தீவாளியும் துளசியும் ஆரம்பித்து வைத்துக் கடந்த சில நாட்களாகச் சுந்தரும் வெங்கட்டும் ஈடுபட்டிருக்கும் விவாதம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. துளசியைத் தெய்வமாக்கும் கலாச்சார ஆதிக்கம் மேற்குடியில் இருந்து பரவுகிறது. அர்த்தம் புரியாமலே அறியாமையின் காரணத்தால் பிற குடிகள் அவற்றை ஏற்றுக் கொள்கின்றன. அதனால் தமக்கென ஒரு கலாச்சார அடையாளமின்றித் தொலைந்து போகின்றன என்கிறார் சுந்தர். இதையே மேற்குடியாக்கம், சமஸ்கிருதமயமாக்கம் என்றும் எடுத்துக் கொள்ளலாம் என்று தங்கமணி கருத்துச் சொல்லி இருக்கிறார். இவற்றில் எல்லாம் உண்மை இல்லாமல் இல்லை. […]
Category Archive for 'சமூகம்'
சில வாரங்களுக்கு முன் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் பலவற்றைப் பற்றி பத்ரி ஒரு நல்ல கட்டுரை எழுதி இருந்தார். முறைசாரா நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், சீட்டு, பைனான்ஸ் நிறுவனங்கள் முதலிய பல நிறுவனங்களைத் தொட்டுச் சென்றிருந்தார். ஒரு சீட்டு நிறுவன நிர்வாகத்தில் சில காலம் சிறு பங்காற்றி இருக்கிற அனுபவத்தில் அவற்றில் சிலவற்றைப் பற்றி என்னுடைய சில கருத்துக்கள். குறிப்பாகச் சீட்டு, பைனான்ஸ், கந்து நிறுவனங்கள் பற்றி. சமீப ஆண்டுகளில் சில சீட்டுக் கம்பெனிகள், பைனான்ஸ் நிறுவனங்கள் […]
சுந்தரவடிவேல் எழுதியிருந்த அச்சுத வாய் ரோகம் கவிதை சில காட்டமானஎதிர்வினைகளை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் படித்த போது”நல்ல கவிதை- வித்தியாசமா யோசிக்கிறீங்க” என்று நான் ஒரு வரிக் கருத்து மட்டுமே சொல்லி இருந்தேன். ஆனால், இந்தக் கவிதையில் அவசியமற்றநம்பிக்கைத் தகர்வும் அழகுணர்ச்சியும் (குறைவும்) இருப்பதாய் பத்ரி கருத்துத் தெரிவித்திருந்ததில் மீண்டும் சென்று கவிதையையும், கவிஞரின் மறுமொழியையும் படித்தேன். எனது விரிவானகருத்துக்கள் கீழே. “நல்ல கவிதை. வித்தியாசமா யோசிக்கிறீங்க” என்று முதலில் கூறியதை மாற்றமின்றிஇன்னும் சொல்வேன். சற்றே கொச்சையாய் இருந்த […]
நேர்மையும் நீதியும்
Posted in சமூகம் on Jan 31st, 2004
சிறு வயது முதல் முடிந்தவரை நேர்மையாய் இருக்க நான் முயற்சி செய்து வந்தது உண்டு. கால ஓட்டத்தில் அந்த முயற்சிக்குச் சவால்கள் ஏற்பட்ட போது சில இடங்களில் வழுக்கி இருக்கலாம். ஆனாலும் இயன்றவரை இன்னும் அந்த முயற்சியில் தவறுவதில்லை. இதற்காக “idealist”, “பொழைக்கத் தெரியாதவன்” என்று பட்டங்கள் பல கிட்டியிருக்கின்றன. “யதார்த்தமாய் இரு”, “நீ மட்டும் இப்படி இருந்து என்ன கிழிக்கப் போகிறாய்?” என்று அறிவுரைகளுக்கும் குறைவே இருந்ததில்லை. ரேஷன் அட்டையில் வீட்டில் இருக்கிற நபர்களுக்குத் தகுந்த […]
“எல்லாம் கடவுளின் சித்தம்” என்றாராம் ஜெயலலிதா, தீர்ப்பைக் கேட்டவுடன். “எங்கம்மா தப்பே பண்ணலை, சுப்ரீம் கோர்ட்டே சொல்லிருச்சு” என்று கழகத்தவர்கள் குதூகலிக்க ஆரம்பித்துவிட்டனராம். இந்தச் சத்தங்களில், தீர்ப்பின் முக்கியப் புள்ளிகள் மறைந்து தான் போகும். இரைச்சல்களுக்கு நடுவே என்ன இருக்கிறது என்று பார்ப்போம். தீர்ப்பு பலர் எதிர்பார்த்தபடி அல்லது ஆசைப்பட்டபடி வராமல் இருந்திருக்கலாம். ஆனாலும் உச்ச நீதி மன்றத்தை நான் மதிக்கிறேன். சுதந்திரமாய்ச் செயல்பட்டு மக்களாட்சிக்கு நமது நாட்டு நீதி மன்றங்கள் உறுதுணையாய் நிற்கின்றன. அது இன்று […]