"ராசாவையன எப்பவும் மனசுல வச்சுக்க", என்பார் என் ஆத்தா. அம்மாவும் கூட ஊருக்குப் போய்விட்டு வரும்போதெல்லாம் அப்படித் தான் சொல்லி அனுப்புவார்கள். கண்ணாக வளர்த்த மகன் எங்கோ காணாத இடத்துக்குப் போகிறானே என்று அவரால் முடிந்த அளவுக்குப் என்னைப் பத்திரப்படுத்த எங்கள் சாமியையும் பொட்டலம் கட்டி உடன் அனுப்பி வைப்பார். ராசாவையன் என்பது எங்கள் குல தெய்வ சாமி. பொதுவாக எங்கள் ஊர்ப் பக்கம் முன்பெல்லாம் குலதெய்வம் சாமியின் பெயர் வருமாறு தான் பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் பெயர் […]
Category Archive for 'சமூகம்'
“எங்கங்க? நாம தமிழ்ல பேசினாலும் அவன் இங்கிலீசுல தாங்க பதில் சொல்றான்” — என்று சொல்லி அவர்கள் இன்னொரு மொழி கற்க இருக்கும் சிறந்த வாய்ப்பை பாழாக்காதீர்கள். உங்கள் குழந்தைகளை தமிழ்(ழில்) பேச வைப்பது உங்கள் கடமை” என்று ஒரு நண்பர் மடலில் எழுதியிருந்தார். இந்தத் தடுமாற்றமும் குற்றுணர்ச்சியும் எனக்கும் உண்டு. மூன்று வயது வரை அழகாகத் தமிழ் பேசிய குழந்தை வெளியுலகம் செல்லத் தொடங்கியபோது அயல் சூழலுக்கு அவளுடைய மொழி பலியாவதைப் பார்த்துக் கொண்டு ஆவண […]
ஏழரைச் சனியனுக்குப் பரிகாரம் செய்யத் திருநள்ளாறு போக வேண்டும் என்று சோதிடர் சொன்னதன் காரணத்தால் சிறுவயதில் பல ஊர்களுக்கு ஒரு பயணமாகச் சுற்றுலா சென்று வந்திருக்கிறேன். அதோடு விட்டுவிடவில்லை சோதிடர். வாரா வாரம் வெள்ளிக் கிழமை மாரியம்மனுக்கு விளக்கேற்ற எண்ணெய் கொண்டு போகவேண்டுமென்றும் யோசனையொன்றைச் சொல்லி வைத்தார். சோதிடத்தின் மேல் நம்பிக்கை இருந்ததோ இல்லையோ, அந்தச் சோதிடர் மீது ஒரு பிடிப்பு இருக்கத்தான் செய்தது என்பதாலும், வீட்டினரின் வேண்டுகோளுக்கு இணங்கியும் இரண்டங்குல உயரச் சின்னத் தூக்குப்போசியை மிதிவண்டிக் […]
அமேரிக்காத் தேரு பாருடா
Posted in சமூகம் on Oct 20th, 2008
“நீங்க கேக்கற கேள்விக்கெல்லாம் என்னால பதில் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. நான் அமெரிக்க மக்கள்கிட்ட நேராவே பேசிக்கிறேன்”ன்னு துணைத்தலைவர் போட்டியாளர் சேரா பேலின் விவாதத்துல சொன்ன மாதிரி, பாஸ்டன் பாலாகிட்ட அவர் கேட்ட கேள்விக்குப் பதில் ஒண்ணும் சொல்லாம இருந்தேன். அப்படியே இருந்திருந்தா சத்தமில்லாம இருந்திருக்கும். ஆனாலும், அமெரிக்க அதிபர் தேர்தலப் பத்தி (கூட்டுப் பதிவுன்னாலும்) பா.பாலா தனியாளா நல்லா பதிவிட்டுக்கிட்டு இருக்கிறார். (அதுக்கு ஒரு பாராட்டச் சொல்லிக்கிறேன்). அப்படியான சுவாரசியமான இடுகைகள விடாமப் படிச்சுக்கிட்டு, ஒரு […]
“அம்மா, அப்பா, உங்க கிட்ட நான் ரொம்ப முக்கியமான ஒரு விசயம் சொல்லணும்”, உறங்கச் செல்லும் முன் மகள் வந்து தீவிர முகத்துடன் சொன்னாள். நிமிர்ந்து பார்த்தோம். ஒரு பெருமிதமும் பொறுப்புணர்ச்சியும் அவள் முகத்தில் பொங்கி வழியக் கண்டு ஆர்வம் பொங்க, “என்னடா?” என்றோம். “எனக்குத் தெரியும், நீங்க மேலறையில் இருந்து வந்து அஞ்சு நிமிசம் தான் ஆச்சுன்னு. இருந்தாலும், நீங்க உபயோகிக்காதப்போ கொஞ்சம் விளக்கை எல்லாம் அணைச்சுட்டு வந்தீங்கன்னா மின்சாரம் எல்லாம் வீணாகாது பாருங்க!” என்று […]