Jul 1st, 1993 by இரா. செல்வராசு
இனிய தோழி சுனந்தா,
“இந்த ஊரில் உள்ள கோயில் அர்ச்சகர் ஒரு கதை சொன்னார் சுனந்தா – அதைப் பற்றி…”
இந்த ஊரில் உள்ள இந்திய மக்களெல்லாம் சேர்ந்து சின்னதாய் ஒரு கோயில் கட்டி உள்ளனர் சுனந்தா. கூட்டு முயற்சிக்குச் சிறந்த எடுத்துக் காட்டு அது. இவ்வளவு தொலைவு வந்த போதும், நம்முடைய கலாச்சாரத்தோடு இன்னும் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்னும் இவர்களின் ஆவல் அதில் நன்கு வெளிப்படுகிறது.
Continue Reading »
Posted in கடிதங்கள் | Comments Off on இனிய தோழி சுனந்தாவிற்கு…! – 1/06 –
Jun 30th, 1993 by இரா. செல்வராசு
இனிய தோழி சுனந்தா,
‘வேண்டுகிறேன்’ என்று எழுதும் போது, நாம் கடவுள் பற்றிப் பேசியதெல்லாம் கூட எனக்கு நினைவுக்கு வருகிறது சுனந்தா…
ஒருவனே தேவன், கடவுள் ஒன்றே, என்று கூறிக் கொண்டே, மக்கள் கடவுளுக்குப் பல பெயர்கள் இட்டும், பல மதங்கள் பிரித்தும், சண்டையிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு நாம் மட்டும், ‘சரி, நமக்கு ஒரு தெய்வமே போதும்’, என்று எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அந்த ஒரு தெய்வத்தின் பெயரைச் சொல்லி வணங்கிவந்தோம். ஆனால், அதே சமயம், மற்றவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதனால், மற்றவர்களின் எண்ணங்களை எடுத்தெறியவில்லை நாம். நமக்கு என்று ஒரு தனி வழி ஏற்படுத்திக் கொண்டோம்.
Continue Reading »
Posted in கடிதங்கள் | Comments Off on இனிய தோழி சுனந்தாவிற்கு…! – 1/05 –
Jun 29th, 1993 by இரா. செல்வராசு
இனிய தோழி சுனந்தா,
‘எல்லாம் நன்மைக்கே’ என்பது எனது தாரக மந்திரம் சுனந்தா ! உனது அன்னை கூட உன்னிடம் அடிக்கடி அப்படிக் கூறுவதாய் எழுதி இருந்தாய். நாங்கள் இருவரும் ஒரே நாளில் (ஆக 19) பிறந்தவர்களல்லவா! அதனால் எங்கள் எண்ணங்கள் கூடப் பல சமயம் ஒத்துத் தான் இருக்கும். 🙂 :-). ஆகா, அவர்கள் கைச் சமையலில் செய்த உணவை உண்டு எத்தனை நாட்கள் ஆயிற்று !
Continue Reading »
Posted in கடிதங்கள் | Comments Off on இனிய தோழி சுனந்தாவிற்கு…! -1/04-
Jun 28th, 1993 by இரா. செல்வராசு
இனிய தோழி சுனந்தா,
நீ நேரில் இல்லாத குறையை உனது கடிதங்கள் தான் தீர்த்து வைக்கின்றன. நாள் பூராவும் செய்கின்ற (அல்லது செய்யாத :-))வேலையில் களைத்துப் போய் வீடு திரும்புகிற நேரத்தில் உனது கடிதம் மட்டும் கண்டுவிட்டால், உள்ளம் எப்படி எல்லாம் துள்ளுகிறது தெரியுமா? வாடிப் போன மலர் போல் இருப்பவன், ஒரு நொடியில், புத்தம் புதிதாய்ப் பூத்தது போல் ஆகி விடுகிறேன். இதைக் கவனித்து விட்ட நண்பர்கள்,”ஹே… யாரிவளோ… உந்தன் காதலியோ…”என்றெல்லாம் சற்றுக் கேலி செய்வர்.
Continue Reading »
Posted in கடிதங்கள் | Comments Off on இனிய தோழி சுனந்தாவிற்கு…! – 1/03 –
Jun 25th, 1993 by இரா. செல்வராசு
இனிய தோழி சுனந்தா,
பள்ளி இறுதி வருடங்களில் நாம் எவ்வளவு புத்தகங்கள்படித்தோம்!நினைவிருக்கிறதாஉனக்கு—அவற்றுள் பல கதைப்புத்தகங்கள் தான் என்றாலும், அதில் வருகின்றபாத்திரங்களை, நிகழ்ச்சிகளைச், சரி, தப்பு, இயல்பு என்று எப்படி எல்லாம்அலசி இருக்கிறோம். உன் வீட்டில், என் வீட்டில், திண்டல் மலை அடிவாரத்தில்,ஐஸ் கிரீம் கடைகளில்,12-ஆம் நம்பர் பேருந்தின் பின் சீட்டில், மாரியம்மன்கோவில்திருவிழாவின் போது வந்த கறும்புச் சாற்றுக் கடைகளில், என்றுஎவ்வளவு இடங்களில் இது பற்றி விவாதித்துஇருக்கிறோம்.
Continue Reading »
Posted in கடிதங்கள் | 1 Comment »