலகத்தில்இல்லை.
“அறுவத்தி ஆறுலருந்து வேல செய்யறேன். முப்பத்தெட்டுவருசமாச்சு”
Continue Reading »
Posted in வாழ்க்கை | 14 Comments »