Feed on
Posts
Comments

Category Archive for 'பயணங்கள்'

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வாசம் உண்டு. அது, வாழுகின்ற மண்ணின் வாசமா, கண்ணிற்படுகிற காட்சிகளின் தொகுப்பா, காட்சிமாந்தர் எழுப்பும் ஒலிக்கோவையா, நாவூறக்கிட்டும் தனிப்பட்ட சுவையா, அல்லது இவையெல்லாம் கலந்த ஏதோ ஒரு உணர்வா? திருநெல்வேலியின் பாளையங்கோட்டையாக இருந்தாலும் சரி, ஈரோடு, கோபிச்செட்டிபாளையம் என்று நகரம் பேரூர் சிற்றூர் கிராமம் எதுவானாலும் சரி, சிறு பொழுதேனும் தன்நிலை மறந்து திளைக்க வைக்கிற வாசம் எல்லா ஊருக்கும் உண்டு. குடிக்கிற தண்ணீருக்கு அலைந்தவனாகவோ கொளுத்துகிற வெய்யலின் சூடு தாங்காமல் வாளிநீரினுள் […]

Read Full Post »

…அன்றிலிருந்து சுமார் ஆறு வருடம் கழித்து அமெரிக்காவில் மீண்டும் ஒரு விதை துளிர்க்கும் வரை… அமெரிக்காவின் நடுமேற்கு மாநிலங்களில் ஒன்றான கென்டக்கியின் இரு பெரும் நகரங்கள் லூயிவில் மற்றும் லெக்சிங்டன் என்பவை. இவற்றினிடையே தூரம் சுமார் எண்பது மைல் இருக்கும். மாநிலத்தின் இரு பெரும் நகரங்கள் என்பது மட்டுமல்ல, இவை இரண்டு மட்டும் தான் ஓரளவாவது பெரு நகரங்கள் என்று சொல்ல முடியும். இரண்டிற்குமிடையே இருக்கும் ‘ஃபிராங்க்போர்ட்’ என்னும் சிற்றூரே இதன் தலைநகர். வளம்மிக்க ‘நீலப்புல் மண்டலம்’ […]

Read Full Post »

…விட மனமில்லாமல் மறுநாள் பாண்டி மறுபடியும் எங்களை அழைத்துக் கொண்டது. பாரதியும் பாரதிதாசனும் சில காலமேனும் வாழ்ந்த புதுச்சேரி, பிரெஞ்சிலே எழுத்துப் பிழையால் பாண்டிச்சேரி ஆகியிருக்கிறது. இன்னொரு முறை மொத்தக் குழுவோடும் நகருள் செல்ல முடிவு செய்து போகும் வழியிலே ‘ஆரோவில்’ என்னும் சர்வதேச நகருள்ளும் சென்றோம். அரவிந்தர் ஆசிரமத்தோடு நெருங்கிய தொடர்புடைய இந்த நகரம் சற்று வித்தியாசமாய் இருந்தது. என்னவோ ஒரு பரிசோதனை முயற்சியாக நிர்மாணிக்கப்பட்டு, பல வெளிநாட்டினர் வந்து வசிக்கும் இடமாக இருக்கிறது. மத்தியிலே […]

Read Full Post »

…எங்களின் வருகைக்காகக் காத்திருக்கின்றன பாண்டிக்குச் செல்லும் சாலைகள். நடைமுறையில் முடியாதது என்றோ, செயல்படுத்தச் சிரமமானது என்றோ, எப்படிச் செய்வது என்ற திகைப்பைத் தருவதாகவோ இருக்கிற மலையான சில காரியங்களைக் கூடச் சிலசமயம் மனசுக்குள் தூவி விடுகிற ஒரு சின்ன விதை சிறுகச் சிறுகத் துளைத்துச் சட்டென ஒரு இனிய பொழுதில் செயலாக்கிவிடும். எண்ணங்களில் விதைக்கப்படும் சின்ன விதைகளுக்கும் சக்தி உண்டு என்று வாழ்வை உற்று நோக்கும் எவருக்கும் புலப்படும். சென்னை-பாண்டிச்சேரிப் பயணத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று […]

Read Full Post »

உயிருமில்லை உணர்வுமில்லையே தவிர, சில சமயம் உற்ற தோழமையைத் தந்துவிடும் மிதிவண்டிகளைப் பற்றிய கதைகள் என்று ஆரம்பித்தால் ஏராளம் எழுதலாம். கைத்தண்டின் உயரம் இருக்கையிலேயே குரங்குப் ‘பெடல்’ முறையாய் ஓட்ட ஆரம்பித்துக் கூடவே வளர்ந்த அவை, வாழ்வின் முக்கிய கட்டங்களுக்கு அமைதியான சாட்சிகளாக அமைந்திருக்கின்றன. வளர்பருவத்திலே நினைத்த போது எடுத்துக் கொண்டு சுற்ற முடியும் தளையறு நிலையை அளித்திருக்கின்றன. முன் தண்டிலோ பின்னிருக்கையிலோ, சமயங்களில் இரண்டிலுமோ சுமந்து நட்புக்களை வளர்த்திருக்கின்றன. நட்போடு கூடிக் குலாவியிருக்கையில் பிணக்கேதுமின்றிப் பொறுமையாய் […]

Read Full Post »

« Prev - Next »