Posted in பொது on Aug 17th, 2005
ஓ! தயவு செய்து மும்பை விமான நிலையம் பற்றி மட்டும் ஆரம்பித்து வைத்து விடாதீர்கள். ‘இந்தியாவின் நுழைவாயில்’ என்று இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் நாட்டின் பெயரையே கெடுத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. வெளிநாட்டில் இருந்து வருகிற இந்தியர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டினரும் கூட முதன் முதலில் காலடி எடுத்து வைக்கிற அந்த முதல்க் கணங்களிலே தானே ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் உலகமயமாக்கலும், தட்டையாகும் உலகும், கணித்திறன் மற்றும் மாறுகரைப்பணிகளும் இந்தப் பக்கமாய்த் திரும்பிக் […]
Read Full Post »
Posted in இலக்கியம், பொது on Aug 16th, 2005
மொட்டை வெய்யலாய் இருந்தாலும் நடந்தே செல்வது என்று முடிவு செய்தேன். ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து எங்கள் வீடு இருக்கும் (இருந்தவென்றாகப்போகிற) வீரப்பன் சத்திரம் சுமார் ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கும். ஒரு ஆட்டோவில் ஏறிச் சென்றால் ஐந்து நிமிடத்தில் வீட்டில் இருக்கலாம். இருந்தாலும் ஊருக்குத் தனியனாக நான் மட்டும் சென்றதில் கிடைத்த நடைச் சுதந்திரத்தை அனுபவித்தவாறு கிளம்பினேன். அவசரமாய் ஆட்டோவில் அல்லது நகரப் பேருந்தில் சென்றால் எப்படி வேடிக்கை பார்த்துச் செல்வது? அவ்வப்போது […]
Read Full Post »
Posted in பொது on Aug 7th, 2005
ஊர்ப்பக்கம் போயிருந்தபோது கிராமம் ஒன்றின் சாலையில் மாடுகளைக் கூட்டிக் கொண்டு ரெண்டு பேர் போய்க்கொண்டிருந்தார்கள். சந்தைக்குப் போனவையா வாங்கி வரப்பட்டவையா தெரியவில்லை. வயதாகியிருந்தது. நின்று கொண்டிருந்த இடத்தைத் தாண்டிப் போயின. சிறிது நேரம் கழித்துக் கார் அவர்களைத் தாண்டிப் போன போது ஒரு மர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள் மாடுகளை ஓட்டிச் சென்றவர்கள். மாடுகளும் ஆசுவாசமாய் நின்று கொண்டிருந்தன. சலுப்பும் ஓய்வும் மாடுகளுக்கும் உண்டு. ஓட்டிகளுக்கும் உண்டு. இன்னும் எத்தனை தூரமோ?
Read Full Post »
Posted in பொது on Jun 30th, 2005
உறங்காத ஓர் இரவில் வெளியே வந்தேன். பொன்னிற ஒளியிற் சந்திரன் குளித்துக் கிடந்தான். சந்திரன் ஆணா பெண்ணா? நிலவென்றால் பெண். சந்திரன் என்றால் ஆண்? ம்? அந்தக் கவலையெல்லாம் இன்றி ‘அது’ அதைச் சுற்றிக் கொண்டிருந்தது. சுற்றுவது அந்த நிமிடம் பார்க்கத் தெரிவதில்லை. சுற்றுகிறது என்பது கற்றது தானே. இங்கே கல்வி என்பது பார்த்து உணர்ந்து அறிந்தவர்கள் சொன்னதை ஏற்றுக் கொள்வது. ஆனால் எல்லாக் கற்பிதங்களையும் ஏற்க இயலாமல் போகிறது. சிலவற்றைக் கட்டுடைக்க வேண்டியிருக்கிறது. கல்வி வேறு, […]
Read Full Post »
Posted in கணிநுட்பம், பொது on Jun 29th, 2005
ரவி ஸ்ரீனிவாஸ், பத்ரி, வெங்கட் முதலானோர் ஒரு புத்தகப் பட்டியல் தரவுதளம் உருவாக்குவது பற்றிக் கருத்துக்களை எழுப்பியும் சோதனை முயற்சிகளை மேற்கொண்டும் இருக்கின்றனர். பலரும் இது போன்ற ஒரு வசதிக்காக ஏங்கி இருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது ஒரு நல்ல முயற்சி. கிடைக்கிற சில நேரத்தில் படிக்க நல்ல (தம் விருப்பத்திற்கேற்ற) புத்தகங்கள் தெரிவு செய்ய இது போன்ற ஒரு தரவுதளம் உதவும் என்பது உறுதி. இப்படியான ஒரு பட்டியலுக்கும், தரவுதளத்திற்கும், விமர்சனங்களுக்கும் நானும் ஏங்கி […]
Read Full Post »