வட்டச்சுருள் தொட்டுத் தொடரும் உயிர்
Jul 13th, 2016 by இரா. செல்வராசு
தமிழில் உயிரெழுத்துகள் எல்லாம் ஒரு வட்டச்சுருளில் தொடங்குவதன் சிறப்பை முகநூலில் குறித்திருந்தார் கவிஞர் மகுடேசுவரன்.
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
எல்லா எழுத்துகளையும் அந்த வட்டச்சுருளில் தொடங்கித்தான் எழுதுகிறோம் என்பதில் ஏதேனும் ஒரு செய்தியும் இருக்கலாம் என்பது சுவையான ஒரு தகவல்.
நிற்க. இதிலே ஈகாரம் மட்டும் வேறுபட்டு இருக்கிறதே என்றால், முன்னர் இதனையும் இகரம் போன்றே எழுதி மேலே சுழித்துவிட்டு ஈகாரமாக்கி எழுதும் வழக்கம் இருந்தது என்று குறிப்பிட்டு அதனைக் கைப்படம் இட்டும் காட்டியிருந்தார்.
இதைப் படித்தவுடன் முன்னர் இணைய மேய்ச்சலில் ஒருமுறை இதனைக் கண்ட நினைவு வந்தது. இன்று அதனைத் தேடிப் போனதில், 1842-ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட “பெயரகராதி” – A manual Dictionary of the Tamil language; publ. by the Jaffna-book society என்னும் நூலில் இந்த வடிவம் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பிடிக்க முடிந்தது.
இதில் சுவையான இன்னொரு விசயம் என்னவென்றால் இதிலேயே தற்போதைய ஈகார வடிவமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தான் (சிவப்பு வட்டத்தினுள் காண்க).
தற்கால ஈகார வடிவமும் பழகிப்போன ஒன்றென்பதால் அதனை மாற்ற அவசியமில்லை. பழைய முறையில் எழுதினால் படிக்கத் தடுமாற்றமாக இருக்கும் என்றும் நினைத்தேன். ஆனால் மேலுள்ள அகராதியின் ஈகாரங்கொண்ட சொற்களைப் படிப்பதில் எந்தத் தடங்கலும் உண்டாகவில்லை என்பதும் ஆச்சரியமளிக்கிறது. வரலாற்றுப் பூர்வமாக இவ்வெழுத்து (மட்டும்) எதனால் எப்போது இவ்வடிவம் பெற்றது என்பதை அறிந்துகொள்வதும் பயனுள்ளதாக இருக்கும்.
அருமை