Feed on
Posts
Comments

நான் இங்கு எழுதிச் சில நாட்களாகி விட்டன.எனினும் சுற்றும் பூமி நின்று போய்விடவில்லை :-).  “சில நாட்களாய் இங்கு வரவில்லை. வேலை அதிகமாகி விட்டது”, என்று மட்டும் எழுத ஒரு குறிப்புத் தேவையில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும், இந்த வார இறுதி தொடங்கிஅடுத்த சில நாட்களில்அலுவல் காரணமாய் வெளியூர் செல்வதால் அதிகமாய் இந்தப் பக்கம் வர இயலாது என்பதையும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தெரிவித்து விடுகிறேன்.

வாசகர்களின் வந்து வந்து பார்த்துச் செல்ல வேண்டிய வேலையைத் தவிர்ப்பதற்காக இப்படி ஒரு குறிப்புப் பயன்படலாம். எனினும், செய்தியோடைத் திரட்டி வழியாகப் படிப்பவர்களுக்கு இந்த குறிப்பு அவசியமில்லை. புதிதாய் ஒரு குறிப்புஇருந்தால், அவர்கள் பெட்டிக்கு ஓடை ஓடி வருமே! ஆனால், அந்த வசதியை எல்லோரும் பாவிக்கிறார்களா என்பது தான் தெரியவில்லை.

‘கொலராடோ ஸ்பிரிங்ஸ்’-இல் இருந்து முடிந்தால் (படங்கள்?) பதிவு செய்கிறேன்.

* * * * *

“அருமைக்காரர்என்பதற்குகொங்குத்தமிழில்பொருள்என்ன..?” என்று சில நாட்களுக்கு முன்பு நண்பர் வாசன் கேட்டிருந்தார்…

Continue Reading »

“என் கண்களுக்கு லேசர் சிகிச்சை பண்ணிக்கலாம்னு இருக்கேன்!” – பாதி யோசனையும் பாதி முடிவுமாகவும் கூறினேன். ஐந்து மாதங்களுக்கு முன் ஒருநாள் ஊருக்குச் சென்றிருந்தபோது, மனைவி, அம்மா மற்றும் பிறரோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஒரு அமைதியான நேரத்தில் தான் இப்படி ஒரு பிரகடனம் செய்தேன்.மெல்ல என்னை ஏறிட்டுப் பார்த்தனர். இவன் உண்மையாகச் சொல்கிறானா,இல்லை விளையாடுகிறானா என்று தீர்மானிக்க முனைந்தவர்கள் போலிருந்தது.

கண்ணுள்ளாடியை விட்டுவிட்டு இரண்டாவது இன்னிங்ஸாக மீண்டும் கண்ணாடி அணிய ஆரம்பித்தும் ஒரு நாலரை வருடங்கள் ஓடி இருந்தது.

“அது என்ன ஏதுன்னு பாத்து, பண்றம்னா பண்ணிக்கப்பா, சும்மா பண்றேன் பண்றேன்னு பேசிக்கிட்டுக் காலத்தக் கழிக்காதே”, என்றார் அம்மா. லேசர் சிகிச்சை முறை பற்றிய அறிவு பொதுவாக ஊரில் காதுவழிச் செய்தியாகப் பரவி என் அம்மா வரையும் நீண்டிருந்தது.

Continue Reading »

கண்ணுள்ளாடியைப் போட்டுக் கொள்ள நன்றாக இருந்தாலும் அதன் பராமரிப்பு வேலைகள் எக்கச்சக்கம். முதலில் கையில் (பையில்) ஒரு சின்னச் சொட்டு மருந்துக் குடுவை ஒன்றை எப்போதும் வைத்திருக்க வேண்டும். அவ்வப்போது கண் ஈரப்பசை காய்ந்து போகும் போது இரண்டு சொட்டு விட்டுக் கொள்ள வேண்டும். கண்களும் மூச்சு விடுமாமே! இந்த உள்ளாடியைப் போட்டுக் கொள்ளும் போது கண்ணின் நுண்ணிய துவாரங்கள்(?) அடைபட்டுக் கொண்டால் காற்று உள்நுழைய முடியாமல் போவதாலும் இப்படிக் காய்ந்து போய் விடுமாம்.

பிறகு இரவில் அதனைக் கழட்டி அதற்கென இருக்கும் ஒரு டப்பாவில் ஒரு திரவத்தை ஊற்றி, ஊற வைக்க வேண்டும். காலையில் மீண்டும் அதற்கென இருக்கும் ஒரு சோப்புத் திரவத்தில் இரண்டு சொட்டு விட்டுத் தேய்த்துப் பிறகு மீண்டும் அதற்கென இருக்கும் இன்னொரு உப்புத் திரவத்தை ஊற்றி நன்றாகக் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கென அத்தனை இருந்தது!

Continue Reading »

சுந்தரவடிவேல் எழுதியிருந்த அச்சுத வாய் ரோகம் கவிதை சில காட்டமானஎதிர்வினைகளை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் படித்த போது”நல்ல கவிதை- வித்தியாசமா யோசிக்கிறீங்க” என்று நான் ஒரு வரிக் கருத்து மட்டுமே சொல்லி இருந்தேன். ஆனால், இந்தக் கவிதையில் அவசியமற்றநம்பிக்கைத் தகர்வும் அழகுணர்ச்சியும் (குறைவும்) இருப்பதாய் பத்ரி கருத்துத் தெரிவித்திருந்ததில் மீண்டும் சென்று கவிதையையும், கவிஞரின் மறுமொழியையும் படித்தேன். எனது விரிவானகருத்துக்கள் கீழே.

“நல்ல கவிதை. வித்தியாசமா யோசிக்கிறீங்க” என்று முதலில் கூறியதை மாற்றமின்றிஇன்னும் சொல்வேன். சற்றே கொச்சையாய் இருந்த சில வரிகள் ஒரு அதிர்வைத் தந்தது உண்மை தான். ஆனால் அது கவிஞனின் ஒரு கற்பனை. உரிமை. எழுத்து உத்தி. டயோனிசம் பற்றி எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், கையாண்டிருக்கும்கற்பனை அரைகுறையாய் இல்லாமல் முழுமையாய் இருந்தது என்பதை மட்டும் என்னால் உணர முடிகிறது.

Continue Reading »

இன்று என் மச்சினிக்கு, மனைவியின் தங்கைக்கு, தமிழகத்திலேதிருமணம். வானத்துக் கோள்களின் வேகத்துக்கு ஈடுகொடுத்து எங்களால் விமானம் ஏறிப் போக முடியவில்லை. தொலைதூரத்தில் இருந்து வாழ்த்து மட்டுமே சொல்ல முடிந்தது. அய்யர் வரும் வரையில் அமாவாசை காத்திருப்பதில்லை. அருமைக்காரர் நடத்தி வைக்கும் திருமணம், அக்கா வரும் வரை எல்லாம்காத்திருப்பதில்லை. எங்கிருந்தாலும் எங்களின் அன்பு வாழ்த்துக்களைச் சுமந்து கொண்டு எங்கள் எண்ணங்கள் அவர்களைச் சென்றடையும்.

இப்படித்தான் இளவேனிற்காலத்தில் ஒரு நாள் – இதேவைகாசிமாதம்- நானும் என் மனைவியும் மணம் செய்துகொண்டோம். அதே ஊர். அதே மண்டபம். அப்படியே தான், அன்று போல் இன்றும்இனிமையாய் நடந்து முடிந்திருக்கும் இவர்களின்திருமண வைபவமும்…

* * *

Continue Reading »

« Newer Posts - Older Posts »