Feed on
Posts
Comments

வருக வருக !

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு வணக்கம். வலைப்பதிவு தொடங்கி இன்னும் ஒரு வருடம் கூட முழுமையாகத் தாண்டாத நிலையில் மூன்று இடங்கள் மாறி இன்று நான்காவதாக ஒரு இடம் பார்த்து வந்திருக்கிறேன்.

“எத்தனை நாளைக்குத் தான் சட்டி பானையெல்லாம் தூக்கிக்கிட்டு அலையறது ? நமக்குன்னு ஒரு சொந்த இடம் வேணுமப்பா”, வாடகை வீட்டிலேயே பல வருடங்கள் கழித்துவிட்ட அம்மா சில வருடங்களுக்கு முன் ஒருநாள் இப்படிக் கூறியது நினைவுக்கு வருகிறது.
Continue Reading »

விருந்தோம்பலுக்குப் பெயர் போன கொங்கு நாட்டின் அமெரிக்க வாரிசு-என் தங்க மகள் நிவேதிதா-அப்படிக் கூறிவிட்டாளே என்று மனம் சற்றே வேதனைப் பட்டது. “அப்பா… நம் வீட்டிற்கு விருந்தினர்யாரும் வரவேண்டாம். அப்படியே வந்தாலும் இரவு நம் வீட்டில் தங்க வேண்டாம்!” அழுதபடி அவள் கூறியதை நண்பர் வீட்டினர் வேற்றறையில் இருந்து கேட்டும் விட்டனர். “நாங்க வேணும்னா பக்கத்து அறையில் படுத்துக் கொள்கிறோம். அவங்க படுக்கையை அவங்களுக்கே குடுத்துடுங்க”, என்று அவர்கள் தர்மசங்கடத்துடன் முன்வந்தது என் கஷ்டத்தை இன்னும் அதிகப் படுத்தியது.

தங்களுடைய பெண்ணும் சில சமயம் தனது படுக்கைச் சொந்தம் பாராட்டித் தன் மாமா/அத்தைக்கே விட்டுத் தர மறுத்திருப்பதைச் சுட்டி, அது இயற்கையானது என்று தாங்கள் உணர்ந்திருப்பதாகக கூறினார்கள். அது உண்மை தான் என்றாலும், இங்கே நடப்பில் படுக்கை பிரச்சினையாக இல்லை. தவறு என்னுடையது(ம்) தான். இரவு ஒரு மணிக்கு நான் அப்படி முரட்டுத்தனமாய் மிரட்டி இருக்கக் கூடாது…

Continue Reading »

ஃபிராங்கின் மூலக் கடிதத்தை இங்கு பதியும் முன்னர் அவரிடம் தெரிவிக்க மடல் அனுப்பி இருந்தேன். இது போன்ற துர்ச்சம்பவங்களைத் தவிர்க்க உதவுமானால் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன் என்று பதில் அனுப்பி இருந்தார். விபத்திற்கு அவர் மகன் உட்கொண்ட மதுவும் பெரும் காரணம் போலும். எத்தனையோ முறை ஒருதந்தையாக அறிவுறுத்தியும் கேட்காமல் போய்விட்டானே என்னும் வருத்தம் அவர் மடலில் தென்பட்டது. இருப்பினும் அவன் எல்லோராலும் விரும்பப் பட்டவன் என்று இன்றும் கூறுகிற அவர் எழுத்தில் ஒரு பெருமிதமும் தெரிகிறது.

குடித்துத் தான் ஆகவேண்டும் எனில் போதை தெளியும் வரை குப்புறப் படுத்துக் கிடங்கள். காரில் மட்டும் ஏற வேண்டாம்!

Subject: To my son Charles and some others who need to know how I am now, they can pass it on
Continue Reading »

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு நாள். வரண்டு போன அலுவலக மடல்களுக்கும், எரிச்சலூட்டும் எரிதங்களுக்கும் இடையில், உணர்ச்சி பொங்கிய ஒரு மின்மடல் வந்தது. பிராங்க்(Frank) -ஐ எனக்கு அவ்வளவாகத் தெரியாது. எங்கள் நிறுவனத்தின் வேறொரு கிளையில் வேறூரில் வேலை செய்யும் அவரை அதிக பட்சமாய் இரு முறைகள் சந்தித்திருப்பேன். அவரது மகன் சார்லியையோ நிச்சயமாய் முன்னர் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்படியிருக்க, தன் மகனை விளித்து அவர் எழுதியிருந்த கடிதத்தை எங்கள் அலுவலகத்தில் பலருக்கும் நகலாக அவர் அனுப்பி இருந்தது ஏன் என்ற கேள்விக்குறியுடன் படிக்க ஆரம்பித்தேன். மடல்வரிகளுக்கு இடையே ஒரு விதமான கனமான அமைதி நிலவி உள்ளே ஈர்த்தது. உணர்ச்சிகள் நிரம்பிய அந்தக் கடிதத்தை இதுவரை பலமுறை படித்துவிட்டேன். இன்னும் கூட இம்மடலை அஞ்சல்பெட்டியில் இருந்து அழித்துவிட மனம் வரவில்லை. பிறரோடும் இதனைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அவர் அந்த மடலின் தலைப்பிலேயே கூறிவிட்டதால், அதனைத் தமிழ்ப்படுத்திக் கீழே தருகிறேன்.

இப்படி ஒரு கடிதத்தை எந்த ஒரு தந்தையும் தன் மகனுக்கு எழுதவேண்டிய நிலை ஏற்படக் கூடாது.

இனிஅந்தக் கடிதம்… 

Continue Reading »

பயணத்தின் இறுதிக் கட்டமாய் இரண்டு நாள் டென்வர் நகரில்- குறிப்பாகப் பதினாறாம் தெருவில் (16th Street) என்று சொல்லும் அளவிற்கு அந்தப் பகுதியிலேயே சுற்றிக் கொண்டிருந்தோம். டென்வர் டவுண்டவுன்(downtown என்பதை அப்படியே தமிழில் எழுதுவதற்கு வேடிக்கையாக இருக்கிறது!) பகுதியில் அமைந்துள்ள இந்தத் தெரு கோலாகலமாய் இருந்தது.

colo6_1643.JPG

சுமார் ஒரு மைல் நீளத்திற்கு மேலும் கீழுமாய் ஒரு பேருந்து சில நிமிடத்திற்கு ஒரு முறை சுற்றிக் கொண்டிருந்தது. அதில் எந்தக் கட்டணமும் இன்றி எங்கு வேண்டுமானாலும் ஏறி எங்கு வேண்டுமானாலும் இறங்கிக் கொள்ளலாம். இதுமிகவும் வசதியாக இருந்தது. அந்தத் தெரு முழுக்க வேறு வாகனங்கள் செல்ல இயலாதபடி அமைத்திருந்தார்கள். குறுக்குத் தெருக்களில் மட்டும்பிற வாகனங்கள் சென்று கொள்ளலாம். ஒரு மின் ரயில் கூட ஊரின் மற்ற பாகங்களில் இருந்து மக்களை இங்கு கொண்டு வந்து சேர்க்கிறது. இது போன்ற வசதி சென்னை ரங்கனாதன் தெரு, கோவை டவுன் ஹால் பகுதிகளில் இருந்தால் எப்படி இருக்கும் என்று மனது அசை போட்டுக் கொண்டது. இப்படி எங்கு எதைப் பார்த்தாலும் நமக்குத் தெரிந்தவற்றோடு மனது முடிச்சுப் போட்டுக் கொள்ளப் பார்ப்பது சுவாரசியம் தான். இந்த வண்டிகள்அடிக்கடி நின்று சென்றாலும் சுற்றுப் புறத்திற்கு ஊறு விளைவிக்காதவாறு மின்சக்தியில் இயங்குகின்றனவாம். அடிக்கடி இந்த வண்டியில் ஏறிச் சுற்றிக் கொண்டிருந்தோம். குழந்தைகள் சோர்வுற்ற போது சும்மா இதில் ஏறி உட்கார்ந்து கொண்டு மேலும் கீழும் இரண்டு முறை எங்கும் இறங்காமல் சுற்றிக் கொண்டும் இருந்தோம்!

Continue Reading »

« Newer Posts - Older Posts »