Posted in தமிழ் on Jan 15th, 2005
சிக்கல் மாண்ட்ரீஸர் கையெழுத்துத் தமிழ் பற்றி முக்கியமான கேள்விகளையும் கருத்துக்களையும் எழுப்பி இருக்கிறார். ஆங்கில ஒலியியல் வழியாய்த் தமிழில் தட்டச்சு செய்வது (புதிதாகத் தமிழ் கற்றுக் கொள்பவர்களது) மொழிவளத்தைக் குறைக்குமா? கையெழுத்துத் தமிழே கற்றுக் கொள்வது அவசியந்தானா? தமிழ்நாட்டிலேயே வளரும் இந்தத் தலைமுறையினர் கணினி வழியாகவேனும் தமிழ் கற்றுக் கொள்ளவேண்டும் என்று நினைப்பதா? புதிதாய் எழுதப் பழகுபவர்கள் ஆங்கில ஒலிவடிவத்தின்படி எ-கலப்பை மூலம் எழுதுவது குறையாகவே இருக்கும் என்று தான் எனக்கும் தோன்றுகிறது. அப்படிப் பழகும் போது […]
Read Full Post »
Posted in இணையம், தமிழ் on Dec 29th, 2004
Blog என்ற சொல்லிற்குச் சரியான தமிழாக்கம் என்னவென்று வெங்கட் கேள்வி எழுப்பி இருக்கிறார். வலைப்பூ கவித்துவமாய் இருக்கிறதே என்றாலும் நுட்பத்தைச் சரியாகக் குறிக்காமல் இருக்கிற காரணத்தால் அது வேண்டாம் என்னும் கருத்தோடு நானும் உடன்படுகிறேன். மற்ற இரு சொற்களான வலைப்பதிவு, வலைக்குறிப்பு இரண்டும் சரியே. நானும் இது நாள் வரை மாற்றி மாற்றி இரண்டையும் பாவித்து வந்திருக்கிறேன். என்னுடைய முதல் பதிவிலும் இது பற்றி எழுதி இருக்கிறேன். ஆனால், இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டுமெனில், வலைப்பதிவே […]
Read Full Post »
Posted in தமிழ், பயணங்கள், பொது on Nov 14th, 2004
ஆஸ்டின் பல்கலைக் கழகத்தில் எனக்கு எந்தவித வேலையும் இருக்கவில்லை. ஆனால், சமீபத்திய ஒன்றரை நாள் ஆஸ்டின் பயணத்தின் போது கிடைத்த ஒரு மூன்று மணி நேர இடைவெளியில் அந்தப் பல்கலைக்கழகத்தை நோக்கி நான் சென்று கொண்டிருந்ததன் பின்னணியில் எனது மனவிருப்பம் ஒன்று காரணமாய் இருந்தது. அங்குள்ள ஒரு நூலகத்தில் அருந்தமிழைப் பார்க்க முடியும் என்னும் ஒரு சாத்தியத்தின் பேரில் ஏற்பட்ட ஒரு ஆவல் தான் அது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு அமெரிக்கக் கல்லூரி ஒன்றின் நூலகம் […]
Read Full Post »
Posted in தமிழ், பொது on Mar 14th, 2004
வலைப்பூ ஆசிரியர் வாரப் பதவிக்கு அழைப்பு வருகிறது என்று தெரிந்ததில் இருந்து ஒரு பக்கம் தயக்கம். மறு பக்கம் உற்சாகம். இது எழுத்துலகில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கும் பலரும் வந்த இடம், வந்து போகும் இடம். சில சமயம் ஒரு வம்பு மடம். “நானும் இலக்கிய உலகில் எனது மூலையும்” என்று ஏதோ நான் பாட்டுக்கு ஒரு ஓரமாய் விளையாடிக் கொண்டிருக்க, இப்போது “மேடைக்கு வா மகனே” என்று கூட்டம் சேர்ந்து வேடிக்கை பார்ப்பது மாதிரி […]
Read Full Post »
Posted in தமிழ் on Mar 3rd, 2004
வலையில் வலம் வந்து கொண்டிருந்தபோது திடீரென்று எனக்கு உரைத்தது. கம்ப்யூட்டரின் தமிழ்ப்பதத்தை நான் கணிணிஎன்று தான் இத்தனை நாட்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் பலர் அதனைக் கணினிஎன்று ஈற்றெழுத்தை இரண்டு சுழியாக்கி இருந்தார்கள். எதுசரி? எங்கிருந்து எப்போது ஏன் நான் மூன்று சுழி’ணி’ யைப் பாவித்து வருகிறேன்? தெரியவில்லை. ஒரு சின்னத் தேடல் ஆய்வு செய்வோம் என்று கூகிளில் சென்று இரண்டு வடிவத்தையும் உள்ளிட்டுத் தேடினேன். ஆகா, இதுதான் யூனிகோட்டின் சுகம். இரண்டு வடிவங்களும் பயன்பாட்டில் இருந்தாலும் பெரும்பாலும் […]
Read Full Post »