சாலையிற் போன மாடுகள்
Aug 7th, 2005 by இரா. செல்வராசு
ஊர்ப்பக்கம் போயிருந்தபோது கிராமம் ஒன்றின் சாலையில் மாடுகளைக் கூட்டிக் கொண்டு ரெண்டு பேர் போய்க்கொண்டிருந்தார்கள். சந்தைக்குப் போனவையா வாங்கி வரப்பட்டவையா தெரியவில்லை. வயதாகியிருந்தது. நின்று கொண்டிருந்த இடத்தைத் தாண்டிப் போயின.
சிறிது நேரம் கழித்துக் கார் அவர்களைத் தாண்டிப் போன போது ஒரு மர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள் மாடுகளை ஓட்டிச் சென்றவர்கள். மாடுகளும் ஆசுவாசமாய் நின்று கொண்டிருந்தன. சலுப்பும் ஓய்வும் மாடுகளுக்கும் உண்டு. ஓட்டிகளுக்கும் உண்டு.
இன்னும் எத்தனை தூரமோ?
சலுப்பும் ஓய்வும் மாடுகளுக்கும் உண்டு. ஓட்டிகளுக்கும் உண்டு. இன்னும் எத்தனை தூரமோ?
விடுமுறையில் குடும்பத்துடன் சொந்த ஊர் சென்று ஓய்வெடுத்துவருவதைத்தானே குறிப்பிடுகிறீர்கள் ? :-))
அட! உங்க விளக்கம் அருமையா இருக்கு லதா 🙂 அப்படியே வச்சுக்கலாம். எழுதி முடிச்சப்புறம் எனக்கே தெரியாமல் எதாவது ஒரு எழுத்திசம் இதிலே ஒளிஞ்சுக்கிட்டிருக்கலாம்னு நெனச்சேன். இப்படித் தடுக்கி உளுந்து கத்துக்கலாம்னு பாக்கறேன்! 🙂
ஊருக்கு செல்லும் பொழுது மாடுகள் என்னையும் ஈர்க்கும். ஸ்கூலுக்கு சைக்கிளிலில் செல்லும் பொழுது குறுக்கே வந்த மாடுகள், காலேஜ் செல்லும் பொழுது நிதானமாக ரோடின் நடுவில் அமர்ந்து அசை போட்ட மாடுகள் என்று ஏதோ சில நினைவுகளை களறிவிடுவதால்..
ஆனால் இப்பொழுதேல்லாம் சென்னையில் அதிக மாடுகள் கண்ணில் படுவதில்லை..
கவலையே வேண்டாம் அடுத்தமுறை நீங்கள் ஊருக்கு வரும்போது வண்டிமாடுகளை தரிசிக்கவே முடியாது.வண்டிகளெல்லாம் விறகுக்காக உடைக்கப்படுகின்றன-மாடுகள் விலை சாதாரண விவசாயி வாங்கும் வகையில் இல்லை-கேரளாவிற்கு[..] அனுப்பப்படும் மாடுகளே அதிகம்-மாட்டுவண்டிகள் இனி மாண்டவண்டிகள்.