Feed on
Posts
Comments

Category Archive for 'தமிழ்'

ஆஸ்டின் பல்கலைக் கழகத்தில் எனக்கு எந்தவித வேலையும் இருக்கவில்லை. ஆனால், சமீபத்திய ஒன்றரை நாள் ஆஸ்டின் பயணத்தின் போது கிடைத்த ஒரு மூன்று மணி நேர இடைவெளியில் அந்தப் பல்கலைக்கழகத்தை நோக்கி நான் சென்று கொண்டிருந்ததன் பின்னணியில் எனது மனவிருப்பம் ஒன்று காரணமாய் இருந்தது. அங்குள்ள ஒரு நூலகத்தில் அருந்தமிழைப் பார்க்க முடியும் என்னும் ஒரு சாத்தியத்தின் பேரில் ஏற்பட்ட ஒரு ஆவல் தான் அது.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு அமெரிக்கக் கல்லூரி ஒன்றின் நூலகம் வழியாகத் […]

Read Full Post »

வலைப்பூ ஆசிரியர் வாரப் பதவிக்கு அழைப்பு வருகிறது என்று தெரிந்ததில் இருந்து ஒரு பக்கம் தயக்கம். மறு பக்கம் உற்சாகம். இது எழுத்துலகில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கும் பலரும் வந்த இடம், வந்து போகும் இடம். சில சமயம் ஒரு வம்பு மடம். “நானும் இலக்கிய உலகில் எனது மூலையும்” என்று ஏதோ நான் பாட்டுக்கு ஒரு ஓரமாய் விளையாடிக் கொண்டிருக்க, இப்போது “மேடைக்கு வா மகனே” என்று கூட்டம் சேர்ந்து வேடிக்கை பார்ப்பது மாதிரி […]

Read Full Post »

வலையில் வலம் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று எனக்கு உரைத்தது. கம்ப்யூட்டரின் தமிழ்ப்பதத்தை நான் கணிணிஎன்று தான் இத்தனை நாட்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் பலர் அதனைக் கணினிஎன்று ஈற்றெழுத்தை இரண்டு சுழியாக்கி இருந்தார்கள். எதுசரி? எங்கிருந்து எப்போது ஏன் நான் மூன்று சுழி’ணி’ யைப் பாவித்து வருகிறேன்? தெரியவில்லை. ஒரு சின்னத் தேடல் ஆய்வு செய்வோம் என்று கூகிளில் சென்று இரண்டு வடிவத்தையும் உள்ளிட்டுத் தேடினேன். ஆகா, இதுதான் யூனிகோட்டின் சுகம். இரண்டு வடிவங்களும் பயன்பாட்டில் இருந்தாலும் பெரும்பாலும் […]

Read Full Post »

மீண்டும் வரலாற்றுப் பாதையில் ஒரு சிறு பயணம். இது கணிணியில் தமிழ் வந்த வழி பற்றிய ஒரு பயனர் பார்வை. இன்று கணிணிகளில் பரவலாகிக் கொண்டிருக்கிற தமிழ் வடிவங்கள் பற்றி முன்னர் எழுதி இருந்தேன். ஆரம்ப நாட்களில் தமிழைக் கணிணிகளில் காணவும் உள்ளிடவும் மக்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் பட்ட பாடுகளையும் திசைகளின் ஆரம்ப இதழில் ஒரு பிரசவ வலிக்கு ஒப்பிட்டிருந்தார் கண்ணன்.  என்னுடைய பங்கு ஒரு பயனர் என்கிற அளவில் அவர்கள் பெற்றுத் தந்த குழந்தையோடு கொஞ்சி விளையாடுவது […]

Read Full Post »

« Prev