Nov 6th, 2003 by இரா. செல்வராசு
முதலில் இதோ தண்டூராச் சத்தம். டகர டகர டகர டகர டும்… இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால், இதோ நானும் என் வலைப்பதிவுகளோடு வந்துவிட்டேன். குறைந்தது நான்கு நாட்களாவது எழுதினால் தான் வெளியே சொல்வது என்று ஒரு சுய இலக்கு வைத்திருந்தேன். அதை வெற்றிகரமாக அடைந்துவிட்டதால் இந்த அறிவிப்பு.
வயதில், அனுபவத்தில், ஆற்றலில், அறிவில், முயற்சியில், சிந்தனையில் மிகப் பெரியவர்களெல்லாம் இந்த வலைப் பதிவுகளில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் எனக்குப் பிடித்த சிலரை இங்கே தனியாய்ச் சுட்டி இருக்கிறேன் (பிடித்தவை பகுதி பார்க்க). பெரும் முழக்கத்தோடு கலக்கிக் கொண்டிருக்கும் அவர்களை எல்லாம் தாண்டி இங்கே என் சிறிய மூலைக்கு நீங்கள் வர நேர்ந்தால், வணக்கம். வாருங்கள் – என் எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு இந்த எழுத்துக்களோடு சற்று உறவாடி விட்டு உங்கள் கருத்துக்களைத் தந்து விட்டுச் செல்லுங்கள். நன்றி.
Continue Reading »
Posted in பொது | Comments Off on எதற்கு ?
Nov 5th, 2003 by இரா. செல்வராசு
சென்ற வாரத்தில் பார்த்த பாபா படத்தைப் பற்றி ஒரு சிறு குறிப்பு. எல்லோரும் ‘பாய்ஸ்’ பட விமரிசனம் எழுதிக் கொண்டிருக்கும் போது ‘பாபா’ என்கிற அரதப் பழைய படம் பற்றி எழுதுகிறேனே என்று பார்க்காதீர்கள். நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் ! (இது ஒரு பாபா வசனம் :-)). ஏற்கனவே பல விமர்சனங்கள் படித்திருந்ததால், பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தான் பார்க்க அமர்ந்தோம். ஒரு படம் பிடிப்பதும் பிடிக்காததும் பார்ப்பவர்களின் அந்த நேர மனநிலையையும், அது உண்டாக்கும் விளைவுகளையும் பொருத்தும் அமைகிறது என்பது என் எண்ணம். அந்த கண்ணோட்டத்தில் இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம், அமெரிக்காவில் வளரும் என் ஐந்து வயது மகள்.
Continue Reading »
Posted in திரைப்படம் | Comments Off on பாபா – ஒரு குழந்தைகள் படம்
Nov 3rd, 2003 by இரா. செல்வராசு
ஹாலோவின் – என்னவோ ஒரு பூசனிக்காய்த் திருவிழா, சென்ற வெள்ளியிரவு சுமார் இரண்டு மணி நேரம் எங்கள் தெருவே கொஞ்சம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. பார்க்க நன்றாகத் தான் இருந்தது. சாதாரணமாய், இருட்டுக்குத் துணையாய் நிற்கும் ஒற்றை விளக்குக் கம்பங்களும், இலைகளை உதிர்த்துக் கொண்டிருக்கும் நிறம் மாறிய மரங்களும் தவிர வேறு நடமாட்டங்கள் அதிகம் இல்லாத இளங்குளிர்காலத்து சாலை, அன்று விதம் விதமாய் வேடங்கள் அணிந்தபடி வீட்டுக்கு வீடு திரிந்து மிட்டாய் வேட்டை ஆடிய சிறார்களைச் சுமந்து சந்தோஷப் பட்டுக் கொண்டு இருந்தது.
Continue Reading »
Posted in வாழ்க்கை | Comments Off on சூனியக்கிழவிகளும் மிட்டாய்களும்
Oct 30th, 2003 by இரா. செல்வராசு
நேற்று இரவு தமிழகத்தில் இருந்து நான் முன்பின் அறிந்திராத ஒரு பெண்மணி தொலைபேசியில் அழைத்திருந்தார். என் அப்பாவிற்குத் தெரிந்த அரசு அலுவலகத்தில் அவர் வேலை செய்வதாகவும், அவர் தான் என் தொடர்பு எண் கொடுத்தார் என்றும் கூறவே, அதற்குள் யாரிந்தத் தொலைவிற்பனையாளரோ என்று என்னுள் ஏற்பட்டிருந்த எரிச்சல் சற்றே தணிந்தது. இல்லை, அமெரிக்க அரசின் ‘என்னை அழைக்காதீர்’ பட்டியலில் இன்னும் நான் என் பெயரைச் சேர்க்கவில்லை.
Continue Reading »
Posted in பொது | Comments Off on பத்தாயிரம் டாலர் பரிசு
Oct 25th, 2003 by இரா. செல்வராசு
நல்ல நடையில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்களைப் படிக்க எனக்குப் பிடிக்கும். படிப்பதோடு இருந்து விடாமல் படைப்பவனாகவும் ஆக வேண்டும் என்பது என் நீண்ட நாள் அவா. இதுநாள் வரையில் பெரியதாய் எதுவும் எழுதிய அனுபவம் எனக்கு இல்லை என்றாலும், சிறிது சிறிது எழுதிய அனுபவங்களும், அதோடு முக்கியமாக, எழுத வேண்டும் என்கிற உந்துதலும் நிறையவே இருப்பதால், அவற்றை வைத்து என்னைச் செலுத்திக் கொள்கிறேன். இனி வரும் நாட்களில், இந்த வலைப் பக்கங்களில், என் எண்ணக் கிறுக்கல்களைப் பதிவு செய்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் கருத்துக்களையும் விமரிசனங்களையும் தெரிவித்து ஆதரவளியுங்கள். நன்றி.
Continue Reading »
Posted in பொது | 1 Comment »