ஒரு தகப்பனும் மகனும் பக்கத்து ஊர்ச் சந்தையில் கழுதை வாங்கிவிட்டு எப்போதுமே நிம்மதியாக ஊருக்கு வந்ததாகச் சரித்திரமே இல்லை. எங்கள் வீட்டுக் கழுதைக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? பலகாலம் ஆனாலும் எங்கள் கழுதைக்கு இன்னும் கூட நிம்மதியில்லை. “நொண்டிக் கழுதைன்னு சொல்றாங்களேப்பா…” என்றார் அப்பா. “ஊர்ல வேலை இல்லாத வெட்டி ஆபீசர் ஆயிரம் சொல்லுவாங்க. அதுக்கு என்னப்பா பண்ண முடியும். நொண்டிக் கழுதைன்னாலும் ஊர்க்காரங்க பொதிய எல்லாம் சொமந்துட்டுத் தானே இருக்கு?” “இல்ல… என்னமோ இந்தக் கழுதை […]
Category Archive for 'இணையம்'
1. எட்டுத்தொடர் பத்தியொன்று எழுதவாருமென்று வாரமிரண்டின் முன்னழைத்தார் நண்பர் மணியன். வாரமொரு பதிவும்கூட எழுதும் ஒழுங்கில்லாக் காரணத்தால் உடனடியாகச் செவிமடுத்து எழுதமுடியவில்லை. ‘எட்டு அறவட்டுத் (random) தகவல்கள்’ என்பது பெரும்பாலும் ‘எட்டு சாதனைகள்’ என்றாகிப் போன பல பதிவுகளைப் பார்த்தபோது, நாமென்ன எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இடையில் அருணா ஸ்ரீனிவாசனின் அழைப்பும் வந்து சேர்ந்தது. அண்மைக்காலங்களில் தொடராட்டங்களில் பெரிதாய் நாட்டங்காட்டிச் சென்றிருக்கவில்லை என்றாலும் இந்த எட்டிற்காக அறவட்டாய்ச் சிலவற்றை எழுதலாம் எனத் தோன்றியது. முதலில், பல […]
‘தேன்கூடு கல்யாண்’-ஐ எனக்குச் சாகரன் என்னும் வலைப்பதிவராக மட்டுமே முதலில் தெரியும். அதிகம் பின்னூட்டமிட்டதில்லையாயினும் என்னைக் கவர்ந்த எழுத்துக்களுள் அவருடையதும் ஒன்று. அதனாலேயே ஏதோ ஒரு வலைப்பதிவு மீம் விளையாட்டொன்றில் என்னைக் கைகாட்ட எண்ணி அவர் சொல்லியிருந்த சிறுகுறிப்புக்கும் மகிழ்வாய் இருந்தது. அவருக்கும் என் பதிவுகளில் சிறு ஈர்ப்பு இருந்திருக்கக் கூடுமென மகிழ்வு. சாகரன் என்ற புனைப்பெயரிலேயே அறியப்பட்ட அவர் பெரிதாகத் தன்னை யாரென்று வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவரது பதிவின் களன் கொண்டு அவர் சவுதியில் இருக்கக்கூடும் […]
தமிழ்மணம் நிர்வாகப் பொறுப்புக்களில் இருந்து விலகுகிறேன்
Posted in இணையம் on Jul 13th, 2006
சுருக்கமாகச் சொல்கிறேன். அண்மையில் வலைப்பதிவுகளில் வெளிவரும் பதிவுகள் சிலவும், பின்னூட்டங்கள் சிலவும், அவற்றோடு இணைத்து விமர்சிக்கப்படும் தமிழ்மண நிர்வாகமும், அயர்வைத் தந்தாலும், எனது முடிவிற்குக் முழுமையான காரணங்கள் அவையல்ல. காசியின் வேண்டுகோளின் பேரில் தமிழ்மணம் ஆரம்பம் முதல் இணை நிர்வாகப் பொறுப்பில் முடிந்த உதவிகள் செய்து வந்திருக்கிறேன். அவரின் அண்மைய முடிவு காரணமாய் ஏற்பட இருக்கும் மாற்றங்கள் முழுமை பெறும் வரை பொறுப்பில் இருக்க முதலில் இசைந்திருந்தாலும், தற்போது அது இயலாததாக ஆகியிருக்கிறது. எனது வாழ்விலும் சில […]
தமிழ்மணமும் கருத்துச் சுதந்திரமும்
Posted in இணையம் on Jan 27th, 2006
ஆகா, புல்லரிக்கிறது! கருத்துச் சுதந்திரக் காவலர்கள் உருவிய வாளுடன் களத்தில் குதித்து விட்டார்கள். தாறுமாறாய்க் காற்றில் வீசிக் கொண்டு அவர்கள் போடுகிற சத்தத்தில் எதைச் சொன்னாலும் காதில் விழாமல் போகிற இக்கு இருக்கிறதென்றாலும் சில தெளிவுகளை முன்வைக்க வேண்டும். முதலில், ஒரு சக வலைப்பதிவாளராகவே இதனை எழுதுகிறேன். உங்களது சுதந்திரத்திற்கு இப்போது என்ன ஐயா ஊறு நேர்ந்துவிட்டது? பதிவுகளின் பின்னூட்டங்களை மட்டுறுத்துவது உங்கள் கொள்கைக்குப் புறம்பானது என்றால் விட்டுவிடுங்கள். யாரும் குரல்வளையைப் பிடித்துக் கொண்டு மிரட்டவில்லையே! உங்களுக்கு […]