உதிர்ந்த பூக்களும் இறந்த தவளைகளும்
Posted in இலக்கியம் on Apr 1st, 2004
தங்கமணியின் எழுத்து எனக்குப் பிடித்திருக்கிறது. ஒரு கவித்துவம் கலந்த தனியான நடையில் அமைந்த அவரின் எழுத்துக்கள் கண்முன்னே காட்சிகளை இதமாக விரிப்பது அருமையான ஒன்று. எல்லோரும் பார்க்கிற காட்சியை அவர் மட்டும் இன்னும் அகலக் கண் விரித்துப் பார்க்கிறாரோ ? வாழ்க்கையை மனதுள் வாங்கி அங்கே அனுபவமாய் மாற்றுகிற நேரத்தில் வாழ்க்கை ஆறாகப் போய்க் கொண்டே இருக்கிறது. அதனால் அனுபவத்தைச் சேகரிக்காமல், அதை எழுத்தாக்குவது பற்றி எண்ணாமல், வாழ்க்கையை வாழ்க்கையாகப் பாருங்கள் என்று சொல்கிறார் இவர் (என்று […]