“அப்பா, எனக்கு மூணு வரம் கெடச்சா நான் என்ன கேப்பேன்னு உங்களுக்குத் தெரியுமா?”, சிறு நடையாய்க் கடையொன்றுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புகையில் ஒரு கதையொன்றைச் சொல்லிமுடித்த என்னிடம் நிவேதிதா கேட்டாள்.
“என்ன கேப்பே? சொல்லுமா”
* * * *
இன்றைய என் கதை அப்படியொன்றும் சுவாரசியமாய் இருக்கவில்லை. மனம் வடிவானவள் வாடியிருந்த நாளொன்றில் கண்ணிலே இரண்டு சொட்டுவிட்டு அழுத கணம் நினைவில் வந்தது. ‘நீங்க இப்போ கதையெல்லாம் சொல்லுரதேயில்ல’ என்ற குற்றச்சாட்டு ‘என் கதையையும் விரும்பிக் கேட்கிறாளே’ என்று […]
Category Archive for 'கண்மணிகள்'
“அப்பா…”, குரல் கேட்டுத் திரும்பினேன். “திடீர்னு ஒருநாள் நான் செத்துப் போயிட்டா, என்னோட பொருள்லாம் என்னப்பா பண்ணுவீங்க?”, எப்போதும் போன்ற சாதாரண நாளொன்றின் மாலைப்பொழுதில் நிவேதிதாவிடம் இருந்து வந்த கேள்வி கேட்டுத் துணுக்குற்றுப் போனேன்.
“என்னம்மா, என்ன சொல்றே?”
“சும்மா ஒரு பேச்சுக்குப்பா. ஒரு உதாரணத்துக்கு நம்ம கார் ஒரு மரத்து மேல மோதி விபத்து நடந்துடுச்சுனா… அதுல நான் செத்துப் போயிட்டா, என் கிட்ட இருக்குற பொருள் எல்லாம் என்ன பண்ணுவீங்க?”
மரணத்தை இவர்களிடம் இருந்து மறைத்து […]
பிள்ளைக் கணிதம்
Posted in கண்மணிகள் on Mar 27th, 2007
“அப்பா… இன்னிக்கு நான் ஒண்ணு கண்டு பிடிச்சிருக்கேன்…”
“என்னம்மா?”
“பன்னண்டுக்குள்ள வரிசையா மூணு நம்பர் எடுத்துக்குங்க”
“ம்ம்… 10, 11, 12…”
“அதுல நடுவுல இருக்கற நம்பர அதனாலயே பெருக்குனா வர விடையில ஒண்ணு கழிச்சீங்கன்னா, முதல் நம்பரையும் மூணாவது நம்பரையும் பெருக்குனா வர்ற விடைக்குச் சமமாயிடும்”
“எப்படி எப்படி… 11*11=121; 121-1=120; 120=10*12… அட! ஆமாம்!”
“இப்படி எந்த மூணு எண்ண எடுத்தாலும் வரும்”
“பரவாயில்லயே… எப்படிடா இதக் கண்டு பிடிச்சே?”
“அப்படியே யோசிச்சுப் பாத்துட்டு இருப்பேன்ல… அப்போ தான் இதக் கண்டுபிடிச்சேன். அன்னிக்குக் கூட ஏழும் […]
ததிங்கிணத் தித்தோம்
Posted in கண்மணிகள் on Sep 22nd, 2006
‘புதையல் வேட்டை’ என்று சில சமயம் நிவேதிதா எங்களுக்கு சவால் விடுப்பதுண்டு. இன்னும் சிலசமயம் சங்கேத மொழியில் ஏதேனும் எழுதிக் கண்டுபிடிக்கச் சொல்வதுண்டு. சுவாரசியமாகவும் சிலசமயம் சவாலாகவும் சிலசமயம் வியப்பாகவும் இருக்கிறது.
“எங்கிருந்துடா இதெல்லாம் கத்துக்கற?”
“நான் நிறைய மிஸ்டரி புக்ஸ் படிப்பேன் அப்பா!”
பலசமயம் சில துப்புக்கள் கொடுத்து வேலையை இலகுவாக்குவாள். கீழிருப்பது என்னவோ கிழக்கு ஐரோப்பிய மொழி போன்று என்னை நன்கு விழிக்க (முழிக்க ) வைத்துவிட்டது.
ஊஹும் தலைகீழாக […]
காரணமறியாச் சில மகிழ்தருணங்கள்
Posted in கண்மணிகள் on Sep 20th, 2006
“ஏனோ எந்தக் காரணமும் இன்றி நான் இன்று மகிழ்வாக உணர்கிறேன் அப்பா”, என்றாள் நந்திதா, ஆங்கிலத்தில். (Somehow, for no reason, I feel very happy today appaa!). சின்னவளின் இந்தச் சந்தோஷத்திற்கு என்ன காரணம் என்று எனக்கும் புரியவில்லை. பெரியவள் நிவேதிதா இதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் தன்பாட்டுக்குப் பல்துலக்கிக் கொண்டிருந்தாள். ஆறு மணிக்குக் கடிகாரச் சத்தம் வைத்துத் தாமாக எழுந்து ஆர்வத்துடன் அவர்கள் நாளைத் தொடங்குவதே ஒரு நிறைவான விஷயம்.
பின்னிரவின் இணைய […]
