இரா. செல்வராசு

விரிவெளித் தடங்கள்

இரா. செல்வராசு header image 4

இராகிக்களியும் ‘இராசுபெரி பை’யும்

January 6th, 2019 · Comments Off on இராகிக்களியும் ‘இராசுபெரி பை’யும்

பேச்சுத்தமிழில் ‘சுத்தியும் முத்தியும் பாத்தேன்’ என்று சொல்வதை எழுத்தில் எப்படிக் காட்டுவது என்னும் சிக்கல் எழுந்தது எனக்கு. வேறொன்றுமில்லை. புத்தாண்டை முறித்துக் கொண்டு தயங்கியே வந்த முதற்சனிக்கிழமை. என்ன செய்யலாம் என்று ‘சுற்றும் முற்றும்’ (சரிதானா?) பார்த்தேன். பல மாதங்களுக்கு முன்னர் வாங்கி வந்த இராகிமாவு கொஞ்சம் கண்ணில் பட்டது. ஆரோக்கியவாழ்வுக்கு அரிசியைக் குறைக்கச் சொல்கிறார்களே என்று இன்று இராகிக்களி செய்துவிடுவோம் என்று இறங்கிவிட்டேன். இணையத்தில் ஒரு கண்ணம்மாவிடம் -kannammacooks- ஆலோசனை கேட்டுவிட்டுச் செய்து பார்த்தேன். ஆனால் […]

[Read more →]

Tags: கண்மணிகள் · பொது

அமெரிக்காவின் ஒரு பெருந்தவறு

May 19th, 2018 · Comments Off on அமெரிக்காவின் ஒரு பெருந்தவறு

நேற்றுக் காலை ஒரு அலுவ இடைவெளியில் தேநீர் கொள்ளச் சென்றபோது அவர் பதற்றமாய்த் தன் பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தார். சக ஊழியர். “எப்படி இருக்கீங்க”, வழக்கமான முகமன் உரைத்தேன். முகத்தில் கவலையைப் பார்க்க முடிந்தது.  “என் மகளோடு பேச முடியுமாவெனப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பள்ளியில் இருந்து குறுஞ்செய்தி வந்தது. பூட்டுநிலை அறிவிச்சிருக்காங்கலாம். துப்பாக்கியோடு ஒரு ஆள் அந்தப் பகுதியில் சுத்திக்கிட்டிருக்காராம்”. “அப்படியா? அப்ப எனக்கும் வந்திருக்கணுமே”, என்று அவசரமாய் எனது பேசியை எடுத்துப் பார்த்தேன். அவரது மகள் […]

[Read more →]

Tags: சமூகம்

தமிழ்த்தாய் வாழ்த்தும்

January 26th, 2018 · 3 Comments

ஒரு விசயேந்திரர்(ன்) எழுந்து நிற்கவில்லை என்பதால் தமிழ்த்தாய்க்கு ஓர் இழுக்கும் இல்லை. தமிழின் சிறப்புக்கும் செழுமைக்கும் ஒரு பங்கமும் இல்லை. சிறுமைப்பட்டுப் போனதென்னவோ சின்னவர், காஞ்சியின் மடத்தலைவர் தான். நிற்காத காரணமாய் முன்னும் பின்னும் முரணாய்க் கருத்துகளை வெளியிடுவதில் இருந்தே தவறு செய்துவிட்ட அவர்களின் தடுமாற்றம் தெரிகிறது. ஆனாலும் அதனை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும், வருத்தம் தெரிவிக்கவும் அவர்களின் அகந்தை இடந்தராது. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டும் என்பது  வெளிப்படையான  சட்டமில்லை தான். ஆனால், அதுவே பொது […]

[Read more →]

Tags: சமூகம் · தமிழ்

வைரமுத்து காட்டும் ஆண்டாளும் தமிழ்ச்சமூக எதிர்வினையும்

January 18th, 2018 · 15 Comments

கோதை நாச்சியார் ஆண்டாள் குறித்துக் கவிஞர் வைரமுத்து எழுதியதன்பால் எழுந்த சர்ச்சை என்னைப்பொருத்தவரை அவசியமில்லாதது. ஆனால், இப்படியொரு சர்ச்சை எழுந்த காரணத்தால் தான் இந்தக் கட்டுரையை நான் படிக்க நேர்ந்தது. அதோடு, ஆண்டாள், ஆழ்வார், திருப்பாவை, நாச்சியார் திருமொழி எனப் பலதும் பற்றி மேலும் அறிந்துகொள்ள முடிந்தது. ஆண்டாளை அவதூறாகப் பேசிவிட்டார் என்று அடிக்கும் தலைக்குமாய்க் குதிக்கும் பலர் அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பதைப் படித்தும்கூடப் பார்த்திருக்கமாட்டார் என்பது தான் சோகம். அப்படியே படிக்க முனைந்திருந்தாலும் அது […]

[Read more →]

Tags: இலக்கியம் · சமூகம்

ஒற்றைக் குரல்

January 21st, 2017 · Comments Off on ஒற்றைக் குரல்

ஒபாமாவை  ஒரு நல்ல பேச்சாளராக எண்ணியிருக்கிறேன். ஆனால், அவர் ஒரு நல்ல கதை சொல்லியும் கூட என்பதை இப்போது உணர்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க அதிபராக எட்டாண்டுகள் முடிந்து இன்று ஆட்சியில் இருந்து கீழிறங்கிச் செல்கிறார். சில நாட்களுக்கு முன்னர் வலையில் சுற்றிக்கொண்டிருந்த பழைய காணொளி ஒன்றைக் காண நேர்ந்தது.  இல்லரி கிளிண்டனுக்காக வாக்குக் கேட்கும் கூட்டமொன்றில், தான் முதன்முதலில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கதையைச் சுவைபடக் கூறுகிறார். Fired up? Ready to go! என்னும் […]

[Read more →]

Tags: சமூகம்