Posted in இலக்கியம் on Sep 20th, 2005
கொங்கு மண்ணின் மணம் வீச இனிய நடையில் வரும் இவரது கட்டுரைகளும் பதிவுகளும் பலரையும் கவர்ந்தவை. ஒரு வழக்கறிஞரான இவர் கவிதைகளும் வடிப்பவர் என்பது திண்ணையில் வெளிவந்த ஒரு பொங்கல் கவிதை பார்த்தபோது தான் எனக்குத் தெரிந்தது. மரத்தடி, திண்ணை, திசைகள் உட்பட இணையத்தில் பல இடங்களிலும் வெகு காலமாய் எழுதி வருபவர். ஒரு மேடைப் பேச்சாளருமாக அறியப்படும் கவிஞர் செல்வநாயகியின் முதல்ப் புத்தகம் – பனிப்பொம்மைகள் என்னும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா ஈரோட்டில் […]
Read Full Post »
Posted in இலக்கியம், பொது on Aug 16th, 2005
மொட்டை வெய்யலாய் இருந்தாலும் நடந்தே செல்வது என்று முடிவு செய்தேன். ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து எங்கள் வீடு இருக்கும் (இருந்தவென்றாகப்போகிற) வீரப்பன் சத்திரம் சுமார் ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கும். ஒரு ஆட்டோவில் ஏறிச் சென்றால் ஐந்து நிமிடத்தில் வீட்டில் இருக்கலாம். இருந்தாலும் ஊருக்குத் தனியனாக நான் மட்டும் சென்றதில் கிடைத்த நடைச் சுதந்திரத்தை அனுபவித்தவாறு கிளம்பினேன். அவசரமாய் ஆட்டோவில் அல்லது நகரப் பேருந்தில் சென்றால் எப்படி வேடிக்கை பார்த்துச் செல்வது? அவ்வப்போது […]
Read Full Post »
Posted in இணையம், இலக்கியம் on Jun 10th, 2005
ரேசன் கடைக்குச் சர்க்கரை வாங்கப் போவென்று பணித்த அம்மாவின் குரல்களை மாறுகாதில் விட்டுவிட்டுப் புத்தகங்களும் கையுமாகவே கிடந்த காலங்கள் உண்டு. ஆனால், நல்ல தமிழ்ப்புத்தகங்கள் படித்து நாட்கள் பலவாயிற்று இப்போது. அதனால் புத்தக விளையாட்டு ஆரம்பித்த போது கமுக்கமாய்ச் சத்தம் போடாமல் இருந்து கொள்ளலாம் என்றிருந்தேன். பின்னூட்டம் கூட விடாமல் இருந்து பார்த்தேன். ஆனால் அது நன்றாகப் பற்றிக் கொண்டு பரவும் வேகத்தில் நம்மையும் சூழாமல் விடாது என்று தெரிந்துவிட்டது. அழைப்பு விடுத்த நவன் பகவதிக்கும் பாலாஜி-பாரிக்கும் […]
Read Full Post »
Posted in இலக்கியம், சமூகம் on May 17th, 2004
சுந்தரவடிவேல் எழுதியிருந்த அச்சுத வாய் ரோகம் கவிதை சில காட்டமானஎதிர்வினைகளை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் படித்த போது”நல்ல கவிதை- வித்தியாசமா யோசிக்கிறீங்க” என்று நான் ஒரு வரிக் கருத்து மட்டுமே சொல்லி இருந்தேன். ஆனால், இந்தக் கவிதையில் அவசியமற்றநம்பிக்கைத் தகர்வும் அழகுணர்ச்சியும் (குறைவும்) இருப்பதாய் பத்ரி கருத்துத் தெரிவித்திருந்ததில் மீண்டும் சென்று கவிதையையும், கவிஞரின் மறுமொழியையும் படித்தேன். எனது விரிவானகருத்துக்கள் கீழே. “நல்ல கவிதை. வித்தியாசமா யோசிக்கிறீங்க” என்று முதலில் கூறியதை மாற்றமின்றிஇன்னும் சொல்வேன். சற்றே கொச்சையாய் இருந்த […]
Read Full Post »
Posted in இலக்கியம் on Apr 8th, 2004
தங்கமணியின் நீண்ட விளக்கத்திற்கு நன்றி. ஒரு வகையில் அவரின்இந்த விளக்கத்தை எழுதத் தூண்டியதற்காக நான் மகிழ்ந்து கொள்கிறேன். காரணம், மழைநாள் குறிப்பைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் முதலில் நான்பாதி கூட வெற்றி பெறவில்லை என்பதை தெளிவாகச் சொல்லி விட்டது அவரது விளக்கம். இதைப்படித்தவுடன், “வாவ்” என்று ஒரு வியப்பு வந்து என்மீது உட்கார்ந்து கொண்டது. மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன். விரிவாய் எழுத வேண்டும் என்று எண்ணினேன். (தாமதமாகி விட்டது- வரி அறிக்கை தயார் செய்ய வேண்டியிருந்தது). இப்போது […]
Read Full Post »