Feed on
Posts
Comments

Category Archive for 'இணையம்'

நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து இந்த விவாதத்தை நீட்டித்துக் கொண்டே இருக்க வேண்டாம் என்று தோன்றினாலும், சில கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்த மறுமொழிப் பதிவு. புதிய பதிவர்கள் சிலருக்கும் இது சில தெளிவுகளைத் தரலாம். என் பதிவைத் தூக்கி எறிந்திருந்தால் தெரியும் என்று சொல்பவருக்கு: தமிழ்மணம் தரும் விரிவான வாசகர் வட்டத்தை இழந்திருப்பேன் என்கிற வருத்தம் இருக்கும் என்றாலும், அதனால் என் வலைப்பதிவு நின்றிருக்கப் போவதில்லை. எனது எழுத்திற்கான ஆதாரண காரணத்தையோ […]

Read Full Post »

ஆற்றுப் பாலத்தின் கீழே நிறைய நீர் வழிந்தோடி விட்டது. கூர் கற்களாய்ச் சொற்கள் வண்டிகளில் வந்து இறக்கப் பட்டுவிட்டன. அமைதியாய்த் தனியாகச் சும்மா போய்க் கொண்டிருப்பவன் கூடச் சாலையில் கூட்டமாய் ஒருவனை அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் என்னவென்று தெரியாமலே போர்வையைப் போர்த்திப் ‘போடு இன்னும் ரெண்டு’ என்று சாத்திவிட்டுப் போவதைப் பார்ப்பது போல் இருக்கிறது. பேச்சை விட, செயலை விட, எழுத்து என்பது சற்றுப் பொறுமையானது, சிந்தித்து நிதானத்தோடு நடந்து கொள்ள வைப்பது என்று எனக்கு ஒரு […]

Read Full Post »

தமிழ்மணம் பற்றிய அடிப்படையைப் பலர் (பெரிய தலைகளும் கூட) தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தத்திற்குரியது. அது திரட்டி மற்றும் சில வசதிகள் மட்டும் தான் என்று மீண்டும் மீண்டும் விளக்கம் அளிக்க ஆயாசம் தான் மிஞ்சுகிறது. அதனால் மீண்டும் அது பற்றி விளக்க நான் முற்படப் போவதில்லை. அவரவர் ‘புரிதலில்’ அவரவர் உறுதியாய் இருக்கும்போது எந்த விளக்கமும் வீண். யாருக்கேனும் தமிழ்மணம் பற்றிய கேள்விகள் கருத்துக்கள் இருப்பின் தமிழ்மணத்தின் வாசகர் மன்றத்தில் எழுப்பினால் அதனைக் கவனிக்க […]

Read Full Post »

மாயவரத்தான் ஒரு பதிவு வழியாக வலைப்பதிவுகளும் அது உண்டாக்கியிருக்கும் விருப்பு வெறுப்பு குழுவியம் பற்றியெல்லாம் ஒரு தொடர் பதிவுக்கு வித்திட்டிருக்கிறார். அதனைத் தொடங்கி வைக்க முதலில் என்னை அழைத்திருக்கிறார். அவர் என் பதிவில் இட்ட ஒரு பின்னூட்டம் தொடர்பாக எழுந்த சில மடல் தொடர்புகளும் இதற்குக் காரணம் என்று எண்ணுகிறேன். பொதுவாய் இது போன்ற ஒரு பதிவு செய்ய நான் முனைந்திருக்க மாட்டேன் என்று தோன்றினாலும், சில நாட்களாய் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்த எண்ணி இந்த வாய்ப்பை […]

Read Full Post »

ரேசன் கடைக்குச் சர்க்கரை வாங்கப் போவென்று பணித்த அம்மாவின் குரல்களை மாறுகாதில் விட்டுவிட்டுப் புத்தகங்களும் கையுமாகவே கிடந்த காலங்கள் உண்டு. ஆனால், நல்ல தமிழ்ப்புத்தகங்கள் படித்து நாட்கள் பலவாயிற்று இப்போது. அதனால் புத்தக விளையாட்டு ஆரம்பித்த போது கமுக்கமாய்ச் சத்தம் போடாமல் இருந்து கொள்ளலாம் என்றிருந்தேன். பின்னூட்டம் கூட விடாமல் இருந்து பார்த்தேன். ஆனால் அது நன்றாகப் பற்றிக் கொண்டு பரவும் வேகத்தில் நம்மையும் சூழாமல் விடாது என்று தெரிந்துவிட்டது. அழைப்பு விடுத்த நவன் பகவதிக்கும் பாலாஜி-பாரிக்கும் […]

Read Full Post »

« Prev - Next »