• Home
  • என்னைப் பற்றி

இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

Feed on
Posts
Comments
« மாண்டவன் கதை
வேனில் முடியும் கூட்டக் குறிப்புகள் »

தமிழ்மணம் நிர்வாகப் பொறுப்புக்களில் இருந்து விலகுகிறேன்

Jul 13th, 2006 by இரா. செல்வராசு

சுருக்கமாகச் சொல்கிறேன். அண்மையில் வலைப்பதிவுகளில் வெளிவரும் பதிவுகள் சிலவும், பின்னூட்டங்கள் சிலவும், அவற்றோடு இணைத்து விமர்சிக்கப்படும் தமிழ்மண நிர்வாகமும், அயர்வைத் தந்தாலும், எனது முடிவிற்குக் முழுமையான காரணங்கள் அவையல்ல.

காசியின் வேண்டுகோளின் பேரில் தமிழ்மணம் ஆரம்பம் முதல் இணை நிர்வாகப் பொறுப்பில் முடிந்த உதவிகள் செய்து வந்திருக்கிறேன். அவரின் அண்மைய முடிவு காரணமாய் ஏற்பட இருக்கும் மாற்றங்கள் முழுமை பெறும் வரை பொறுப்பில் இருக்க முதலில் இசைந்திருந்தாலும், தற்போது அது இயலாததாக ஆகியிருக்கிறது.

எனது வாழ்விலும் சில சிறிய/பெரிய மாற்றங்களினூடாகப் பயணிக்க வேண்டியிருப்பதால் அவற்றில் முழுக் கவனம் செலுத்த வேண்டியும் இந்த முடிவை எடுக்கிறேன். அதனால் இங்கு நிகழும் சில்லரைச் சண்டைகளுக்குச் சமரசம் செய்யவோ, காவல் இருக்கவோ தமிழ்மணத்திற்கென்று வேறு நிச்சயமான வகைகளில் பங்களிக்கவோ எனக்கு நேரமில்லை. வலைப்பதிவுகளில் எழுதுகிற நேரமும் குறையும் என்றாலும் அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்க முயல்வேன்.

இதுவரை தமிழ்மணத்தின் பங்களிப்பைப் புரிந்து கொண்டவர்களுக்கும், காசிக்கும் பிற நிர்வாகக் குழுவினருக்கும் ஆதரவாய் இருந்தவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்மணத்தின் அடுத்த பரிமாண வளர்ச்சி இன்னும் சிறப்பானதாகவே இருக்கும் என்று நம்புகிறேன். அதற்கான எனது வாழ்த்துக்கள் என்றும் உண்டு.

பகிர்க:

  • Click to share on Facebook (Opens in new window)
  • Click to share on Twitter (Opens in new window)
  • Click to share on WhatsApp (Opens in new window)
  • Click to email a link to a friend (Opens in new window)

Posted in இணையம்

47 Responses to “தமிழ்மணம் நிர்வாகப் பொறுப்புக்களில் இருந்து விலகுகிறேன்”

  1. on 13 Jul 2006 at 1:24 am1கோவி.கண்ணன்

    உங்களின் அடுத்த அடுத்த பணிகள் இனிதே அமைய வாழ்த்துக்கள்
    கோவி.கண்ணன்

  2. on 13 Jul 2006 at 1:29 am2ராசா

    வாழ்த்துக்கள்!!

  3. on 13 Jul 2006 at 1:33 am3துளசி கோபால்

    இதுவரை செய்த சேவைகளுக்கு நன்றி செல்வா.

    நீங்கள் எதில் ஈடுபட்டாலும், அதில் வெற்றிபெற்று ஒரு சிறப்பான இடத்தை
    அடைய வாழ்த்துகின்றொம்.

    நல்லா இருங்க.

  4. on 13 Jul 2006 at 1:35 am4நாகை சிவா

    எதிர்காலப் பணிகள் வெற்றிக்கரமாக அமைய வாழ்த்துக்கள்.

  5. on 13 Jul 2006 at 1:38 am5சந்தோஷ்

    செல்வராஜ்,
    இது வரையில் தமிழ்மணத்திற்கு நீங்க ஆற்றி இருக்கும் சேவை பாராட்டுதளுக்குரியது. உங்களுடைய புதிய பணியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  6. on 13 Jul 2006 at 1:39 am6Balachandar

    உங்களுடைய பங்களிப்பை பாராட்டுகிறேன். தமிழ் உங்கள் குழுவின் உழைப்பினால் உண்மையில் மணக்கிறது வலைப்பூக்களில்

  7. on 13 Jul 2006 at 1:41 am7நன்மனம்

    தங்களது சேவைக்கு நன்றிகள் பல. அடுத்த அடுத்த பணிகள் இனிதே அமைய வாழ்த்துக்கள்

  8. on 13 Jul 2006 at 1:44 am8வெற்றி

    செல்வராஜ் அண்ணா,
    நான் தமிழ்மணத்திற்குப் புதியவன். இருந்தாலும் இந்த சில மாதங்களுக்குள்ளேயே, உங்களின் பங்களிப்பை அவதானித்தேன். மிகவும் மெச்சத்தக்க வகையில் பங்களிப்புச் செய்து தமிழ்ச்சேவை புரிந்துள்ளீர்கள். அதற்கு நான் மிகவும் நன்றிக்கடமைப்பட்டுள்ளேன். தங்களின் இம்முடிவு வருத்தத்தை அளித்தாலும், உங்களின் எதிர்கால முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எனவே உங்களின் எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்.

  9. on 13 Jul 2006 at 1:47 am9குமரன் எண்ணம்

    ///
    அதனால் இங்கு நிகழும் சில்லரைச் சண்டைகளுக்குச் சமரசம் செய்யவோ, காவல் இருக்கவோ தமிழ்மணத்திற்கென்று வேறு நிச்சயமான வகைகளில் பங்களிக்கவோ எனக்கு நேரமில்லை
    ///

    தமிழ் மணத்தின் நிர்வாகப் பொறுப்பு என்பது முள்படுக்கை அதில் இவ்வளவு காலம் பணியாற்றியதற்காக நன்றிகள். உங்களின் அடுத்தடுத்த பணிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  10. on 13 Jul 2006 at 1:53 am10Chandravathanaa

    செல்வராஜ்

    இதுவரையான சேவைகளுக்கு நன்றி.
    தொடரும் உங்கள் பணிகளும் பொழுதுகளும் சிறப்பாகவும் இனிதாகவும் தொடர வாழ்த்துக்கள்.

    ஆரம்பத்திலேயே நீங்களாக வந்து உதவியதை இன்னும் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன்.
    http://manaosai.blogspot.com/2003/11/blog-post_26.html
    http://manaosai.blogspot.com/2003/11/blog-post_26.html

    நட்புடன்
    சந்திரவதனா

  11. on 13 Jul 2006 at 2:10 am11சுதர்சன்

    //எனது வாழ்விலும் சில சிறிய/பெரிய மாற்றங்களினூடாகப் பயணிக்க வேண்டியிருப்பதால் //

    வாழ்த்துக்கள்!

  12. on 13 Jul 2006 at 2:16 am12வசந்தன்

    இதுவரையான செயற்பாட்டுக்கு நன்றி.
    தொடரும் செயல்களுக்கு வாழ்த்து.

  13. on 13 Jul 2006 at 2:24 am13usha

    செல்வராஜ், செய்யும் செயல்கள் அனைத்திலும் நன்மையும் தீமையும் இணைந்துவரும் என்பதை நேற்றைய என் பதிவின் எதிரொலியாய் இதைப் பார்க்கிறேன். நீங்கள் இல்லை என்று சொன்னாலும், உங்களின் இந்த முடிவில் என் பங்கு சில சதவீதங்கள் உண்டு என்று நினைக்கும் பொழுது வருத்தமாய்தான் இருக்கிறது.

  14. on 13 Jul 2006 at 2:37 am14சோம்பேறி பையன்

    இதுவரை தமிழ்மணத்திற்கு உதவியதற்கு நன்றியும், உங்களின் வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன் !!

  15. on 13 Jul 2006 at 2:38 am15சதயம்

    நேற்றைய பணிகளுக்கும்……நாளைய இலக்குகளுக்கும் வாழ்த்துக்கள்.

  16. on 13 Jul 2006 at 3:28 am16hariharan

    வாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் தமிழ்மண சேவையில் சமீபத்திய பயனாளி. சிறப்பான முயற்சி. தங்கள் எதிகால இலக்குகளை இலகுவாகவும் விரைவாகவும் அடைந்திட வாழ்த்திடுகிறேன்.

  17. on 13 Jul 2006 at 5:09 am17குழலி

    செல்வராஜ்,
    இது வரையில் தமிழ்மணத்திற்கு நீங்க ஆற்றி இருக்கும் சேவைக்கு எனது பாராட்டுகள். உங்களுடைய புதிய பணியிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்….

    தமிழ்மண நிர்வாகியாக இருப்பது மிகக்கடினமானது இதற்கு பிரதமராக கூட இருந்துவிடலாம் போலிருக்கு

  18. on 13 Jul 2006 at 5:57 am18kavitha

    //எனது வாழ்விலும் சில சிறிய/பெரிய மாற்றங்களினூடாகப் பயணிக்க வேண்டியிருப்பதால் அவற்றில் முழுக் கவனம் செலுத்த வேண்டியும் இந்த முடிவை எடுக்கிறேன். அதனால் இங்கு நிகழும் சில்லரைச் சண்டைகளுக்குச் சமரசம் செய்யவோ, காவல் இருக்கவோ தமிழ்மணத்திற்கென்று வேறு நிச்சயமான வகைகளில் பங்களிக்கவோ எனக்கு நேரமில்லை.//

    உங்களின் இதுநாள் வரை சேவைக்கு நன்றி, நீங்கள் சொல்லியிருப்பது போன்று சண்டைகளை சமரசம் செய்ய உங்களின் நேரத்தை ஒதுக்க வேண்டாம் என முடிவு எடுத்திருப்பது சரியானதென்றே தோன்றுகிறது. வாழ்த்துக்குள்.

  19. on 13 Jul 2006 at 7:44 am19மணியன்

    தமிழ்மணம் இத்தனைதூரம் வளரக் காரணமாகவிருந்த ஒரு ஸ்தாபக நிர்வாகி விலகுவது எங்களுக்கு ஒரு பேரிழப்பே. ஆயினும் உங்கள் வருங்கால இலக்குகளை நோக்கி பயணிக்கையில் வளர்ந்த செடி இனி பிழைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் விடை பறைவோம். நீங்கள் எதிர்கொள்ளும் பயணங்கள் இனிமையாகவும் வளமிக்கதாகவும் அமைய இறைவனை வேண்டுகிறேன்.
    வலைப்பக்கங்களில் மீண்டும் காண்போம்.

  20. on 13 Jul 2006 at 9:17 am20Sivabalan V

    உங்களின் எதிர்கால முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  21. on 13 Jul 2006 at 9:32 am21காசி

    செல்வா,

    உங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் இன்னொருவரைப் பார்ப்பது கடினமே. அனைத்துப் பங்களிப்புக்களுக்கும் நன்றி.

    காலச் சக்கரம் உருண்டுகொண்டே இருக்கும் மீண்டும் வாய்ப்பு வரும்போது உங்களோடு எதிலாவது இணைந்து பணியாற்றுவேன் என்ற நம்பிக்கையுடன், உங்களுக்கு, ‘செய்வதில்லாம் வெற்றி’ கிட்ட வாழ்த்துகிறேன்.

    அன்புடன்,
    -காசி

  22. on 13 Jul 2006 at 9:40 am22ILA

    எதிர்காலப் பணிகள் வெற்றிக்கரமாக அமைய வாழ்த்துக்கள்

  23. on 13 Jul 2006 at 10:11 am23Annan Pasupathy

    Yes. What your conscience presses, it’ll be good.
    p.s.: since I browse out of my place, use of the the other language may be excused.

  24. on 13 Jul 2006 at 11:20 am24குமரன் (Kumaran)

    நான் சொல்ல நினைத்ததை மணியன் ஐயா தெளிவாகச் சொல்லிவிட்டார். அவர் சொன்னதையே வழி மொழிகிறேன். தமிழ்மணத்தில் உங்களின் பங்கிற்கு நன்றி. உங்களின் திட்டங்களுக்கு வாழ்த்துகள்.

  25. on 13 Jul 2006 at 12:17 pm25Vimala

    Best wishes, Try to continue writing as much as you can.

  26. on 13 Jul 2006 at 1:04 pm26Balaji

    தங்களுடைய பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.

    தங்களுடைய தமிழ்(மண) பணிக்கான நன்றி.

    -பாலாஜி

  27. on 13 Jul 2006 at 1:05 pm27கப்பி பய

    எதிர்காலப் பணிகள் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்…

  28. on 13 Jul 2006 at 1:24 pm28M.Thevesh

    Even though I don’t have my own web blog I used to visit tamizmanam reqularly.Your service as a Pioneer is tremendous.Your service loss to tamizmanam is unrepairable.Since you will have to concentrate on your own future, your enability to function can be understandable.Wish
    you sucess in your new endevour.

  29. on 13 Jul 2006 at 1:47 pm29dharumi

    thanks – for what you were.
    all the best – for what you want to be.

  30. on 13 Jul 2006 at 2:08 pm30Thangamani

    நீங்கள் எதில் ஈடுபட்டாலும், அதில் வெற்றிபெற்று ஒரு சிறப்பான இடத்தை அடைய வாழ்த்துகள்.

    நன்றி செல்வா.

  31. on 13 Jul 2006 at 2:21 pm31pandi

    சேவைகளுக்கு நன்றி.
    தொடரும் உங்கள் பணிகளும் பொழுதுகளும் சிறப்பாகவும் இனிதாகவும் தொடர வாழ்த்துக்கள்.

  32. on 13 Jul 2006 at 2:25 pm32chandra

    thanks to you, kasi and the rest of the team for all the contributions. but the decision and developments are hard to accept and leaves a sense of vaccuum. best wishes.

  33. on 13 Jul 2006 at 2:31 pm33saravana

    WE all say thank you. You wrote about vankali (SriLanka)Children Murder. You gave voice for voiceless people. god bless you

  34. on 13 Jul 2006 at 2:40 pm34selvanayaki

    கிணற்றிற்குள் எதேச்சையாக வழுக்கி விழுந்துவிட்டாலும், அதைப் பயன்படுத்திக் குளிக்கிற வேலையை அங்கேயே முடித்துவிடுகிற சாமர்த்தியமான சந்தர்ப்பவாதிகளால் நிறைக்கப்பட்டிருக்கிற உலகில், எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் சமூகத்திற்கோ அல்லது ஒரு தனிமனிதனுக்கோ நல்லது செய்பவர்கள் மிகவும் குறைவு. “தமிழ்மணம்” என்கிற அமைப்பையும் அதற்குப் பங்களிப்புச் செய்துகொண்டிருக்கிற நண்பர்களையும், இதோ இதுநாள்வரை பங்காற்றி இப்போது விலகும் உங்களையும் நான் மேற்சொன்னதில் இரண்டாவது வகையாகப் பார்க்கிறேன். ஒரு பயனாளி என்ற முறையில் மனமார்ந்த நன்றி. எழுதிக்கொண்டிருங்கள் முடிகிறபோதெல்லாம்.

  35. on 13 Jul 2006 at 2:48 pm35S. Sankarapandi

    அன்புள்ள செல்வராஜ்,

    தமிழ்மணத்தின் அன்றாட வளர்ச்சியில் காசிக்குப் பக்கபலமாக இருந்தவர்களில் ஒருவர் என நினைக்கிறேன்.

    உங்களுடைய புது முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    நல்ல தமிழ்நடையும், பக்குவமாய்ச் சொல்லும் மனமுதிர்ச்சியும் கொண்ட உங்கள் பதிவுகளை நேரம் கிடைக்கும் பொழுது தொடர்வீர்கள் என நம்புகிறேன்.

    நன்றி – சொ. சங்கரபாண்டி

  36. on 13 Jul 2006 at 5:05 pm36Padma Arvind

    உங்களுடைய புது முயற்சிகளில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    நல்ல தமிழ்நடையும், பக்குவமாய்ச் சொல்லும் மனமுதிர்ச்சியும் கொண்ட உங்கள் பதிவுகளை நேரம் கிடைக்கும் பொழுது தொடர்வீர்கள் என நம்புகிறேன்.

    அதுவேதான் என் கருத்தும்.

  37. on 13 Jul 2006 at 5:40 pm37Dubukku

    உங்கள் புது முயற்சிகளிலும் பணிகளிலும் சிறக்க வாழ்த்துக்கள்!!
    இதுவரை தமிழ்மணத்தில் காசியும், நீகளும் மற்ற நிர்வாகிகளும் ஆற்றிய சேவைக்கும் இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  38. on 13 Jul 2006 at 7:05 pm38தமிழ் சசி

    அன்பு செல்வராஜ்,

    உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    உங்களின் பதிவுகளை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்

  39. on 13 Jul 2006 at 7:31 pm39பொன்ஸ்

    செல்வராஜ், உங்கள் புதிய முயற்சிகளுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துக்கள் .

  40. on 13 Jul 2006 at 10:24 pm40ennar

    ஒரு குழுமத்தில் ஒரு பொருப்பான பதவியில் இருந்தால் அதை சிறப்பாக செய்ய வேண்டும் அவ்வாறு செய்ய இயலாது என்றால் அவ்வாறு செய்படத்தக்கவர்களுக்கு இடங்கொடுத்து நீங்குதல் நன்றுதான் ஆனால் தமிழ் மணத்தில் இன்றுள்ள சூழல் சற்று கடிணமான செயல்தான்; இது வரையில் சிறப்பாக செயல் பட்ட செல்வராடஜுக்கு வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்

  41. on 13 Jul 2006 at 11:56 pm41சுதர்சன்.கோபால்

    வாழ்த்துக்கள்!!!

  42. on 14 Jul 2006 at 2:04 am42அருள் செல்வன் . க

    செல்வராஜ்,
    அனைத்துக்கும் நன்றி. இன்னொருமுறை இதுவரை இருந்த தமிழ்மணம் போன்ற குழு அமைவது கடினம். எழுதுவதை முடிந்த அளவு செய்யுங்கள் அடுத்த கட்ட செயல்பாடுகளுக்கு வாழ்த்துக்கள்.

    அருள்

  43. on 14 Jul 2006 at 6:56 am43Kana Praba

    வணக்கம் செல்வராஜ்
    மீண்டு(ம்) தமிழ்மணத்தில் இணைய என் வாழ்த்துக்கள். இதுவரை உங்கள் பணியைச் சிறப்பாகச் செய்தமைக்கும் என் பாராட்டுக்கள்

  44. on 14 Jul 2006 at 7:08 am44மாயவரத்தான்

    சிறிய/பெரிய மாற்றங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

  45. on 14 Jul 2006 at 7:27 am45Thangavel

    Wish you all the best

  46. on 14 Jul 2006 at 9:55 am46SK

    Dear Mr. Selvaraj,
    It is a great loss. The circumstances under which you are releiving is regrettable. I wish you all the best! Good-Luck!

  47. on 17 Jul 2006 at 5:25 am47Geetha Sambasivam

    தமிழ் மணத்தில் சிறப்புப் பெற்ற உங்கள் பணி நிர்வாகம் உங்கள் வாழ்க்கையிலும் அதே சிறப்புப் பெற உங்களுக்கு உறுதுணையாக என்னுடைய வாழ்த்துக்கள். உங்கள் குடும்பத்தையும் நன்கு கவனிக்க முடியும் என்பதே ஒரு ஆறுதல் தரும் விஷயம்.

  • அண்மைய இடுகைகள்

    • பூமணியின் வெக்கை
    • வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis)
    • பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • குந்தவை
    • நூற்றாண்டுத் தலைவன்
    • அலுக்கம்
  • பின்னூட்டங்கள்

    • இரா. செல்வராசு on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • RAVIKUMAR NEVELI on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • Ramasamy Selvaraj on வீட்டுக்கடன்–அசல், வட்டி, தவணை
    • இரா. செல்வராசு on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • THIRUGNANAM MURUGESAN on அனைவர்க்குமாம் கல்வியும் வளர்ச்சியும்
    • இரா. செல்வராசு » Blog Archive » வணிகப்பெயர்த் தமிழாக்கம் – ஒரு கட்டாய்வு (Case analysis) on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • Balasubramanian Ganesa Thevar on பொரிம்புப்பெயரும் புறப்பெயரும்
    • செல்லமுத்து பெரியசாமி on குந்தவை
  • கட்டுக்கூறுகள்

    • இணையம் (22)
    • இலக்கியம் (16)
    • கடிதங்கள் (11)
    • கணிநுட்பம் (18)
    • கண்மணிகள் (28)
    • கவிதைகள் (6)
    • கொங்கு (11)
    • சமூகம் (30)
    • சிறுகதை (8)
    • தமிழ் (26)
    • திரைப்படம் (8)
    • பயணங்கள் (54)
    • பொது (61)
    • பொருட்பால் (3)
    • யூனிகோடு (6)
    • வாழ்க்கை (107)
    • வேதிப்பொறியியல் (7)
  • அட்டாலி (பரண்)

  • Site Meter

  • Meta

    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org

இரா. செல்வராசு © 2025 All Rights Reserved.

WordPress Themes | Web Hosting Bluebook