அனைவருக்கும் சனவரிப் புத்தாண்டு வாழ்த்துகள். சனவரி ஒன்றின் இப்புத்தாண்டை ஆங்கிலப் புத்தாண்டு என்று நானும் முன்பு சொன்னதுண்டு. ஆனால் முகப்புத்தகத்தில் முகநூலில் பேரா. செல்வா இது ஆங்கில உலகம் மட்டும் கொண்டாடும் புத்தாண்டு அன்று என்றும் உலகின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுவது என்பதால் வேண்டுமானால் கிரிகோரியன் புத்தாண்டு என்று சொல்லலாம் என்றும் கருத்துச் சொல்லியிருக்கவே பொதுவாய்ச் சனவரிப் புத்தாண்டு என்று குறித்து வைப்போமே என்று தான் அப்படிக் குறிப்பிட்டுவிட்டேன். ஃபேஸ்புக் (பேசுபுக்கு) தளத்தை ஒரு வணிகப் […]
Tag Archive 'புத்தாண்டு'
தொடர்மானம்
Posted in வாழ்க்கை on Jan 1st, 2009
“புத்தாண்டுக்கு என்ன தீர்மானம் பண்ணியிருக்கீங்க?” என்று சிலர் கேட்டார்கள். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள். “அந்த மாதிரில்லாம் தீர்மானம் பண்றதில்லைன்னு தீர்மானம் பண்ணியிருக்கேன்”, என்று அவர்களிடம் விளையாட்டாகச் சொன்னது கூடப் பழையதாகத் தெரிகிறது, இப்போதெல்லாம். தொடரோட்டத்தின் இடையே சில கணப்பொழுதுகளில், இருப்பு இருத்தல் குறித்த கேள்விகளும் அங்கங்கே சிலவற்றிற்கு அர்த்தம் தேடிக் களைப்பதும் திகைப்பதும் விடுப்பதுமாக நகருகின்ற நாட்களுக்கிடையே, புத்தாண்டு என்று ஒரு நாளில் மட்டும் சில தீர்மானங்களைச் செய்து கொள்வதென்பது, எனக்கு, இப்போது, சற்றே பொருள் குறைந்ததாகப் படுகிறது. […]