Posted in தமிழ் on Jan 8th, 2013
இது கொஞ்சம் சிக்கலான தலைப்பு என்பதால் முதலிலேயே கொஞ்சம் ‘தெளிவு’ படுத்தி விடுவது நல்லதெனப் படுகிறது. முதலில், இந்த இடுகைக்கும் பனைமரத்தில் இருந்து இறக்கும் சரக்குக்கும் தொடர்பு கிடையாது. சில நாட்களுக்கு முன்னர் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்’ என்னும் தமிழ்ப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அண்மையில் வந்த ‘பீட்சா’ படம் போன்றே இந்தப் படமும் எங்கள் மகள்களுக்கும் பிடித்திருந்தது. இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகள் தமிழ்ப் படங்களில் வருவது ஆறுதலான ஒன்றாக இருக்கிறது. என்றாலும், இந்த […]
Read Full Post »
Posted in தமிழ் on May 9th, 2012
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தும் முன்தோன்றிய தொன்மை வாய்ந்த ஒரு மொழியும், அம்மொழியின் ஒலிகளும் இரண்டு மூன்றாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் இன்னும் தொடர்ந்து வருவதே தனிச்சிறப்பான ஒன்று தான். தன் இலக்கணக் கட்டமைப்போடும் இலக்கியச் செல்வங்களோடும் தமிழ் செம்மொழி என்று போற்றத் தக்கது தான். அப்பேர்ப்பட்ட ஒரு மொழிக்குச் சொந்தக்காரராய் இருந்து கொண்டு இன்னும் அச்சொத்துக்களில் ஏராளம் அறியாமல் இருக்கின்றோமே என்னும் ஒரு உள்ளக்கிடக்கை அண்மையில் மிகுதியாக உண்டாக ஆரம்பித்திருக்கிறது. அதோடு, தமிழின் மேன்மை தொன்மையில் மட்டுமன்று; அதன் […]
Read Full Post »
Posted in இணையம், கண்மணிகள், சமூகம், தமிழ், வாழ்க்கை on Jan 23rd, 2012
2012இன் தை முதல் வாரத்தின் தமிழ்மணம் நட்சத்திரமாக இருக்க வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கும், அன்புடன் வரவேற்று, படித்து, பின்னூட்டமிட்டும், உரையாடலில் கலந்து கொண்டும், உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி. இவ்வாரம் எழுத எண்ணிய இன்னும் பல இருக்கின்றன. அவற்றை வரும் நாட்களில் தொடர்வேன் என்னும் நம்பிக்கை உண்டு. அன்றாட வாழ்வின் இழுபறிகளுக்குள் ஆர்வப் பணிகளுக்கும் ஆர்வலப் பணிகளுக்கும் நேரச்சிக்கல்கள் எல்லோருக்கும் இருப்பது தான். ஒன்றைக் கவனிக்க மற்றொன்று கவனமற்றுப் போகும் என்றாலும் இயன்றவரை இவற்றில் ஈடுபட்டிருக்க முயலப் போகிறேன். வலைப்பதிவு […]
Read Full Post »
Posted in சமூகம், தமிழ் on Jan 20th, 2012
"ராசாவையன எப்பவும் மனசுல வச்சுக்க", என்பார் என் ஆத்தா. அம்மாவும் கூட ஊருக்குப் போய்விட்டு வரும்போதெல்லாம் அப்படித் தான் சொல்லி அனுப்புவார்கள். கண்ணாக வளர்த்த மகன் எங்கோ காணாத இடத்துக்குப் போகிறானே என்று அவரால் முடிந்த அளவுக்குப் என்னைப் பத்திரப்படுத்த எங்கள் சாமியையும் பொட்டலம் கட்டி உடன் அனுப்பி வைப்பார். ராசாவையன் என்பது எங்கள் குல தெய்வ சாமி. பொதுவாக எங்கள் ஊர்ப் பக்கம் முன்பெல்லாம் குலதெய்வம் சாமியின் பெயர் வருமாறு தான் பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் பெயர் […]
Read Full Post »
Posted in இலக்கியம், சிறுகதை, தமிழ் on Jan 19th, 2012
எங்கிருந்து எப்படிப் போய் ஒரு இசுப்பானியக் கதையைப் பிடித்து, அதன் ஆங்கில வடிவத்தில் இருந்து தமிழாக்கம் செய்திருக்கிறேன் என்பது பற்றிய கதையின் கதையாகக் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது எனக்கு. Espuma y nada más கதையின் மூல வடிவத்தை எழுதிய எர்ணான்டோ டேய்யசு (Hernando Tellez) தென்னமெரிக்காவில் கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர். இலக்கியத்திற்கு நோபல் பரிசு வாங்கிய காப்ரியல் கார்சியா மார்க்குவேசும், இடைகள் பொய் சொல்லாப் பாப்பிசைப் புகழ் சக்கீராவும் கூட இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் தாம் […]
Read Full Post »