Feed on
Posts
Comments

வருடா வருடம் ஊர் போகத் தான் ஆசை. ஆனால், பல வருடங்களுக்குப் பின் தான் இப்போது செல்லும்படி அமைந்து விட்டது.  பற்பல காரணங்களால். நாளை கிளம்பும் முன் இன்னும் பெட்டி கட்டாமல் இம்முறை அப்படி ஒரு அவசரம், மும்முரம் வேறு. அதனால் ஊர் செல்லுகின்ற தாக்கம் இன்னும் தெரியவில்லை. மும்பை விமான நிலையத்தில் இறங்கும் போது முகத்தில் வந்து மோதப் போகிற இந்தியக் காற்றுத் தான் பரவசத்தை ஏற்படுத்தும் என்று எண்ணுகிறேன். அதன் பிறகு சென்னை வழியாய்ச் சென்று, கடைசிக் கட்டத்தில் இரயில் வழியாய் ஈரோடு போய்ச் சேரும் போது மொத்தமாய் இங்கிருந்து (க்ளீவ்லாண்டு) கிளம்பி 45 மணி நேரம் ஆகியிருக்கும். பிள்ளைகள் ரெண்டும் பெட்டிகள் நான்குமாய் போய்ச் சேர்ந்து ஒரு வாரத்திற்கு எழுந்திருக்க மாட்டோம் என்று எண்ணுகிறேன். சோர்வான பயணமாக இருந்தாலும் சுகமான இலக்கு என்பதால் அலுப்பேதும் தெரியாது.

Continue Reading »

சிறு வயதில் அம்மாயி என்று அழைத்த ஞாபகம் இருக்கிறது. மழை பொய்த்து விவசாயத்திற்குப் பெரு வரவேற்பில்லாத புதுப்பாளையம் கிராமத்தை விட்டு வேறு பிழைப்புத் தேடி அம்மா/அப்பா, மாமா எல்லோரும் ஈரோட்டிற்குக் குடி பெயர்ந்து விட்ட சமயம்.  அம்மாயி அவ்வப்போது ஊரில் இருந்து பலகாரங்களுடன் வந்து போன நாட்கள் புகைப்படலமாய் நினைவில். எனக்கு வயது நான்கோ, ஐந்தோ இருக்கலாம். காலப்போக்கில் அம்மாயி/அப்பச்சியும் ஊர்ப்பிடிப்பைத் தளர்த்திக் கொண்டு ஈரோட்டிற்கு வந்து விட்டனர். அம்மாயியாத்தா சுருங்கி ஆத்தா என்று ஆகிவிட்டது. எதுகையாய்க் கூடவே அப்பச்சியும் (அம்மாவிற்கு அய்யன்) தாத்தா ஆகிவிட்டார்.

அமெரிக்கா வந்த பிறகு ஆறு மாதத்தில் தாத்தா காலமாகி விட, அதன்பிறகு ஊர் சென்ற போதெல்லாம்,  தாத்தா இல்லாது தனித்திருக்கும் ஆத்தாவிடம் அது ஒரு மனக்குறையை, வெறுமையைத் தந்திருப்பதை உணர முடிந்தது. சமீப காலத்தில் ஆத்தாவுக்கும் உடல்நிலையில் சற்றுத் தளர்வு. பல ஆண்டுகளாய் இருக்கும் சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தொலைபேசியில் பேசக் கூட எல்லா நேரங்களிலும் அவர்களால் முடிவதில்லை.

Continue Reading »

யூனிகோடு மற்றும் UTF-8 குறியீட்டு முறைகள் பற்றி எனக்கு இன்னும் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.  கணிணிகளின் பயன்பாட்டுக்கு எப்படி அமெரிக்க ஆஸ்கி முறை ஆங்கில எழுத்துக்களுக்கு உரிய எண்களை அடையாளம் காட்டுகிறதோ, அதுபோல யூனிகோடு உலக மொழிகள் அத்தனையிலும் உள்ள எழுத்து வடிவங்களுக்கும் உரிய ஒரு எண்ணைக் கட்டிச் சேர்த்து வைக்கும் பெரிய அண்ணன். உதாரணத்திற்கு 65 என்றால் ‘A’,  ’97’ என்றால் குட்டி ‘a’ – இது ஆஸ்கி. ஒரு பைட்டுக்கு ஒரு எழுத்து என்று ஆங்கிலத்திற்கு மட்டும் 128 இடங்களுடன் அது போதுமானதாய் இருந்தது. ஏன் மிச்சம் ஒரு பிட் கூட இருந்தது. (இன்னொரு 128 இடங்கள் = விரிவு ஆஸ்கி). ஆனால் எல்லா மொழிகளையும் உள்ளடக்க இது போதுமானதாய் இல்லை. சரி, ஒன்றிற்கு இரண்டு பைட்டுகள் என்று (16 பிட் = 65536 இடங்கள்) எடுத்துக் கொண்டால் இது சாத்தியமாகும் என்று யூனிகோடு முயற்சிகள் ஆரம்பமாயின. இப்போது சில சீன, கொரிய, ஜப்பானிய எழுத்துக்களின் தேவைக்காக 4 பைட் வரை (32 பிட்) எடுத்துக் கொள்ளலாம் என்ற அளவிற்கு வந்திருக்கின்றனர். ஆனால் பெரும்பாலான மொழிகளை இன்னும் இரண்டு பைட்டுக்களுக்குள் அடக்கி விடலாம்.

Continue Reading »

“எல்லாம் கடவுளின் சித்தம்” என்றாராம் ஜெயலலிதா, தீர்ப்பைக் கேட்டவுடன். “எங்கம்மா தப்பே பண்ணலை, சுப்ரீம் கோர்ட்டே சொல்லிருச்சு” என்று கழகத்தவர்கள் குதூகலிக்க ஆரம்பித்துவிட்டனராம். இந்தச் சத்தங்களில், தீர்ப்பின் முக்கியப் புள்ளிகள் மறைந்து தான் போகும். இரைச்சல்களுக்கு நடுவே என்ன இருக்கிறது என்று பார்ப்போம்.

தீர்ப்பு பலர் எதிர்பார்த்தபடி அல்லது ஆசைப்பட்டபடி வராமல் இருந்திருக்கலாம். ஆனாலும் உச்ச நீதி மன்றத்தை நான் மதிக்கிறேன். சுதந்திரமாய்ச் செயல்பட்டு மக்களாட்சிக்கு நமது நாட்டு நீதி மன்றங்கள் உறுதுணையாய் நிற்கின்றன. அது இன்று வந்த டான்சி தீர்ப்பைத் தாண்டியும் நிலைத்து நிற்கும்.

Continue Reading »

எல்லோருக்கும் இருப்பது ஒரே அளவு நேரம் தான்.   இருப்பினும் சிலரால் மட்டும் எப்படி நேரத்தை வெகு சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது? எடுத்த காரியத்தை எண்ணியபடி செவ்வனே செய்ய முடிகிறது?  அந்தக் குழுவில் சேர எனக்கும் விருப்பம் தான் என்றாலும் அதற்கு வேண்டிய தகுதியை நான் இன்னும் பெறவில்லை என்பது தான் உண்மை. இப்போதெல்லாம்  “நேரமே இல்லை” என்கிற சாக்கை நான் பயன்படுத்துவது இல்லை. “நேரத்தை என்னால் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை” என்று வேண்டுமானால் கூறுவது உண்டு.  நேரத்தோடான எனது போட்டியில் நான் எப்போதும் பின் தங்கியே இருப்பது போன்ற ஒரு உணர்வு இருந்தாலும், துவண்டுவிடாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்க நான் முயல்கிறேன். முயற்சிகளில் மட்டும் நான் எப்போதும் தோற்பதில்லை.

Continue Reading »

« Newer Posts - Older Posts »