என் அம்மாவிடமும் அப்பாவிடமும் இருக்கிறது. அப்பச்சியிடமும் அம்மாயியிடமும் இருந்தது. நான் சிறுவனாய் இருந்த போதே இறந்து போன அப்பத்தாவிடமும், தான் சிறுவனாய் இருந்த போது இறந்து போன தன் தந்தை, என் தாத்தனிடமும் கூட இருந்திருக்கும், யார் கண்டது? குடும்ப வரலாற்றில் அதற்கு முன்னர் வேர் பிடித்துச் சென்று பார்க்கத் தரவுகள் இல்லை. வழி வழியாய் என் மூதாதையருக்குக் கிடைத்த தலைமுறைச் சீதனம் – அது எனக்கும் கிடைத்திருக்கக் கூடிய அலுக்கம் ஓரிரு முறை இருந்த போதும் […]
Category Archive for 'பொது'
குவிவிளக்கின் ஒளிப்பாய்வில் பளபளக்கும் பட்டுடுத்தி, மையிட்ட கண்ணுள்ளே கருவிழிகள் மிளிர்ந்தாட, கருங்கூந்தல் பெருஞ்சடையில் ஞெகிழ்கனகு மல்லியொளிர, அபிநயக்கும் செங்கரங்கள் பேசுமொரு பொன்மொழியால், “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு” என்றே நம் தமிழ்ச் சிறுமியர் சிலர் ஆடிய நல்லாட்டத்தில் எனை மறந்திருந்தேன் ஒருநாள். சென்ற மாதத்துச் சுதந்திர விழவின் அமெரிக்க நிகழ்வொன்றில். “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம் எல்லோரும் சமமென்ப துறுதி யாச்சு” என்று தொடர்ந்த வரிகளை, கூடியிருந்த ‘இந்திய’ மக்களின் வெவ்வேறு பின்புலத்தை வைத்து, […]
ஒரு தமிழ்மீடியப் பையனின் பீட்டர் ஸாங்க்ஸ் அனுபவத்தை விட ஆங்கில மிடையவழி வந்த எனது ஆங்கிலப் பாடல் கேள்விஞானம் மிகவும் குறைவு. சற்றேறக்குறையச் சுழி என்றே சொல்லலாம். அமெரிக்கா வந்தபின் சதா பாட்டுக்களில் திளைத்திருந்த அறைத்தோழர்களும் நண்பர்களும் காரணமாய் அங்கங்கு ஒட்டிக் கொண்ட சில பாடல்களில் இரண்டு மட்டும் குறிப்பிடத் தக்கவை. நினைவில் நிற்பவை. ஒன்று மடோன்னாவின் ‘இது என் விளையாட்டரங்காய் இருந்தது’ (This used to be my playground). இரண்டாவது, பாப் மார்லியின் ரெக்கே […]
பெங்களூரில் வெய்யலடிக்குதுங்க
Posted in பொது on Dec 9th, 2005
பெங்களூர்ல நாலஞ்சு நாளா மழையில்லை. நல்லா வெய்யலடிக்குது. சென்னையில தான் புயல்/மழை வருதுன்னு சொல்றாங்களே 🙁 ஓவியர் நிவேதிதா, என் மகள். அறி|புனை அருளிடம் சிஷ்யையாகச் சேர்த்து விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன். 🙂
அதென்னவோ இந்த வருடம் “பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்” என்று பாடுவதற்கேற்றாற் போல் பெங்களூரில் மழை பெய்யோ பெய் என்று பெய்கிறது. தொப்பலாக நனைந்த துணியை உலர்வதற்குள் மீண்டும் மீண்டும் எடுத்து நீரினுள் முக்கியெடுத்துக் காயப்போடுவது போல் இருக்கிறது ஊர். ஐந்து வருடமாய்க் காணாத மழையெல்லாம் இந்த ஐந்தாறு வாரங்களில் கண்டதில் இந்தப் பகுதியில் இருக்கிற அணைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. அதில் வருடாந்திரக் காவிரிப் பிரச்சினையொட்டிய அரசியற் காட்சிகள் அதிகமாய் அரங்கேற வாய்ப்பில்லை. சின்ன வயதில் ‘தெய்வத் […]