Feed on
Posts
Comments

Category Archive for 'பொது'

பெங்களூர்ல நாலஞ்சு நாளா மழையில்லை. நல்லா வெய்யலடிக்குது.
சென்னையில தான் புயல்/மழை வருதுன்னு சொல்றாங்களே

ஓவியர் நிவேதிதா, என் மகள். அறி|புனை அருளிடம் சிஷ்யையாகச் சேர்த்து விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்.

Read Full Post »

அதென்னவோ இந்த வருடம் “பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்” என்று பாடுவதற்கேற்றாற் போல் பெங்களூரில் மழை பெய்யோ பெய் என்று பெய்கிறது. தொப்பலாக நனைந்த துணியை உலர்வதற்குள் மீண்டும் மீண்டும் எடுத்து நீரினுள் முக்கியெடுத்துக் காயப்போடுவது போல் இருக்கிறது ஊர். ஐந்து வருடமாய்க் காணாத மழையெல்லாம் இந்த ஐந்தாறு வாரங்களில் கண்டதில் இந்தப் பகுதியில் இருக்கிற அணைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. அதில் வருடாந்திரக் காவிரிப் பிரச்சினையொட்டிய அரசியற் காட்சிகள் அதிகமாய் அரங்கேற வாய்ப்பில்லை.

சின்ன வயதில் ‘தெய்வத் திருமணங்கள்’ […]

Read Full Post »

ஓ! தயவு செய்து மும்பை விமான நிலையம் பற்றி மட்டும் ஆரம்பித்து வைத்து விடாதீர்கள். ‘இந்தியாவின் நுழைவாயில்’ என்று இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் நாட்டின் பெயரையே கெடுத்துக் கொண்டிருக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. வெளிநாட்டில் இருந்து வருகிற இந்தியர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டினரும் கூட முதன் முதலில் காலடி எடுத்து வைக்கிற அந்த முதல்க் கணங்களிலே தானே ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் உலகமயமாக்கலும், தட்டையாகும் உலகும், கணித்திறன் மற்றும் மாறுகரைப்பணிகளும் இந்தப் பக்கமாய்த் திரும்பிக் […]

Read Full Post »

மொட்டை வெய்யலாய் இருந்தாலும் நடந்தே செல்வது என்று முடிவு செய்தேன். ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து எங்கள் வீடு இருக்கும் (இருந்தவென்றாகப்போகிற) வீரப்பன் சத்திரம் சுமார் ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கும். ஒரு ஆட்டோவில் ஏறிச் சென்றால் ஐந்து நிமிடத்தில் வீட்டில் இருக்கலாம். இருந்தாலும் ஊருக்குத் தனியனாக நான் மட்டும் சென்றதில் கிடைத்த நடைச் சுதந்திரத்தை அனுபவித்தவாறு கிளம்பினேன். அவசரமாய் ஆட்டோவில் அல்லது நகரப் பேருந்தில் சென்றால் எப்படி வேடிக்கை பார்த்துச் செல்வது? அவ்வப்போது […]

Read Full Post »

ஊர்ப்பக்கம் போயிருந்தபோது கிராமம் ஒன்றின் சாலையில் மாடுகளைக் கூட்டிக் கொண்டு ரெண்டு பேர் போய்க்கொண்டிருந்தார்கள். சந்தைக்குப் போனவையா வாங்கி வரப்பட்டவையா தெரியவில்லை. வயதாகியிருந்தது. நின்று கொண்டிருந்த இடத்தைத் தாண்டிப் போயின.
சிறிது நேரம் கழித்துக் கார் அவர்களைத் தாண்டிப் போன போது ஒரு மர நிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தார்கள் மாடுகளை ஓட்டிச் சென்றவர்கள். மாடுகளும் ஆசுவாசமாய் நின்று கொண்டிருந்தன. சலுப்பும் ஓய்வும் மாடுகளுக்கும் உண்டு. ஓட்டிகளுக்கும் உண்டு.
இன்னும் எத்தனை தூரமோ?

Read Full Post »

« Prev - Next »