இணையவெளி நண்பர்களுக்கு வணக்கம். கடந்த சில ஆண்டுகளாய் இவ்வலைப்பதிவில் நான் எழுதிய சில இடுகைகள் ஒரு அயலகத் தமிழனின் அனுபவக் குறிப்புக்களாய் “மெல்லச் சுழலுது காலம்” என்று ஒரு புத்தகமாக வடலி பதிப்பகம் (ஆக 26க்குப் பின் இணையத்தில் வாங்க) வழியாக இம்மாத இறுதியில் வெளி வருகிறது. விவரங்கள் கீழே. தொடர்ந்து இந்த எழுத்து அனுபவத்திற்கு ஊக்கம் அளித்து வரும் நண்பர்களுக்கு இச்சமயத்தில் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன். நாள்: 26 ஆகஸ்டு 2010 (வியாழன்) நேரம்: மாலை […]
Category Archive for 'இணையம்'
தமிழ்மணம் ஐந்தாண்டுகள் – காசியின் கேள்விகளும் என் பதில்களும்
Posted in இணையம் on Aug 25th, 2009
தமிழ்மணத்தின் ஐந்தாண்டுகள் நிறைவினை ஒட்டி இவ்வாரம் மீண்டும் நட்சத்திரமாகியிருக்கும் காசி எழுப்பி இருக்கும் கேள்விகளுக்கான எனது பதில்களைச் சுருக்கமாகவே எழுதி அனுப்பி இருந்தேன். ஆனால் முப்பதுக்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து சுருக்கமாகப் பதில் வந்தாலும் அதனை அவர் எப்படிக் கையாளப் போகிறார் என்றும் ஐயத்தைத் தெரிவித்திருந்தேன். அவரவர் பதிவில் வெளியிடுவதே சிறப்பாக இருக்கும் என அவரும் உணர்ந்து தெரிவிக்கவே, கிழே எனது கருத்துக்கள். 1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் […]
ஏழரைச் சனியனுக்குப் பரிகாரம் செய்யத் திருநள்ளாறு போக வேண்டும் என்று சோதிடர் சொன்னதன் காரணத்தால் சிறுவயதில் பல ஊர்களுக்கு ஒரு பயணமாகச் சுற்றுலா சென்று வந்திருக்கிறேன். அதோடு விட்டுவிடவில்லை சோதிடர். வாரா வாரம் வெள்ளிக் கிழமை மாரியம்மனுக்கு விளக்கேற்ற எண்ணெய் கொண்டு போகவேண்டுமென்றும் யோசனையொன்றைச் சொல்லி வைத்தார். சோதிடத்தின் மேல் நம்பிக்கை இருந்ததோ இல்லையோ, அந்தச் சோதிடர் மீது ஒரு பிடிப்பு இருக்கத்தான் செய்தது என்பதாலும், வீட்டினரின் வேண்டுகோளுக்கு இணங்கியும் இரண்டங்குல உயரச் சின்னத் தூக்குப்போசியை மிதிவண்டிக் […]
சோதனைக்கு ரெண்டு அர்த்தம் சொல்லலாம். எதையாவது செஞ்சுட்டு அது வேல செய்யுதான்னு பாக்கறது ஒண்ணு. அட, இப்படி ஆயிருச்சேன்னு அலுத்துக்கறது ஒண்ணு. இன்னைக்கு ரெண்டு அர்த்தமும் பொருந்துனாலும், என்னவோ அலுத்துக்க வேண்டாமுன்னு தோணுது. அதனால இது மொத அர்த்த சோதனை தான். தூக்கத்தக் கெடுத்துக்குட்டு ஒரு காரியம் செய்யறதுக்கும், தூக்கங்கெட்டு ஒரு காரியம் செய்யறதுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கலாம்னு நெனைக்கிறேன். வர்ட்டுங்களா? அப்புறம் பாக்கலாம்.
தமிழ்மணம் நிர்வாகக் குழுவில் நானும் ஒருவன்
Posted in இணையம் on Jul 16th, 2008
தமிழ்மணம் நிர்வாகக் குழுவில் நானும் ஒருவன் என்கிற முறையில் தமிழ்மணத்தின் மீதும் அதன் நிர்வாகக் குழு மீதும் அவற்றின் செயல்பாடுகள் மீதும் வைக்கப்படும் அவதூறுகளும் அபாண்டங்களும் என்னையும் எரிச்சலடையவும் வேதனைப்படவும் வைக்கின்றன. இவற்றின் மூலகர்த்தாக்கள் சில உட்காரணங்களுக்காக வேண்டுமென்றே இவ்வாறு செயல்படலாம். ஆனால் வேறு பலரோ அவர்களுடன் கொண்ட நெருக்கம் காரணமாகவோ, வேறு ஏதும் புரியாததாலோ, குழப்பத்தாலோ கூடத் தாங்களும் சேர்ந்துகொண்டு கும்மிக்கொண்டிருக்கின்றனர். எரிச்சலை அடக்கிக் கொண்டு, வேதனையை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன். எல்லோருக்குமே நேர […]