மூ.எ.சு
Nov 18th, 2003 by இரா. செல்வராசு
கடந்த சில வருடங்களாக ஆங்கிலத்தில் தொழில்நுட்பச் சமாச்சாரங்கள் பலவற்றை மூன்று எழுத்துச் சுருக்கங்கள் (மூ.எ.சு) வரும்படி பெயர் வைத்து வழங்குவது பிரபலமாகி வருகிறது. உதாரணத்திற்கு OLE, COM, OPC, CPU, FTP, GNU, URL, URI, OOP, FAQ… இப்படிப் பல. இவ்வாறு பெயர் வைப்பதைக் குறிப்பிட (சந்தேகமே வேண்டாம்) TLA என்று இன்னொரு மூன்றெழுத்துப் பெயர் – Three Letter Acronym !
ஆங்கிலத்தில் சுமார் 17, 576 மூ.எ.சு. பெயர்கள் சாத்தியமாம் (26^3). 700க்கும் மேற்பட்ட தொழில்நுட்பப் பெயர்களை இந்த அகராதி தொகுத்துத் தருகிறது. வட்டத்தை இன்னும் கொஞ்சம் பெரிதாக்கினால், எல்லாச் சாத்தியங்களும் உலகத்தின் எந்த மூலையிலாவது ஏதோ ஒன்றிற்காகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று சில வேலையற்றவர்கள் தொகுத்து வைத்திருக்கிறார்கள் !! ஆகா… “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்” என்று பாடத் தோன்றுகிறதா ?
சரி… திடீரென்று என்ன இந்தப் பக்கம் என்று பார்க்கிறீர்களா ? புதிய பதிவுகளின் தொகுப்பு பற்றிக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தேன். வழியில் எங்கு பார்த்தாலும் ஒரே மூ.எ.சு வகையறா. RSS, RDF, RSD, XML-RPC, API… இப்படி. அதிலும் இந்த RSSன் கதை தான் அசத்தல். சுருக்கப் பெயர் வைத்தாயிற்று. ஆனால் விரிவான பெயர் என்ன என்று தான் ஒவ்வொருத்தர் ஒன்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றுள் சில: Rich Site Syndication, RDF Site Summary, Really Simple Syndication… பற்றாததற்கு version 0.90க்குப் பிறகு இரண்டு பிரிவுகள் பிரிந்து 0.91, 0.92, 0.93 என்று ஒரு பிரிவினரும், 1.0, 2.0 என்று இரண்டாவது பிரிவினரும் வளர்த்துக் (?) கொண்டு இருக்கிறார்கள் !!
இவையெல்லாம் ஒருபுறம் கிடக்க, RSS, ascii encoding முறையைக் கொண்டிருப்பதால், நமது போன்ற தமிழ் வலைப்பதிவுகளுக்குப் பெரிதாக உதவாது. இதனாலும், இன்ன பிற பிரச்சினைகளாலும் வேறு ஒரு specification உருவாக்க முனைந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ளவர்கள் Atom API பற்றி வேண்டுமானால் படித்துப் பாருங்கள். எதிர்காலம் அங்கு தான் போய்க் கொண்டிருப்பது போல் தெரிகிறது.
I’m not sure if you are aware of this. We Indians are, or atleast the media, is obsessed with acronyms.
ஆமாம் பரி, இந்தியர்கள் பச்சை அட்டையை GC என்றுதான் சொல்லுகிறார்கள் 🙁