Posted in கண்மணிகள் on Aug 29th, 2006
ராக்சுபரி தத்துவம் (தமிழில்: செல்வராஜ்)
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமாகவும், தம் திறமைகளில், ஆர்வங்களில், அனுபவத்தில் ஒருவருக்கொருவர் பெரிதும் வேறுபட்டவர்களாகவும் இருக்கலாம்.
குழந்தைகளின் தொடர் வளர்ச்சிக்கு அவர்களுக்கென்று தேவைகள் இருக்கின்றன என்பது இனங்கண்டு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். இத்தேவைகளுள் உடல் நலத்திற்கானதும், அன்பு, பாதுகாப்பு, நம்பிக்கை, வெற்றி, சக வகுப்பினரினதும் ஆசிரியர்களினதுமான கவனிப்பு எல்லாம் அடக்கம்.
குழந்தைகளின் நல் மனநலத்திற்கும், அவர்களுக்கு ஒரு சாதனையுணர்ச்சியை உண்டாக்குவதற்கும் சாதகமான ஒரு கட்டமைப்பு அவசியம்.
பல குழந்தைகளுள் ஒவ்வொருவரும் ஒரே மாதிரியான குறிக்கோள்களை எய்துவதற்கு வெவ்வேறு […]
Read Full Post »
Posted in கண்மணிகள், வாழ்க்கை on Aug 27th, 2006
வெஜினி அங்க்கிள் -நிவேதிதா
(தமிழில்: செல்வராஜ்)
முன்ன ஒரு காலத்தில ஒரு குட்டிபூதம் இருந்துச்சாம். அது எப்பப் பாத்தாலும் காய்கறில்லாம் சாப்பிட மாட்டேன்னு அடம் புடிச்சுட்டே இருக்குமாம்.
அவுங்கம்மா அதுக்கிட்ட, “சாப்பிடுரா செல்லம். காய்கறில்லாம் உன் உடம்புக்கு ரொம்ப நல்லது” ன்னு சொன்னாங்களாம்.
அறிவுக்குறும்பு பண்றதுக்கு ரொம்பப் புடிச்ச குட்டிபூதம் ஒரு ‘ஜீபூம்பா’ போட்டுத் தன்னயே மொத்தமா காய்கறிகளா மாத்திக்கிச்சாம்.
“ஆமாம்மா! காய்கறில்லாம் என் உடம்புக்கு நல்லாத் தான் இருக்கு” 
ஒரு குட்டிபூதம் […]
Read Full Post »
Posted in கண்மணிகள், வாழ்க்கை on Dec 30th, 2005
“நாங்க வர்றப்போ தரையெல்லாம் பச்சையா புல் இருந்துச்சு. மரத்துல இலை இருந்துச்சு.
இன்னிக்குக் கிளம்பிப் போனா வெள்ளையா பனி தான் இருக்கும். குளிரும்.
இருந்தாலும் எனக்கு ஜாலி தான்”
இந்தப் பட ஓவியர் நந்திதா. என் மகளே. பெரியவளின் படத்துக்குப் போட்டியாக இவளும் வரைவேன் என்று கிளம்பி MSPaint வழியாய் இப்படி ஒன்றைப் படைத்தது எனக்கும் ஆச்சரியமே. ஆரோக்கியமான போட்டி என்பதை வரவேற்கலாம் தான்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Read Full Post »
Posted in கண்மணிகள், வாழ்க்கை on Jul 1st, 2005
ஒரு நீல வண்ணக் கட்டியை எடுத்து நந்திதா படம் வரைந்திருந்தாள். எலிக்குட்டி நன்றாக இருக்கிறது என்று நல்ல வண்ணப் பேனா ஒன்றைக் கொடுத்து மீண்டும் வரைந்து தருமாறு கூறினேன். மீண்டும் வரைந்த எலியோ உட்கார்ந்து கொண்டது.
“இல்ல நந்து. எனக்கு அதே மாதிரி வேணும்”
இப்போது எலி எழுந்து நின்றது. இருந்தாலும் முதல் எலி மாதிரி இல்லை.
“நந்து. இதுவும் நல்லா இருக்கு. ஆனா எனக்கு இன்னொன்னும் வேணுமே”
இது உங்களுக்கு; இது அம்மாவுக்கு; இது சகோதரிக்கு என்று, கேட்கிறோமே […]
Read Full Post »
Posted in கண்மணிகள் on Jun 15th, 2005
முன்னொரு நாள் ஒரு சுந்தரப்பா(!) தன் அப்பாவின் பாட்டுக்கள் கொண்டு வந்து போட்டிருந்தார். குழந்தைகளுக்கும் தெரிந்த “மல்பரி புஷ்” இசைக்கும் சுட்டியையும் தந்திருந்தார். இங்கொரு அப்பாவும் பெண்களும் அதில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு சுற்றினோம்.
ஒரு பத்தி மட்டுமே பாடினாலும் இப்போது இங்கு இரண்டு பெண்களுக்குத் “துலக்குவோம்” என்கிற தமிழ்ச் சொல் தெரியும். ஒவ்வொரு சொல்லாய்க் கடக்கிறோம்.
இணையத்திற் சுட்ட இந்த மாமரத்தைச் சுட்டினால் பாட்டருவி எம்பிக் கொட்டும் (mp3, 260 KB).
‘வான் டிராப் குடும்பப் பாடகர்கள்’ […]
Read Full Post »