Posted in பயணங்கள் on Dec 28th, 2005
“…நாளைக்கு எல்லாக் கோயில்களையும் வெட்டி விடலாம்” என்றேன்.
விரைந்து செல்லும் வண்டியின் பின்னாலோ பக்கவாட்டிலோ கீழே தரையைப் பார்த்திருந்தீர்களானால், நேர் கீழே உள்ள சாலை ஒரு அவசரகதியில் ஓடிப்போவதைப் பார்த்திருக்கலாம். சற்றே எட்டிப் பின்னே பார்வையைச் செலுத்தினால் ஓடுகிற சாலையின் வேகம் கொஞ்சம் மிதமாவதையும், இன்னும் சற்றே தள்ளி ஒரு சடத்துவ நிலையை அடைவதையும் அவதானிக்கலாம். ஒரு பெரும் சமுத்திரத்தை ஓடிச் சென்றடையும் நதியைப் போல. ஆனால் சாலையோட்டத்தின் இந்த வித்தியாசங்களோ நம் பார்வையில் மட்டும் தான். இருந்து […]
Read Full Post »
Posted in பயணங்கள் on Dec 8th, 2005
…”காலையில ஏழு மணிக்குக் கிளம்பிவிடலாம்” என்று…
பெருசுகள் ஆறும் குஞ்சு குளுவான் நான்குமாக மைசூரில் இருந்து மங்களூர் நோக்கிக் கிளம்பிய பயணத்தில், ஒரு குவாலிஸ் வண்டியின் பின்னிருக்கையில் அடைந்து கொண்டு கவனித்துக் கொண்டிருந்தேன். கிளம்பும்போது மணி ஒன்பதைத் தாண்டி இருந்தது. மூக்கின் நுனியில் சில முத்துக்கள் வியர்த்திருந்த என் சின்ன மகள், பின்னோக்கி நிலை குத்திய பார்வையில் ஏதோ கனாக் கண்டு கொண்டிருந்தாள். சில தினங்களுக்கு முன் தான் ஐந்து வயதாகி விட்டதன் பூரிப்பும் பெருமிதமும் நிறைந்திருந்தாள். இந்த […]
Read Full Post »
Posted in பயணங்கள் on Dec 5th, 2005
… கொட்டிக் கொண்டிருந்த மழையினூடே இன்னும் கொஞ்சம் குண்டுகுழியில் குலுங்கிக் கொண்டு மைசூர் நோக்கித் தொடர்ந்தோம்.
மைசூர் சாமுண்டீஸ்வரிக்கும் எனக்கும் முன்பின் அறிமுகம் இல்லை. இப்போது தான் சந்திக்கிறேன் என்றாலும் குறுகிய காலத்திற்குள் நான்கு முறை அவரைச் சந்தித்து விட்டதற்கு அவர் மீது என் நண்பர் ஒருவர் வைத்திருக்கும் அதீத அன்பு தான் காரணம். மைசூர் மகாராஜாவுக்கு அடுத்து மகிஷாசுர மர்த்தினி இவருக்குத் தான் குடும்பத் தெய்வமாக இருப்பார் போலிருக்கிறது! “எனக்கு இங்க வரதுக்கு ரொம்பப் புடிக்கும்” என்று […]
Read Full Post »
Posted in பயணங்கள், வாழ்க்கை on Nov 29th, 2005
ஒரு தட்டுக் கோழிப் பிரியாணி ஓட்டல் சரோவரில் ஐம்பத்தெட்டு ரூவாய். முக்குக் கடையில் வாங்கிய வாடிலால் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஐந்து ரூவாய். தண்ணீர் என்று நினைத்துத் தெரியாமல் வாங்கிய கின்லீ பாட்டில் சோடா பன்னிரண்டு ரூவாய். தள்ளுவண்டிப் பெரியவரிடம் புரியாத மொழியில் பேரம் பேசி வாங்கிய மூன்று பச்சை நிற வாழைப்பழங்கள் ஐந்து ரூவாய். இருட்டைக் கிழிக்க முயன்று தோற்று விகசித்துப் போன தெருவிளக்கொளியில் மாடு கன்றுகளோடு வித்தியாசம் பாராமல் திரிந்து கொண்டிருக்கும் தாராப்பூர்-பொய்சர் மக்களூடே நடந்து […]
Read Full Post »
Posted in பயணங்கள் on Oct 27th, 2005
கிழிந்த வாழையிலை ஒட்டிக் கொண்டிருந்த தண்டெடுத்து மண்டபத்துக் குரங்கை ஒருவர் துரத்தியதை வேடிக்கை பார்த்தபடி பண்ணாரியம்மன் கோயில் வரிசையில் நின்று கொண்டிருந்தேன். அர்ச்சனைக்கு நட்சத்திரம் என்னவென்று கேட்ட அர்ச்சகரிடம் என்னுடையதும் மனைவியினதும் நினைவு இருந்து கூறிவிட்டாலும் மகள்களது நட்சத்திரம் சரியாக நினைவில்லாததால், நானும் மனைவியும் ஒத்தையா இரட்டையா என்று குத்துமதிப்பிட்டுச் சொன்ன நட்சத்திரங்களைக் கூட வந்த நண்பரே கூட ஏற்றுக் கொள்ளவில்லை. ‘பெயர் மட்டும் போதும் நாமக’ என்று ஏதோ சொல்லிக் கொண்டார் அர்ச்சகர்.
ஈரோட்டில் இருந்து […]
Read Full Post »