Posted in சமூகம் on Jul 8th, 2006
“நூற்றாண்டுகளின் காயத்தழும்புகளைத் துடைத்தெறிய, ‘இதோ, இனி நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்; என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; விரும்பும் தலைவரை ஏற்கலாம்’ என்று வெறும் வாயில் சொல்லிவிட்டுச் சென்று விட முடியாது. ஆண்டாண்டு காலமாகச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட ஒருவனை விடுவித்துப் பந்தயத்தின் ஆரம்பக் கோட்டில் கொண்டு வந்து போட்டுவிட்டு, ‘நீ பிறரோடு போட்டியிட இனித் தளையில்லை…போ!’ என்று சென்றுவிடமுடியாது. அப்படிச் சொல்லிவிட்டுப் பின்னும் முழு நயன்மையுடன் நடந்துகொண்டதாக நாமே நம்பிக்கொள்ள முடியாது. பொது (சிவில்) உரிமைக்கான போராட்டத்தில் இது […]
Read Full Post »
Posted in சமூகம் on Jun 11th, 2006
ஈழத்துச் சகோதரங்களின் இன்னல்களுக்கு என்று தான் விடிவு காலமோ தெரியவில்லை. ஒரு கரிசனத்தோடு முன்னாண்டுகளின் நிகழ்வுகளைக் கவனித்து வந்திருந்தாலும் ஓரத்தில் மௌனமாகவே இருந்திருக்கிறேன். இருப்பினும் மனிதம் தொலைந்த இந்த மூர்க்கத்தைக் கண்டபின்னும் மௌனமாகத் தாண்டிச் செல்ல முடியவில்லை. இப்பாதகச் செயலைச் செய்தவர்க்கு என் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சொந்தச் சகோதரர் இப்படி இன்னலுறும்போது வருந்தி, ஆனால் செய்வதறியாது திகைத்துப் போய் இயலாமையோடு உள்ளுக்குள்ளே துடிக்கும் ஈழத்து நண்பர்களுக்கும் என் ஆறுதலைச் சொல்லிக் கொள்கிறேன். வங்காலையில் வன்கொலை செய்யப்பட்ட […]
Read Full Post »
Posted in சமூகம் on Oct 25th, 2005
நீதித்துறையின் நேர்மை, நடுநிலை, உயர்ந்த குறிக்கோள்களில் நம்பிக்கை வைக்க எனக்கு ஒரு அவசியம் இருக்கிறது. குமுகாயத்திலே சந்திக்கின்ற அநியாயங்களை முறையிட்டு நியாயம் பெற இருக்கும் கடைசி அமைப்பு என்கிற ஆறுதலைத் தரவல்லது. அதை நாட வேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லையெனினும், விருப்பு வெறுப்பின்றியும் பாகுபாடுகள் இன்றியும் நீதி ஒன்றே குறிக்கோளாய் இருந்து ஒரு பாதுகாப்புணர்வைத் தரவல்லது. அது வளையாத செங்கோல் போலிருக்க வேண்டும் என்னும் ஆசை இருந்தாலும் இறுதியில் மிஞ்சுவது என்னவோ ஏமாற்றம் தான். வழக்கறிஞராக இருக்கும் […]
Read Full Post »
Posted in சமூகம் on Jun 16th, 2005
அமெரிக்காவில் நேற்று முன் தினம் (ஜூன் 14) கொடிநாள். அமெரிக்கக் கொடிக்கு நீண்ட வரலாறு உண்டு. தற்போது நீலம், சிவப்பு, மற்றும் வெள்ளை ஆகிய மூன்று நிறங்கள். ஐம்பது மாநிலங்களைக் குறிக்கும் நட்சத்திரங்களும், ஆரம்ப மாநிலங்களைக் குறிக்கப் பட்டைகளுமாய் இருக்கிற கொடி அதன் காலத்தில் பலமுறை மாறுதலுக்கு உள்ளாகி இருக்கிறது. பல வீர உரைகளும், பாட்டுக்களும், இதன் மீது அமைக்கப் பட்டிருக்கின்றன. பொதுவாய் அமெரிக்கர்கள் கொடியின் மீது விசுவாசமாகவும், மரியாதை உடையவர்களாகவும் இருப்பதைக் காணலாம். ஒரு பற்றுணர்ச்சியோடு […]
Read Full Post »
Posted in சமூகம், பொது on Apr 19th, 2005
வாடகை வீடுகளிலேயே வாழ்ந்து வந்த பெரும்பான்மை இந்தியர்கள் சமீப ஆண்டுகளில் சொந்தமாய் வீடு கட்டிக் கொள்வது அதிகமாயிருக்கிறது. வரும் ஆண்டுகளிலும் இந்த வளர்ச்சியின் வேகம் குறையப் போவதில்லை என்று ஆய்வுகளும் புள்ளியல் கணக்குகளும் தெரிவிக்கின்றன. சொந்த வீடு வாங்குவோரின் எண்ணிக்கை வருடத்திற்குச் சுமார் 30 முதல் 40 விழுக்காடு வரை அதிகரிக்க வாய்ப்புக்கள் இருக்கின்றன என்று இவை அனுமானிக்கின்றன. இந்த வளர்ச்சிக்குப் பல காரணங்கள். பொருள் நிலையில் மேம்பட்டுக் கொண்டிருக்கிற நடுத்தர வருக்கத்தினர், குறைந்த வட்டி விகிதத்தில் […]
Read Full Post »