கவிஞர் செல்வநாயகியின் பனிப்பொம்மைகள்
Sep 20th, 2005 by இரா. செல்வராசு
கொங்கு மண்ணின் மணம் வீச இனிய நடையில் வரும் இவரது கட்டுரைகளும் பதிவுகளும் பலரையும் கவர்ந்தவை. ஒரு வழக்கறிஞரான இவர் கவிதைகளும் வடிப்பவர் என்பது திண்ணையில் வெளிவந்த ஒரு பொங்கல் கவிதை பார்த்தபோது தான் எனக்குத் தெரிந்தது. மரத்தடி, திண்ணை, திசைகள் உட்பட இணையத்தில் பல இடங்களிலும் வெகு காலமாய் எழுதி வருபவர். ஒரு மேடைப் பேச்சாளருமாக அறியப்படும் கவிஞர் செல்வநாயகியின் முதல்ப் புத்தகம் – பனிப்பொம்மைகள் என்னும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா ஈரோட்டில் இன்று நடைபெறுகிறது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், சம்பத் நகரில் உள்ள கொங்கு கலையரங்கத்தின் சக்தி மசாலா அரங்கத்தில், இன்று (21 செப் 2005) மாலை ஆறு மணிக்குக் விழா தொடங்கும். தலைமை தாங்கி நடத்திக் கொடுப்பவர் மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன். இவர் சமீபத்தில் சிறப்பாக நடைபெற்ற ஈரோட்டுப் புத்தகக் கண்காட்சியையும் ஒருங்கிணைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பற்றியும் புத்தகக் கண்காட்சி அமைப்பு பற்றியும் சில குறிப்புக்களைப் பத்ரியின் பதிவில் காணலாம்.
பனிப்பொம்மைகள் கவிதை நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்ற இருப்பவர் சாகித்ய அகாடமி விருது பெற்ற முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம். முதல் பிரதியைப் பெற்று வாழ்த்துரை ஆற்றுபவர் இன்னொரு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தமிழ்நாடன். வாழ்த்துரை வழங்கும் பிறர்: கவிஞர் மரபின் மைந்தன் ம. முத்தையா, ஆசிரியர், ‘நமது நம்பிக்கை’ மாத இதழ், கோவை, மற்றும் பேராசிரியர் செ.சு.பழனிசாமி, கோபி.
இறுதியாக ஏற்புரை ஏற்றுப் பேசும் செல்வநாயகியின் மேடைப் பேச்சை இரண்டாவது முறையாகத் தவற விடப் போகிறேன். வார இறுதியையொட்டி விழா அமைந்திருந்தால் வழக்கம் போல் ரயிலேறி ஊர் சென்றிருப்பேன். சரியாகப் புதன்கிழமையாக அமைந்துவிட்ட காரணத்தால் தூரத்தில் இருந்து ஒரு வாழ்த்தை மட்டும் அனுப்புகிறேன். அடுத்த வாரம் ஊர் விட்டு ‘மேக்காலவூருக்குத்’ திரும்பும் அவருக்கு இன்னொரு வார இறுதி கிடைப்பது சாத்தியமல்ல தான்.
உங்கள் எழுத்துலகப் பயணம் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் செல்வநாயகி!
செல்வநாயகிக்கு வாழ்த்துகள்!
நல்ல செய்தி சொல்லி இருக்கீஙக் செல்வராஜ். நன்றி!
செல்வநாயகி, இங்கேயும் ஒரு வாழ்த்து சொல்லிர்ரேன். 😉
-மதி
செல்வநாயகியின் கவிதைகள் படித்ததில்லை;
கட்டுரைகள் மிகவும் பிடித்தவை.
அவருக்கு வாழ்த்துகள்!!
செல்வநாயகிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இயல்பான நடையில் மனதை நெகிழ வைத்த அவரின் பதிவுகள் மீண்டும் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
தகவலுக்கும், சுட்டிகளுக்கும் நன்றி செல்வராஜ்.
வாழ்த்துக்கள் செல்வநாயகி.
(நன்றி செல்வராஜ்)
செல்வநாயகிக்கு வாழ்த்துகள்!
வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் !! மேக்காலவூருக்குத் திரும்பி, மேலும் எழுதுவதைப் படிக்க ஆவலுடன், ஜெகதீஸ்.