Feed on
Posts
Comments

Monthly Archive for February, 2005

இரண்டு வார மும்முரமான வேலைகளுக்குப் பிறகு ஓய்வான ஒரு வெள்ளி மாலை. கிடைத்த சில மணி நேரத்தில் பொது நூலகத்தில் கொஞ்சம் தமிழ்மணம் பிடித்துக் கொண்டேன். அவசரமாய்ப் படித்த சிலவற்றில் பிடித்தது பெயரிலியின் புனைவு ஒன்று. கழியும் பழையது புதினத்தை ரசித்துப் படித்தேன். இன்னும் 3 நிமிடத்தில் இந்த நூலகக் கணிணி துரத்தி விட்டுவிடும். நாளை காலை கிளம்பி ஊர் நோக்கிப் பயணம். bmi என்கிற விமான நிறுவனம் bmi-baby என்றும் சில குறும்பயண விமானங்களை ஓட்டுகிறது […]

Read Full Post »

தார்ச்சாலைகளும், அதிவேகம் செல்லும் கார்களும், ஊர்மத்தியில் பல வங்கிகளும் கடைகளும் இருப்பதால் ஃப்ரொட்ஷம்மைச் சிறு நகர் என்று சொல்லிவிட்டேன். ஆனால் இங்கிருப்போர் இதனை ஒரு கிராமம் என்று தான் வழங்குகிறார்கள். கிராமம் என்பதன் இலக்கணத்தை ஒரு இந்தியக் கிராமத்தை வைத்துப் பார்ப்பதால் உண்டாகும் விளைவு இது. நகர்ப்புறத்தில் இருக்கும் வசதிகள் பெரும்பாலும் கிடைக்கும், ஆனால் அளவில் சிறியதாய் ஒரு ஊர் – இது தான் இங்கே கிராமம். நகர்ப்புறத்து வசதிகளை கிராமப்புறங்களில் வழங்கும் புறத்திட்டு ஒன்றை (PURA?) […]

Read Full Post »

விமான நிலையத்தில் எங்கள் நிறுவனப் பெயர்ப்பலகை தாங்கிய ஒருவரைச் சந்தித்து அவருடன் அங்கிருந்து வெளியேறியதைத் தவிர மான்செஸ்டரில் வேறு எங்கும் செல்லவில்லை, எதையும் பார்க்கவில்லை என்பதால் இதை மான்செஸ்டர் பயணம் என்று சொல்வது பொருத்தம் இல்லை தான். இருந்தாலும் இங்கிலாந்து நாட்டில் முதன் முறையாக உள்நுழைவது இந்த நகரின் வழியாகவே என்பதாலும், வந்திருக்கும் இடத்திற்கு அருகிருக்கும் பெருநகரம் இதுவே என்பதாலும் இது மான்செஸ்டர்ப் பயணமாகிறது. லேசாக மழை துளிர்த்துக் கிடந்தது. ஞாயிறு காலை என்பதாலாக இருக்க வேண்டும் […]

Read Full Post »

‘கரும்பொன்’ என்று சொல்வார்கள். தங்கத்தைப் போல நிலத்தடி எண்ணெய் அவ்வளவு விலைமதிப்பு மிக்கதாய் அமைந்து விட்டது. உலகின் சக்தித் தேவைகளில் சுமார் 40 சதவீதத்தைக் கச்சா எண்ணெயே தீர்த்து வைக்கிறது. இன்றைய உலகப் பொருளாதாரத்தின் ஆணிவேராய் அமைந்திருப்பதும் இந்த எண்ணெய் வளமே என்றாலும் மிகையாகாது. சுமார் 90 சதவீதப் போக்குவரத்துக்குக் கச்சா எண்ணெயே ஏதோ ஒரு வகையில் காரணமாய் இருக்கிறது. பல பொருட்களுக்கும் வளங்களுக்கும் அடிப்படையாய் அமைந்திருப்பது கச்சா எண்ணெய் தான். ஏன், இன்றைய மத்தியக் கிழக்குப் […]

Read Full Post »