தளம் – மாறியவையும் மாறாதவையும்
Posted in இணையம், கணிநுட்பம் on Mar 22nd, 2005
“சும்மா வந்த மாட்டப் பல்லப் புடிச்சுப் பாத்தவன்” கதையாய் எனது முந்தைய இணையதளச் சேவை நிறுவனத்தார் சொல்லாமல் கொள்ளாமல் பெரிய நெற்றிப் பட்டையாய் கூகிள் விளம்பரத் தட்டி வைக்கத் தொடங்கியது பிடிக்காமற் போயிற்று. இலவசமாய்ச் சேவை கொடுக்கிற எங்களுக்குத் தள மாற்றங்கள் செய்ய உரிமை இருக்கிறது என்று தான்தோன்றித்தனமாக அவர்கள் நடந்து கொள்ள, இணையம் ஒரு சுதந்திரமான இடம், நான் வேறிடம் பார்த்துக் கொள்கிறேன் போ என்று மாறிவிட்டேன். அந்த விளம்பரத் தட்டியைத் தூக்கி எறியக் கேட்ட […]